நாளை (24/4/2021) சிறப்புமிக்க சனி பிரதோஷம்! இதை மட்டும் செய்தால் எல்லா கடவுள்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

sivan-meenatchi-mangalyam

ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷத்தை காட்டிலும் சனிக்கிழமையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்தது. சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய பிரதோஷ கால வேளையில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு கேட்ட வரம் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. நாளை நடைபெற இருக்கும் சனி பிரதோஷம் அன்று நாம் என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

jyotirlingam

பொதுவாகவே பிரதோஷ கால வேளையில் அனைத்து சிவாலயங்களிலும் அவருக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுவது உண்டு. அந்த பிரதோஷம் பூஜையில் கலந்து கொள்ள தேவாதி தேவர்களும், அத்துனை ரிஷிகளும் அங்கு வந்து சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பக்தர்கள் சிவனை அவ்வேளையில் ஆலயங்களில் தரிசிக்கும் பொழுது அனைத்து தேவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கப் பெறும்.

பிரதோஷ கால வேளையில் சிவ பெருமான் கோவிலில் பிரதட்சணம், சோம சூக்த பிரதட்சணம் செய்பவர்களுக்கு என்ன கேட்டாலும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் தொலைய சிவ மந்திரங்களை ஜெபிப்பது நல்லது. ‘ஓம் நமச்சிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை அன்றைய நாளில் தெரிந்தோ தெரியாமலோ எந்த வகையில் நாம் கூறினாலும் நமக்கு நன்மைகள் நடைபெறும்.

meenatchi-sundareswarar

இதே நாளில் அதாவது நாளை சனிக்கிழமையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும் பொழுது, மாங்கல்யம் அணிவிக்கும் பொழுது இங்கே நாம் நம் வீட்டிலும் அதை செய்து கொள்ளலாம். அதாவது புதிதாக தாலி சரடு மாற்ற நினைப்பவர்கள் இந்த வேளையில் தாலி சரடை மாற்றிக் கொள்ளலாம். முன்னமே அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மீனாட்சி அம்மன் படத்தை வைத்து அல்லது உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதனை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் கிழக்கு திசையை நோக்கி நின்று திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்ள வேண்டும். புதிதாக திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொண்ட பின் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும் பொழுது இவ்வாறு சரடு மாற்றிக் கொள்ளும் பொழுது குடும்பத்தில் இருக்கும் சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் மென்மேலும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

நாளை சனி பிரதோஷம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இரண்டு விஷயங்களும் நடைபெறுவதால் மிகவும் விசேஷமான பலன்களைத் நாம் பெற்றுக் கொள்வதற்கு இன்றைய நாளில் தவறவிடாமல் இறைவழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சனி பிரதோஷத்தில் நடைபெறும் அபிஷேக பொருட்களுக்கு தேவையான பால், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேகப் பொருள்களில் ஏதாவது ஒன்றை உங்களால் முடிந்தால் வாங்கிக் கொடுங்கள்.

curd-rice

இதனால் அபிஷேகங்களில் நடைபெறும் பலன்களில் உங்களுக்கும் பங்கு உண்டாகும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தயிர் சாதம் தானம் செய்யுங்கள். கோடை வெயில் காலத்தில் கோவில்களில் நீர் மோர், பானகம், தயிர்சாதம், லெமன் சாதம் போன்ற குளிர்ச்சியான உணவுகளை இவைகளை தானம் செய்வதன் மூலம் நல்ல ஒரு பலனை காணலாம். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். கூடுமானவரை மற்றவர்களின் பசியை போக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.