கோவில் யானை பாகனை கொன்றதால் ஆட்சிக்கு ஆபத்தா ? ஜோதிடர் பார்வை

Samayapuram elephant

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நம் நாட்டின் மற்ற மாநிலங்களை விட, நம் தமிழ் நாடு மாநிலம் ஒரு ஸ்திரத்தன்மையற்ற நிலையை எதிர்கொண்டுவருகின்றது. எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை, அதை சார்ந்த போராட்டங்கள் என்று தினமும் ஒரு நிம்மதியற்ற சூழலை நம் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதற்கு சரியான நிர்வாகத்திறனற்ற ஒரு தலைமை காரணமென்று கூறினாலும், இப்பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தும் நவகிரகங்களின் கெடுதலான நிலைகளும், ஆன்மிக பூமியான நம் தமிழகத்தின் ஆலயங்களில் நடக்கும் ஆகம விதிகளை மீறிய செயல்களால் ஏற்பட்ட தெய்வங்களின் கோபமும் ஒரு பிரதானக் காரணம் என அனுபவம் வாய்ந்த ஆன்மிகப் பெரியோர்களும், ஜோதிடர்களும் கூறுகிறார்கள். அப்படி நம் கோவில்களில் விதிகளை மீறி நடந்த துற்செயல்கள் பல உண்டு.

temple

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பார்த்தசாரதி கோவிலில் கீழே பதிக்கப்பட்ட, கோவிலின் நன்மையான அதிர்வுகளை தேக்கி வைக்கும் சக்தி கொண்ட மன்னர் கால கல்வெட்டுகளைக் உடைய கருங்கற்களை பெயர்த்து எடுத்து விட்டு, பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி நவீன கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில், விஜயநகரப் பேரரசர்கள் கட்டிய சில கற்தூண்களை இந்து அறநிலையத்துறை அகற்றியது. இதற்கு அப்போது அக்கோவிலின் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஐ.ந.சபையும் கண்டனத்தை தெரிவித்தது பெரும்பாலோர் அறிந்தது. கோவிலுக்களுக்கு வரும் பக்தர்களிடம் வியாபாரம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பல்களின் கடைகள் அமைக்க அனுமதி அளித்தல், இந்து மதத்தையும் அதன் தெய்வங்களையும் தூற்றும் மதத்தினருக்கே அக்கோவிலின் நிலங்களை விற்றல், குத்தகைக்கு விடுதல். நம் தமிழக சிற்பிகளின் புகழை என்றென்றைக்கும் கூறும் கோவில் தெய்வ சிலைகளை வெளிநாடுகளுக்கு கருதுவதை தடுக்காமல் இருத்தல் போன்ற சம்பவங்கள் ஒரு சில மட்டுமே.

இதனால் தெய்வங்களின் கோபத்திற்கு ஆளாகி ஒரு செல்வாக்கு மிக்க ஆட்சியாளர் அடைந்த மர்ம மரணம், மீனாட்சி அம்மன் கோவில், திருவாலங்காடு கோவில் மற்றும் பல புனிதத் தளங்களில் ஏற்பட்ட தீவிபத்துகள். சில கோவில்களின் தேரோட்டத்தின் போது அத்தேரின் அச்சுமுறிந்து நின்றது, சில இடங்களில் கோவிலின் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட கலவரங்களினால் அத்தேரோட்டம் நின்றது, நம் மாநிலம் முழுதும் ஒரு கலவர நிலை உண்டாகியிருப்பது போன்ற சம்பவங்கள் நடந்ததை நாம் கண்டோம்.

elephant

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று சமயபுரம் மாரியம்மனின் கோவில் யானை திடீரென்று ஆவேசம் கொண்டு கோவிலுக்கு வந்த பக்தர்களையும், அந்த யானையின் பாகனையும் தாக்கியதில், அந்த யானை பாகன் உயிரிழந்தார். மாரியம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில், அதுவும் அந்த அம்மனின் கோவிலிற்குள்ளாகவே இப்படிப்பட்ட ஒரு துர்சம்பவம் நிகழ்ந்தது, ஊரைக்காக்கும் தெய்வமான மாரியம்மன் மிகவும் உக்கிரமாக இருப்பதைக் காட்டுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்த கூடி விடயங்கள் என்ன வென்று ஆராய்ந்தால், இனிவரும் காலங்களில் ஆட்சியாளர்களின் ஊழலும், அதிகாரிகளின் லஞ்சமும் மக்களின் வெளிச்சத்திற்கு வரும். இதனால் மீண்டும் மீண்டும் மக்களின் கொந்தளிப்பு தொடரும். அதோடு மக்களின் எதிர்ப்பை மீறி செயலாற்றினால் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதே. ஆகையால் ஆட்சியாளர்களும் அறநிலை துறையை சார்ந்த அதிகாரிகளும் இனியாவது விழித்துக்கொண்டு மக்களுக்கு தேவையான வசதிகளை சரி வர செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மக்களை காக்கும் கடவுளின் கோவம் சற்று குறையும். ஆனாலும் இந்த விளம்பி வருடம் முழுவதுமே சற்று பதற்றம் நீடித்து கொண்டே தான் இருக்கும் என்று ஜோதிடர்களும் ஆன்மீக பெரியோர்களும் கூறுகின்றனர்.