குலாப்ஜாமுன் செய்ய இன்னுமா கடையிலிருந்து மாவு வாங்கிட்டு இருக்கீங்க! 1 கப் ரவை, 10 நிமிடம் சூப்பரான குலோப் ஜாமுன் தயார்.

rava-gulabjamun

எப்ப பாத்தாலும் குலாப் ஜாமுன் செய்ய கடையிலிருந்து மாவு வாங்கி  வந்து தானே குலோப் ஜாமுன் செய்வோம். ஆனால், கொஞ்சம் சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சூப்பரான குலாப் ஜாமுன் செய்துவிட முடியும். கடைக்குத் தான் சென்று மாவு வாங்க வேண்டும் என்ற அவசியம் இனி தேவையில்லை. உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு உங்கள் கையாலேயே சுலபமாக இந்த குலோப் ஜாமூனை செய்து கொடுங்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சரி ரெசிபிக்கு செல்லலாமா.

jamun1

முதலில் 1 கப் அளவு ரவையை (100 கிராம்) எடுத்துக் கொள்ளுங்கள். எந்த கப்பில் ரவையை அளந்து எடுத்தீர்களோ அதில் 3 கப் அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். நெய் 1 டேபிள்ஸ்பூன் தேவை. (ரவை – 100 கிராம், சர்க்கரை – 200 கிராம், தண்ணீர் – 375 ml, காய்ச்சிய பால் – 375 ml)

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, ரவையை கொட்டி 2 நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்கவேண்டும். அடுத்தபடியாக தயாராக இருக்கும் பாலை ரவையில் ஊற்றி, கட்டி படாமல் கிளறி விடுங்கள். 1 டேபிள்ஸ்பூன் அளவு நெய் போட்டு விடுங்கள். இந்த 3 பொருட்களும் நன்றாக சேர்த்து, மிதமான தீயில் கொதித்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு வர வேண்டும். 6 லிருந்து 8 நிமிடங்கள் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள்.

jamun1

இந்த மாவு அப்படியே கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆரவேண்டும். அதன் பின்பு, உங்கள் கைகளில் கொஞ்சம் எண்ணெயையோ அல்லது நெய்யையோ தடவிக் கொண்டு, அந்த மாவை பக்குவமாக பிசைந்து கொடுக்க வேண்டும். விரிசல் வராமல் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். குலோப் ஜாமுன் சைஸ்க்கு.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 200 கிராம் (1 கப்) அளவு போட்டு, சர்க்கரையை எந்த கப்பில் அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் 1 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்போது அந்த சர்க்கரையை நன்றாக கரைத்து, ஒரு கம்பிப் பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். அதாவது சர்க்கரை உங்களது கையால் தொட்டுப் பார்த்தால் பிசுபிசுப்பு தன்மை வர வேண்டும். 8 லிருந்து 10 நிமிடங்கள் சர்க்கரைப்பாகு கொதித்தால் போதும். பிசுபிசுப்பு தன்மை வந்துவிடும். இந்த சர்க்கரை பாகில் இறுதியாக 2 சொட்டு எலுமிச்சை பழச்சாறு விட்டால், சர்க்கரை பாகு ஆறினாலும் கட்டி பிடிக்காமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

jamun3

ஏலக்காய் வாசம் பிடித்தவர்கள், குங்குமப்பூ வைத்திருப்பவர்கள் இந்த சர்க்கரை பாகில் அந்த 2 பொருட்களையும், 2 சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம். குங்குமப்பூ சேர்த்து தான் ஆக வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை.

jamun3

இறுதியாக கடாயை அடுப்பில் வைத்து, குலோப்ஜாமுன் உருண்டைகளை பொரித்து எடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி, மிதமாக சூடுபடுத்தி கொள்ள வேண்டும். அதன் பின்பு உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுக்கவேண்டும். அடுப்பு கண்டிப்பாக மிதமான தீயில் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

jamun4

வருத்த இந்த குலாப் ஜாமூன் உருண்டைகளை, சூடாக இருக்கும் சர்க்கரை பாகில் போட்டு விடுங்கள். ஒருவேளை ரொம்பவும் பாகு ஆறிவிட்டால், அடுப்பில் வைத்து மிதமாக சூடுபடுத்தி, அதன் பின்பு இந்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்றாக ஊறும் வரை விட்டு விடுங்கள். அதாவது பொறிக்கும் உருண்டைகளும் சூடாக இருக்க வேண்டும். சர்க்கரை பாகும் சூடாக இருக்க வேண்டும்.  2 லிருந்து 3 மணி நேரம் ஊறிய பின்பு சூப்பரான குலோப்ஜாமுன் தயாராகி இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால், உங்க வீட்லயும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.