RBI : ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நபர்களா நீங்கள் ? நவீன முறையில் உங்கள் பணத்தை திருட இருக்கும் டெக்னிக் திருடர்கள் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

RBI
- Advertisement -

கடந்த சில வருடங்களாக வங்கி கணக்கில் இருந்து பணம் சில மறைமுக இணைய கொள்ளையர்கள் மூலம் திருடப்பட்டு வருகிறது. அதவாது வங்கி அதிகாரி என்று போன் செய்து பயனாளர்களின் ஏ.டி.எம் விவரங்களை அவர்கள் உங்களிடம் இருந்து பெற்று உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதை நாம் அறிந்து இருக்கிறோம்.

fraud 1

ஆனால், தற்போது நமது வங்கி கணக்கில் மீண்டும் ஒரு வினோதமான முறையில் பணம் திருடப்படும் அபாயம் வந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அதாவது உங்கள் வங்கி கணக்கிற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் என்று கூறி அவர்கள் உங்களுக்கு வங்கிக்கு சம்மந்தமான ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றினை அனுப்பி அதனை பதிவிறக்கம் செய்ய சொல்வார்கள். அதனை பதிவிறக்கம் செய்யும்போது நிறைய கேள்விகள் கேட்கும்.

- Advertisement -

பொதுவாக நாம் அனைவரும் வேலை பளு காரணமாக இதுபோன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது அனைத்திற்கும் ஓகே என்று கிளிக் செய்து பதிவிறக்கம் செய்வோம். இவ்வாறு ஆப்பின் அனைத்து உரிமைகளும் அவர்களிடம் சென்று நேரடியாக அவர்கள் வசம் செல்லும்.மேலும், அவர்கள் உங்களது 8 இலக்க கார்டு நம்பரையும் அறியமுடியும்.அதோடு சேர்த்து எளிதாக உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்களால் திருடவும் முடியும்.

fraud

எனவே, ஆன்லைன் மூலம் வங்கி கணக்கினை உபயோகிப்பவர்கள் தங்களது முறையான அதிகாரபூர்வமான ஆப் மூலமே பணப்பரிவர்த்தனை செய்யுங்கள். புதிதாக இதுபோன்ற போலியான ஆப் உங்கள் மொபைலுக்கு வந்தால் அதனை பதிவிறக்கம் செய்யவேண்டாம் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கினை உபயோகிப்பவர்களுக்கு ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை செய்துள்ளது.

- Advertisement -