Rasi palan : இன்றைய ராசி பலன் – 24-01-2019

12-rasi-thirumanam
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்:
Rishabam Rasi

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால், விற்பனை அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாய மும் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும்.

கடகம்:
Kadagam Rasi

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

கன்னி:
Kanni Rasi

வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். உத்திரம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சிறு தடை ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், எளிதாகச் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:
meenam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். சிலரால் மனதில் சிறு வருத்தமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -