ரவையில் கூட மொறுமொறு சீடை செய்ய முடியுமே! இந்த ரெசிபி இத்தனை நாளா உங்களுக்கு தெரியாதா?

rava-seedai1

அரிசி மாவை வைத்து தான் சீடை செய்வார்கள். ஆனால், ரவையை வைத்து சூப்பரான, சுவையான சீடையை செய்ய முடியும். ரொம்ப கஷ்டப்பட வேணாம். ரவையையும், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய இன்னும் ஒரு சில பொருட்களை வைத்தே, இந்த சீடையை எப்படி செய்வது? என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வருட தீபாவளிக்கு, இந்த சிடையை செய்து உங்கள் உறவினர்களுக்கு கொடுங்கள். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ட்ரையல பாத்துக்கலாமா?

ravai

Step 1:
முதலில் 1 டேபிள்ஸ்பூன் அளவு கடலைப்பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் அளவு உளுத்தம்பருப்பு, தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். 2 மணி நேரம் வரை இது நன்றாக ஊறட்டும்.

Step 2:
ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் அளவு ரவையை போட்டுக் கொள்ள வேண்டும். 1/4 – கப் அளவு துருவிய தேங்காய், 1/2 – ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 – ஸ்பூன் மிளகுத்தூள், 1/4 – ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, நெய் 1 ஸ்பூன், (சீடை ரொம்ப சாப்டா வேணும்னா, 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.)இவைகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

ரவையில், நெய்யோடு சேர்ந்த மசாலா பொருட்கள் அனைத்தும், ஒன்றாக கலந்து பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சீடை மாவை பிசைய வேண்டும். ஊறவைத்த உளுத்தம் பருப்பையும், கடலை பருப்பையும், நன்றாக தண்ணீரை வடித்துவிட்டு இந்த மாவோடு சேர்த்து நன்றாக பிசைந்து விடுங்கள்.

- Advertisement -

Step 3:
ரவை என்பதால் நீங்கள் பிசைய பிசைய கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். பிசைந்த மாவை ஒரு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை ஈரத் துணியைப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்த பின்பு, சீடைக்கு மாவு சரியான பக்குவத்தில் இருந்தால், உங்களது கைகளில் கொஞ்சம் எண்ணெய் தொட்டு, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, ஒரு காட்டன் துணியின் மீது பரப்பி போட்டு விடுங்கள்.

rava-seedai

ஒருவேளை மாவு 5 நிமிடங்கள் ஊறிய பின்பு, மாவு கொஞ்சம் வரண்ட பதத்திற்கு வந்திருந்தால், ஒரே ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு மீண்டும் பிசைந்து, உருண்டைகள் செய்து கொள்ளலாம். கடாயில் சீடையை பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி விட்டு, அதன் பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்திருக்கும் சீடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறம் வரும் அளவிற்கு சிவக்க வைத்து எடுக்க வேண்டியதுதான்.

இந்த சீடையின் ருசி நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதில் நாம் சேர்த்திருக்கும் பொருள்கள் மிகவும் கொஞ்சம்தான். ஆனால், நீங்கள் அடுத்தவர்களுக்கு இந்த சீடையை கொடுக்கும்போது, இந்த பலகாரத்தை எந்த பொருளை வைத்து செய்தீர்கள் என்பதே அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. ஒரு வாட்டி ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
இந்த 2 பொருள் உங்க வீட்ல இருக்குதா! அப்படினா இந்த பிரேக் ஃபாஸ்ட்ட டக்குனு 10 நிமிஷத்துல செஞ்சிடலாமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.