மரணத்தை முன்பே துல்லியமாக கணித்து கூறும் பெண் – வீடியோ

sakthi cakku

அமானுஷ்ய விஷயங்கள் என்றாலே அதில் பெரும்பாலானோருக்கு ஒரு திகில் கலந்த ஆர்வம் உண்டு. அந்த அமானுஷ்ய கலைகளைப் பயன்படுத்தி சக மக்களுக்கு நன்மை மற்றும் தீமையைச் செய்யும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப் பிறருக்கு நன்மை செய்யப் பயன்படும் ஒரு அமானுஷ்யக் கலை தான் ரெய்க்கி.”ரெய்க்கி” என்பது பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் ஒரு கலையாகும். உலகின் பண்டைய நாகரிகங்கள் அறிந்திருந்த இந்த அற்புதமானக் கலை, காலவெள்ளத்தில் தொலைந்து போய், கடந்த நூற்றாண்டில் ஒரு ஜப்பானிய ஞானியால் மீட்டெடுக்கப்பட்டது. இதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இக்காணொளியைக் காண்போம்.

பழனியில் வாழ்ந்த சாக்கடைச் சித்தரின் பக்தையான ஒரு பெண்மணி அச்சித்தரின் மேல் பக்தி கொண்டு, அவருக்கு ஒரு சிறிய கோவில் ஒன்றை எழுப்பி வழிபட்டு வருகிறார். மேலும் அச்சித்தரின் அருளால் தான் கற்ற “ரெய்க்கி” கலை மூலம் மற்றவர்களின் குறைகளைப் போக்கி வருகிறார். ரெய்க்கி கலையை குறைகளோடு வரும் மக்களிடம் பிரபஞ்ச பேராற்றலை அவர்களுக்குள் இறக்கிய பின், கற்றுத்தரப்படும் முறைகளை சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களை நோய்களிலிருந்து குணமாக்கிக் கொண்டு, பிறரையும் குணமாக்க முடியும் என்று இச்சாக்கடைச் சித்தரின் பக்தை கூறுகிறார்.

மேலும், இப்பெண்பக்தர் தான் வழிபடும் அம்மனின் அருளால் அவருக்குள் இருந்து வெளிப்படும் “சக்தியின் வாக்கால்” இவரிடம் குறைகளோடு வருபவர்களின் குறைகள் நீங்குவதாகவும், அப்படி வருபவர்களில் சிலரின் மரணத்தைப் பற்றி துல்லியமாக கூறுவதாகவும் இவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

சக்தியின் அருளால் இவர் பிறருக்கு எழுதித் தரும் ஜாதகக் கணிப்பு குறிப்பேட்டை தொலைத்து விட்டால் மீண்டும் எழுதித் தரமுடியாதென்று திட்ட வட்டமாகக் கூறுகிறார் இவர். இப்பிரபஞ்சம் சக்திமயமானது. அந்தச் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தி எப்பிரச்னைகளையும் தீர்க்க முடியும் என்பது சாத்தியமாகத்தான் தெரிகிறது.