இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய முன்றாம் நடைபெற்று ஆட்டம் முடிந்த நிலையில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 33 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இவரது இந்த அபார பந்துவீச்சினை கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது சிறப்பான பந்துவீச்சிற்கான காரணத்தினை அவர் தெரிவித்துள்ளார். நான் முதல் இன்னிங்சில் முக்கியமான வீரர்களை வீழ்த்தியதில் மகிழ்ச்சி .இதுபோன்று தொடர்ந்து சிறப்பாக பந்துவீசுவேன், அதற்காக நான் கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன்.
மேலும் எனது பந்து வீச்சு இவ்வளவு சிறப்பாக அமைய காரணம் நான் வீசும் “யார்க்கர்”. நான் எப்போது எல்லாம் யார்க்கர் வீசுகிறேனோ அப்போதெல்லாம் எதிரணி வீரர்கள் திணறுவதை கண்டுள்ளேன் . அதனாலே நிறைய யார்க்கர் பந்துகளை வீசுகிறேன். எனக்கு யார்க்கர் மிக சரியாக வீச குறிப்புகளை சொல்லி கொடுத்தவர் இலங்கை அணியினை சேர்ந்த பிரபல பந்துவீச்சாளரான “லாசித் மலிங்கா”.
நான் அவருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும்போது அவர் எனக்கு பவுலிங் குறித்த நிறைய குறிப்புகளை வழங்குவார். மேலும் எனது பந்துவீச்சினை கண்டு என்னை பாராட்டி ஊக்கப்படுத்துவார். அதனாலேயே அவருடன் நான் தொடர்ந்து வலை பயிற்சியில் பந்து வீசுவேன். அவருடைய ஆலோசனை எனக்கு நிறைய கைகொடுக்கிறது என்று பும்ரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே :
விராட் கோலி “பாலோ ஆன்” தராததன் காரணம் இதுதானா – ஆலன் பார்டர்
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்