உணவு உண்ணாமல் 48 நாட்கள் தவம் – கண்விழிக்கையில் அபூர்வ சக்தி பெற்ற சித்தர்

thiyanam
- Advertisement -

கடவுளை ஒவ்வொரு மனிதனும் முதலில் தனக்குள் கண்டுகொண்டால் பிறகு அவன் காணும் அனைத்துமே அவனுக்கு இறைவனின் அம்சமாகத் தான் தெரியும். அத்தகைய ஒரு தன்மையை நமக்குள் ஏற்படுத்தும் சக்தி தியானத்திற்கு உண்டு. தொடர்ந்து செய்யப்படும் தியானப் பயிற்சியின் மூலமாக ஒரு மனிதன் எதையும் சாதிக்க முடியும் என்பது சித்தர்களின் வாக்கு. தியான முறைகளில் பல வகைகள் உண்டு. அப்படி ஒரு சக்தி வாய்ந்த தியான முறையை பயன்படுத்தி மக்களுக்கு நன்மைகள் புரிந்த ஒரு மகானைப் பற்றிய காணொளி தான் இது.

- Advertisement -

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “சற்குரு ஸ்வாமிகள்” எனப்படும் இச்சித்தர் பல ஊர்களுக்கு சென்று, அவ்வூரில் ஓரிடத்தில் குழி தோண்டி 48 நாட்கள் தவம் செய்து அவ்வூர் மக்களுக்கு பல நன்மைகள் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக இவர் இப்படி தவம் செய்த நான்கு ஊர்களிலும் இவருக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

ஒருமுறை இப்படி 48 நாட்கள் குழிக்குள் அமர்ந்து சற்குரு ஸ்வாமிகள் தவம் செய்த போது இவரின் தவமுயற்சியைத் தடுக்க நினைத்த சிலர் அப்போதைய ஆங்கிலேய அதிகாரியை அழைத்து வந்து, அவரின் உத்தரவின் பெயரில் இவர் தவம் கலைக்கப்பட்டபோது அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு கண்பார்வை பறிபோனதாகவும், அவர் சற்குரு ஸ்வாமிகளிடம் மன்னிப்பு கேட்ட போது மீண்டும் அவருக்கு கண்பார்வை கிடைக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

அதே காலகட்டத்தில் தமிழ் நாட்டில் சாதிய பாகுபாடுகளை எதிர்த்து செயலாற்றிக்கொண்டிருந்த “தந்தை பெரியார்”, சற்குரு ஸ்வாமிகளின் சாதிய ஒழிப்பு செயல்களை கேள்விப்பட்டு இவரை காண்பதற்காக வந்தார் என்கின்றனர். அப்போது “அரசியல் ரீதியான சாதிய ஒழிப்பை எதிர்காலத்தில் நீ செய்து காட்டுவாய்” என சற்குரு ஸ்வாமிகள் தந்தைப் பெரியாரை ஆசிர்வதித்ததாக கூறுகிறார்கள் ஸ்வாமிகளின் வரலாறை அறிந்தவர்கள்.

ஸ்வாமிகள் ஒரு சமயம் குன்னூர் சென்றிருந்த போது அங்கு ஒரு 12 வயது சிறுவனை தண்ணீரின் மீது நடக்கவைத்து அதிசயம் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. பிறகு தன் பக்தர்களிடம் தாம் தவமியற்ற பொதிகை மலை சென்று திரும்புவதாக கூறிச் சென்றவர் திரும்பி வரவில்லை. ஆனால் இன்றும் அப்பொதிகை மலையில் வன விலங்குகள் உருவில் சற்குரு ஸ்வாமிகள் உலவுவதாகவும் அவரது பக்தர்கள் நம்புகின்றனர் சித்தர்களுக்கு அனைத்தும் சாத்தியமே.

- Advertisement -