உங்க வீட்டுல பால் இருக்கா? அப்படின்னா, ஜில்லுனு ஒரு ஸ்வீட் 2 நிமிஷத்தில செஞ்சிடலாமே!

snow-sweet
- Advertisement -

இந்த ஸ்வீட்டின் பெயர் ஸ்னோ ஸ்வீட். பார்ப்பதற்கு இது ஒரு ஜெல்லி ஸ்வீட் போல் இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்து, உள்ளே போய்விடும். அருமையான சுவை கொண்ட இந்த இனிப்பு வகையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு அவ்வளவு பிடிக்கும் இது! ஒரு முறை செய்து கொடுத்து தான் பாருங்களேன். இது செய்யறதுக்கு மொத்தமா பத்து நிமிஷம் கூட ஆகாதுங்க!

milk

ஸ்னோ ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 1/2 லிட்டர், சர்க்கரை – 100 கிராம், கான்பிளவர் மாவு – 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை, நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் காய்ச்சாத பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பாக்கெட் பாலாக இருந்தாலும் பரவாயில்லை. பசும்பாலாக இருந்தாலும் பரவாயில்லை. அதில், சர்க்கரையை போட்டு, அதன் பின் கான்பிளவர் மாவு போட்டு, ஏலக்காய் பொடியை போட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். கான்பிளவர் மாவு கட்டி கட்டியாக இருக்கக்கூடாது.

milk-kova1

அதன் பின்பாக, அடுப்பை மிதமான தீயில் வைத்து, விட்டு ஒரு கடாயில் இந்த கலவையை சேர்த்து, கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். மூன்றிலிருந்து நான்கு நிமிடத்திற்குள், இந்த கலவை ஒரு கட்டி பதத்திற்கு வந்துவிடும்.

- Advertisement -

சின்ன சின்ன சில்வர் டபராக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே, நெய் தடவி சுடச்சுட தயாராக இருக்கும் கலவையை, அந்த கிண்ணத்தில் ஊற்றி விட வேண்டும். இது ஒரு திக்கான கிரேவி பதத்தில் இருக்கும். சூடாக இருக்கும் போதே உடனடியாக சின்ன சின்ன கிண்ணத்தில் மாற்றி விடுங்கள்.

small-bowls

கிண்ணத்தில் ஊற்றி வைத்திருக்கும் இந்த கலவையானது, நன்றாக ஆரட்டும். அதன் பின்பாக உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் இதை 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை வைத்து விட்டு, வெளியே எடுத்து இதன் ஓரங்களை எல்லாம் லேசாக நீக்கிவிட்டு, ஒரு தட்டில் கவிழ்த்து தட்டினார்கள், என்றால் ஜெல்லி போன்ற ஒரு ஸ்வீட் ரெடி! பார்க்கும்போதே உங்களுக்கு சாப்பிடனும்னு ஆசையா இருக்கும். அப்டியே ஜெல்லி ஸ்வீட் மாதிரி இருக்கும்.

- Advertisement -

snow-ball-sweet

இதை அப்படியே சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் எந்த ஒரு பொருளையும் அலங்காரம் செய்து சாப்பிட்டால் தானே அழகு. கொஞ்சம் தேங்காயை துருவி, கடாயில் போட்டு நன்றாக வறுத்து விட்டு, இந்த ஸ்வீட்டின் மேல் தூவி, அலங்காரம் செய்த பின் சாப்பிட்டீர்கள் என்றால், அலங்காரமான, அழகான, சுவையான, ஸ்வீட் தயார். ஒரே ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. திரும்பவும் திரும்பவும் செஞ்சிட்டே இருப்பீங்க.

இதையும் படிக்கலாமே
பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைப்பது சரியா? தவறா? ஸ்டிக்கர் பொட்டு ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -