முகத்தை பார்க்காமலே பிரச்னையை சரியாக சொல்லும் சாமியார் – வீடியோ

amman

மனிதர்களுக்கு எப்போதும் பல பிரச்சனைகள் இருப்பதுண்டு அவைகளை மற்றவர்கள் தெளிவாக அறிவதென்பது இயலாத காரியம். ஆனால் ஒரு கோவில் பூசாரி தன்னை நாடி வருபவர்களின் பிரச்சனைகளை அவர்களின் முகத்தை கூட பார்க்காமல் தெளிவாக கூறுகிறார். அதோடு அவர்களின் பிரச்சனைகளுக்கு சரியான ஒரு தீர்வையும் சொல்கிறார். இதோ அது குறித்து ஒரு வீடியோ காட்சி.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

சேலம் மாவட்டத்தில் உள்ள பொங்கவாளி என்னும் ஊரில் தான் இந்த வினோதம் நிகழ்கிறது. இங்கு உள்ள ஆஞ்சநேயர் கோவில் ஒன்றில் பூசாரியாக உள்ளார் சக்திவேல். இவர் இதற்கு முன்பு சேர்மேனாக இருந்துள்ளார். ஒருநாள் இவரின் கனவில் ஆஞ்சநேயர் வந்து பக்தர்களுக்கு சேவை செய்யுமாறு கூறினாராம். அதில் இருந்து இவர் ஆஞ்சிநேயர் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

மற்ற கோவில்களில் எத்தனையோ நபர்கள் குறி சொல்கின்றனர். ஆனால் இவர் குறி சொல்லும் விதம் சற்று விசித்திரமாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு பிரச்னையை கூறி அந்த பிரச்சனை யாருக்கு உள்ளது என்று கேட்கிறார். அதன் பிறகு அந்த நபருக்கான மற்ற பிரச்சனைகளை கூறி அதற்கான தீர்வையும் மிக தெளிவாக கூறுகிறார்.