Rasi palan : இன்றைய ராசி பலன் – 22-01-2019

12-rasi-thirumanam
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர் கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வருகையால் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப் படும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

கன்னி:
Kanni Rasi

காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள், இன்று சற்று பொறுமையுடன் நடந்துகொள்வது சிரமத்தைக் குறைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் வெளிநாடுகளில் இருந்து சுபச் செய்தி வரும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

விருச்சிகம்:
virichigam

இன்று மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

தனுசு:
Dhanusu Rasi

தெய்வ அனுக்கிரகத்தால் காரியங்கள் அனுகூலமாக முடியும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பூராடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. சிலருக்குக் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்..

மீனம்:
meenam

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -