ருசியானதும், உடலுக்கு பலத்தை தரும் சோயா 65 செய்யும் முறை இதோ

soya-65
- Advertisement -

சோயா 65 என்பது நாம் வெஜ் பிரியாணியில் சுவைக்காக சேர்க்கும் மீல்மேக்கர் கொண்டு செய்யப்படுவது. சோயா 65 சாப்பிடுவதற்கு சிக்கன் 65 போன்றே இருக்கும். இதனை வீட்டில் எப்படி சமைப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

soya 65 1

சோயா 65 செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

மீல்மேக்கர் – 200 கிராம்
கார்ன் மாவு – 2 டீஸ்பூன்
மைதா மாவு – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

சோயா 65 செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைக்கவும். பிறகு கொதிக்கும் அந்த தண்ணீரில் மீல்மேக்கர் போட்டு வேகவைத்து எடுக்கவும். பிறகு அதனை வேறு பாத்திரத்தில் எடுத்து புழிந்து வைத்துக்கொள்ளவும்.

- Advertisement -

soya 65 2

பிறகு அதனுடன் கார்ன் மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் . பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மீல்மேக்கரை போட்டு பொரித்து எடுத்தால் சோயா 65 தயார்.

- Advertisement -

soya 65 3

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
ரவை அடை செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Soya 65 recipe in Tamil. It is also called Soya 65 ingredients in Tamil or Soya 65 preparation in Tamil or Soya 65 seimurai in Tamil or Soya 65 seivadhu eppadi in Tamil.

- Advertisement -