சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குங்குமம்! நாட்டிற்கு நன்மையை தர போகின்றதா? தீமையை தரப் போகின்றதா? குழப்பத்தில் பக்தர்கள்.

shivan-malai
- Advertisement -

காங்கேயம் சிவன்மலை முருகன் கோவில் உத்தரவு பெட்டியில் கடந்த 23-4-2021 ஆம் தேதி குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த முருகப் பெருமான், பக்தர்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட குங்குமம் நமக்கு நல்ல பலனைக் கொடுக்க போகின்றதா? அல்லது ஏதாவது கெட்ட சகுனம்த்தை உணர்த்துகின்றதா? இதற்கான விடையை தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த சிவன்மலை உத்தரவு பெட்டி பற்றி பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த கோவிலை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

shivan-malai1

சிவன்மலை கோவிலில் இருக்கும் உத்தரிப்பு பெட்டிக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. நம்முடைய நாட்டில் நடக்கப்போகும் சில கசப்பான சம்பவங்களை முன்கூட்டியே வலியுறுத்தும் வகையில், சில பொருட்கள் இந்த சிவன்மலை ஆண்டவர் பெட்டியில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

அந்த வரிசையில் ஒரு முறை உத்தரவு பெட்டியில் தண்ணீர் வைத்தபோதுதான் இந்த நாட்டிற்கு சுனாமி என்ற பேராபத்து வந்தது. ஒருமுறை மஞ்சள் வைத்து வழிபாடு செய்யும்போது மஞ்சளின் விலை அதிகரித்த தாகவும், பணம் வைத்து வழிபாடு செய்த போது, விலைவாசி உயர்வு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

shivan-malai2

முருகப்பெருமான் பக்தர்களின் கனவில் வந்து, உத்தரவு பெட்டியில் இந்த பொருளை வைக்க வேண்டும் என்ற கட்டளையை வைப்பார். இதன் அடிப்படையில், அந்த பக்தர் சிவன்மலை முருகர் கோவிலுக்கு சென்று, அந்த கோவில் நிர்வாகியிடம் கனவில் வந்த பொருளை பற்றி சொல்லி, கோவிலில் பூப்போட்டு முருகப்பெருமானிடம் உத்தரவு கேட்டு அதன் பின்பு, முருகப்பெருமான் கனவில் சொன்ன அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

- Advertisement -

இப்போது நம் நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை சந்தித்தோம். இந்த வருடம் அந்த கொரோனா, இரண்டாவது அவதாரம் எடுத்து நம்மை அச்சுறுத்தி வருகின்றது. இந்த சூழ்நிலையில் உத்தரவு பெட்டியில் இருக்கக்கூடிய குங்குமம் பக்தர்களுக்கு எதை வலியுறுத்துகின்றது?

shivan-malai3

குங்குமம் என்பது மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு பொருள் தான். நம்முடைய நாடும், நாட்டு மக்களும் எதிர்காலத்தில் சுபிட்சம் அடைவார்கள் என்பதை வலியுறுத்துவதற்காக தான் இந்த குங்குமம் வைக்கப்பட்டுள்ளதாக கோவிலில் உள்ளவர்களும், பக்தர்களும் நம்புகிறார்கள்.

kungumam

கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவை எதிர்கொண்டு மக்கள் அதிக அளவில், மனதளவில் பயந்து கொண்டுதான் தங்களுடைய அன்றாட வாழ்வை நடத்திச் செல்கிறார்கள். அரசாங்கம் என்று முழு ஊரடங்கு உத்தரவு போட்டு விடுவோமோ? நோய்த்தொற்று எப்போது அதிகமாக பரவுமோ? நம்முடைய வாழ்வாதாரம் பாதித்து விடுமோ? என்ற நடுக்கம் மக்களின் மனதில் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றது.

shivan-malai4

இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களின் பயத்தை போக்கும் விதத்தில், சிவன்மலை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குங்குமம் பக்தர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது. பக்தர்கள் இறைவனின் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், உண்மையான பக்தியுமே போதும். நம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எந்த பெரிய ஆபத்தும் ஏற்படாது. நாடு எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து சீக்கிரமே வெளிவர, கொடிய குரு நான் அழிந்துபோக, அந்த சிவன்மலை முருகனை மனதார பிரார்த்தனை செய்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -