நள்ளிரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசய வீடியோ

Odukampatti tharga

வீடியோ கீழே இணைக்கப்பட்டுளளது:
இந்துக்கள் பலர் இன்றும் தங்களது குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லை என்றால் தர்காவிற்கு சென்று மந்தரிப்பது வழக்கம். இதற்க்கு காரணம் இஸ்லாமிய கடவுள் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கையே. இப்படி இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழும் தமிழகத்தில் உள்ள தர்காக்கள் பலவற்றில் பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் நள்ளிரவில் திடீர் என்று தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் துடிக்கும் அதிசய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒடுகம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ளது இந்த அதிசய தர்கா. இந்த தர்காவில் இரவு நேரங்களில் தான் அதிக கூட்டம் காணப்படுகிறது. காரணம், இங்கு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேல் தான் அந்த அதிசயம் நிகழ்கிறது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டும் அல்லாமல் இந்துக்கள் கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் வருகின்றனர்.

இந்த தர்காவில் கவனிக்க பட வேண்டிய இடமாக இருப்பது நான்கு இஸ்லாமிய மகன்களின் சமாதி. இவைகள் தான் இங்கு பிரதான வழிபாட்டு இடமாகவும் உள்ளது. இங்கு பலர் பல வேண்டுதல்களை வைக்கின்றனர். அந்த வேண்டுதகள் நிறைவேறினால் அதற்கான நேர்த்திக்கடனையும் நிறைவேற்ற மக்கள் இங்கு வருகின்றனர்.

இங்குள்ள மகான்களின் சமாதிக்கு பட்டாடை போர்த்தப்பட்டுள்ளது. அதோடு வாசனையூட்டும் மலர்கள், ஊதுபத்தி என அந்த இடமே பக்தி பரவசமூட்டும் இடமாக உள்ளது. இந்த சமாதியை மக்கள் எந்நேரம் வேண்டுமானாலும் தரிசிக்கலாம் என்ற வகையில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த தர்காவில் ஆரம்ப காலத்தில் பெரிதாக கூட்டம் இல்லை. ஆனால் காலம் செல்ல செல்ல இங்குள்ள மகத்துவத்தை அறிந்து இன்று பலர் வெளி மாநிலங்களில் இருந்து கூட வர துவங்கி உள்ளனர்.