ரவை என்றாலே கிச்சடி மட்டும்தானா? இந்த கட்லெட்டை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

rava-cutlet

ரவையை வைத்து கிச்சடி, ரவா தோசை, ரவா இட்லி இப்படி தான் நாம் செய்திருப்போம். ஆனால் ரவையை கட்லெட் போல செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். வித்தியாசமான முறையில் இந்த கட்லெட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா?

ravai

ரவை கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1/2 கப், ரவை – 1/2 கப், வேக வைக்காத உருளைக்கிழங்கு பெரியது – 1 துருவிக் கொள்ளவேண்டும், உப்பு – தேவையான அளவு, சீரகத்தூள் – 1 ஸ்பூன், கரம்மசாலா – 1 ஸ்பூன், சோடா உப்பு – 1/4 ஸ்பூன், எலுமிச்சை பழ சாறு – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 – பொடியாக நறுக்கியது,  மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை – பொடியாக நறுக்கியது. வெங்காயம் 1 – பொடியாக நறுக்கியது. தக்காளி – 1 பொடியாக நறுக்கியது.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவையும், ரவையையும், உருளைக்கிழங்கு துருவலையும் ஒன்றாக சேர்த்து,  பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு, சீரகத்தூள், கரம் மசாலா, சோடா உப்பு, எலுமிச்சை பழச்சாறு, பொடியாக வெட்டிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது, வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும். கரைத்த மாவை 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

mavu

15 நிமிடங்கள் மாவு ஊறிய பின்பு, கொஞ்சம் கெட்டி பதத்திற்கு வரும். அதில் கால் கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இதை ஆவியில் வேகவைக்க வேண்டும். இட்லி பாத்திரத்தில், இட்லி வேக வைக்கும் அளவிற்கு தண்ணீர் வைத்து அதில் ஒரு, கலவடை வைத்து, அகலமான தட்டில், நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மாவை, மொத்தமாக ஊற்றி, 15 நிமிடங்கள் வரை, ஆவியில் வேக வைத்தால் போதும். இடியாப்பம் வேக வைப்பது போல. அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். அகலமான பாத்திரத்தில், இந்த கலவையை ஊற்றுவதற்கு முன்பாக, அந்தப் பாத்திரத்தில், நன்றாக எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்த கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் எடுக்க முடியும்.

- Advertisement -

ஆவியில் வெந்த பின்பு, அந்த கட்லெட்டை நன்றாக ஆற வைக்க வேண்டும். அதன்பின் அந்த பாத்திரத்தின் எல்லா ஓரங்களிலும், கத்தியை விட்டு, கட்லெட்டை நீக்கிவிட்டு, தட்டை கவிழ்த்து ஒரு தட்டு தட்டினீர்கள் என்றால், வட்ட வடிவத்தில் நீங்கள் தயார் செய்த கட்லட் தயாராகி அழகாக வெளியே வந்து விடும். அதை கேக் வெட்டுவது போல முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேறு எந்த வடிவத்தில் வேண்டுமென்றாலும் வெட்டிக் கொள்ளலாம். அது உங்கள் இஷ்டம் தான்.

fraying-pan

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அல்லது ஃபிரயிங் பேன் இருந்தாலும் பரவாயில்லை. 5 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அதன் பின்பு வெட்டிய துண்டுகளை வறுத்து எடுக்க வேண்டியதுதான். கட்லெட் மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டாம். எல்லா பக்கங்களும் சிவக்கும் அளவிற்கு, கட்லெட்டை இரண்டு பக்கங்களிலும் திருப்பிப்போட்டு, எடுத்தீர்கள் என்றால் சுவையான ரவை கட்லெட் தயார். (மொத்தமாக எல்லா பீஸ் களையும் போட்டு கிளறி விடக்கூடாது. ஒவ்வொன்றாக முன்னும், பின்னுமாக திருப்பி சிவக்க விட்டு பக்குவமாக எடுக்க வேண்டும்.)ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமே வராது. தொட்டதெல்லாம் வீண் விரயம் ஆகாமல் இருக்க உச்சரிக்க வேண்டிய வரிகள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to Make Rava Cutlet. Rava cutlet. Rava cutlet in Tamil. Rava cutlet recipe. Rava cutlet recipe in Tamil.