Rasi palan : இன்றைய ராசி பலன் – 25-01-2019

12-rasi-thirumanam
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

ரிஷபம்:
Rishabam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

சகோதரர் களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

உற்சாகமான நாள். தெய்வ அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி:
Kanni Rasi

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுப்பீர்கள். அது சாதகமாகவே முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். அனுஷம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது அவசியம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர் களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மீனம்:
meenam

மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -