செல்வம் கொழிக்க வீட்டில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 10!

kuberan-selvam

ஒரு வீட்டில் செல்வம் கொழிப்பதற்கு மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டும். மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் இருக்கும் இந்த சிறு சிறு விஷயங்களை சரி செய்து கொள்வதன் மூலம் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பொருட்கள் சரியான திசையிலும், இடத்திலும் அமைந்து விட்டால் செல்வமானது நம்மிடம் குறையாமல் நிறைய துவங்கிவிடும். அந்த வகையில் நம் வீட்டில் செய்ய வேண்டிய எளிய 10 விஷயங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

bero

நம் வீட்டில் இருக்கும் பீரோ சரியான திசையில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வீட்டில் நீங்கள் பணத்தை வைக்கும் பீரோ அல்லது எந்த பொருளாக இருந்தாலும் சரி அது தென்மேற்கு மூலையில் வடக்கு திசையை பார்த்து அமைந்திருக்க வேண்டும். இப்படி சரியான திசையில் பணத்தை வைத்தால் வீண் விரயங்கள் ஆவது தடுக்கப்படும். இதனால் மென்மேலும் செல்வமானது சேரத் தொடங்கும் என்பது வாஸ்து ஜோதிட நம்பிக்கையாகும். தென்மேற்கு திசையில் கிணறு அமைக்கப்பட்டிருக்க கூடாது.

அப்படி நீங்கள் வைக்கும் பணப்பெட்டி அல்லது பீரோ போன்ற பொருட்களின் மீது வெளிச்சத்தை உண்டாக்க கூடிய வகையில் பல்ப் அல்லது டியூப்லைட் போன்றவற்றை மாற்றி வைக்க கூடாது. இது போன்று பீரோவின் மீது லைட்கள் அமைத்து இருப்பதும் பணம் தடைப்பட்டு வருவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும்.

bero1

பணம் வைக்கும் இடத்தில் நீங்கள் ஒரு கண்ணாடியை எதிர்ப்புறமாக வைக்க வேண்டும். அதாவது பீரோவிற்கு நேரெதிராக சிறிய கண்ணாடி ஆவது பணத்தை பார்த்தபடி வைக்க வேண்டும். அப்படி வைக்கும் பொழுது செல்வவளம் ஆனது மேலும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

வீட்டின் நடுப்பகுதியில் எந்த ஒரு காரணத்திற்காகவும், எந்த ஒரு பொருளையும் வைக்கக் கூடாது. நடு பகுதியானது எப்பொழுதும் சுத்தபத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். நடு ஹாலில் அமர்ந்து கொண்டு உணவு சாப்பிடும் பொழுதும் உணவை சிதற விடக்கூடாது. சாப்பிட்ட உணவை கையால் எடுத்து வெளியில் போட வேண்டுமே தவிர, துடைப்பான் பயன்படுத்தக் கூடாது. சாப்பிட்டு முடித்த பின் உடனே ஒரு ஈரத் துணியை வைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.

home

வீட்டில் எந்த ஒரு இடத்திலும் தூசு தங்கி இருக்கக் கூடாது. அப்படி தூசு, துரும்புகள் இருக்கும் இடங்களில் செல்வம் நிலைப்பதில்லை என்பது விதியாகும். அதிலும் குறிப்பாக வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எனவே ஜன்னல், கதவுகளை அடிக்கடி துடைத்து தூசுகள் சேர விடாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் செல்வ வளம் அதிகரிக்கும்.

door

வீட்டின் வாசலில் கோலம் போடுவது வழக்கம். இதை இன்று சிலர் சரியாக கடைப்பிடிப்பதில்லை. பிரதான வாசலில் நீங்கள் அப்பார்ட்மெண்ட் வீட்டில் இருந்தாலும் கூட, சிறிய கோலம் ஆவது போட்டு அலங்கரிப்பது அவசியமாகும். வீட்டின் பெயர் பலகை எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களெல்லாம் பணவரவை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும்.

Kolam

வீட்டில் எந்த ஒரு இடத்திலும் தண்ணீர் கசிவு என்பது ஏற்படக் கூடாது. தண்ணீர் கசிய கசிய வீட்டில் இருக்கும் செல்வமும், பணமும் கரைந்து கொண்டே போகும் என்பது நியதி. ஆகவே இவற்றை சரியாக பார்த்துக் கொள்வதன் மூலமும் செல்வ வளத்தை அதிகரித்து கொள்ளலாம்.

tap

பறவைகள், விலங்குகள் போன்ற வாயில்லா பிராணிகளுக்கு உணவிடுவதன் மூலமும் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யலாம். உண்மையிலேயே இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நீங்கள் செய்யும் சிறு சிறு தானமும் உங்களுடைய செல்வ வளத்தை இரட்டிப்பாக்கி தரும். வீட்டில் வாத்தியக் கருவிகளின் படங்கள், பல வண்ண நிறங்களில் இருக்கும் மீன்கள் கொண்ட மீன் தொட்டி, மயில் தோகை, குபேரனின் திருஉருவ சிலை, அதிர்ஷ்டம் தரும் வாஸ்து செடிகள் போன்றவற்றை வைப்பதன் மூலமும் செல்வ வளத்தை அதிகரித்து கொள்ளலாம்.