உங்கள் வீட்டு செடிகளுக்கு இந்த உரத்தை மட்டும் தவறியும் கொடுத்து விடாதீர்கள்! என்ன உரம் அது?

soya-rose-malli
- Advertisement -

சில உரங்கள் செடிகளின் வளர்ச்சியை பாதிக்கக் கூடியதாக இருக்கும். அதை அளவுக்கு அதிகமாக கொடுக்கும் பொழுது செடி உடைய மொத்த வளர்ச்சியும் தடுக்கப்பட்டு விடும். எந்த உரமாக இருந்தாலும் ஒரு அளவு உண்டு. அதற்கு மேல் நாம் கொடுக்கும் பொழுது அவைகள் அதிகப்படியான சத்துக்கள் பெறுவதால் சில பாதிப்புகள் உண்டாக்கிவிடும். அந்த வகையில் இந்த ஒரு உரம் செடிகளுக்கு கொடுப்பதால் கிடைக்கக்கூடிய பாதிப்புகள் என்ன? அது என்ன உரம்? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்.

soya-maker

சோயா மேக்கர், மீல் மேக்கர் என்று கூறப்படும் இந்த வகையான சோயா பீன் லிருந்து பெறப்படும் ஒரு பொருள் நிறைய சத்துகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. ஆனால் இந்த பொருளைக் கொண்டு நாம் தயாரிக்கும் உரம் செடிகளுக்கு எந்த வகையில் பாதிப்புகளை உண்டாக்கும்? நிறைய பேருடைய வீடுகளில் சோயா மேக்கர் பயன்படுத்தி உரத்தை தயாரிப்பது உண்டு. அப்படி மீல் மேக்கர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உரமானது இனிப்பு தன்மை கொண்டுள்ளதால் பூச்சிகளும், எறும்புகளும் அதிகமாக வர ஆரம்பித்துவிடும்.

- Advertisement -

மேலும் அது அங்கேயே தங்கி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனால் உங்களுடைய செடிகளின் வளர்ச்சி மேலும் பாதிப்படையுமே தவிர பிரயோஜனம் ஒன்றும் இருக்காது. சோயா மேக்கர்களை சூடான தண்ணீரில் போட்டு ஊற வைத்து அதனை பின்னர் மிக்ஸியில் அரைத்து அதனை நேரடியாக செடிகளுக்கு கொடுப்பார்கள். இப்படி செய்யும் பொழுது அதில் இருக்கும் இனிப்பு தன்மை எறும்புகளை வரவழைக்கும்.

soya-meal

மேலும் பூச்சிகளின் தொந்தரவும் அதிகரித்துவிடும். அதே போல சோயா மேக்கர்களை அப்படியே மிக்ஸியில் அரைத்து பவுடராக பயன்படுத்தி வந்தாலும் அதில் இருக்கும் சத்துக்கள் அதிகப்படியாக கொடுத்து விட்டால் செடியின் வளர்ச்சி பாதிக்கும். சோயா மேக்கரில் இருக்கும் சத்துக்கள் எந்த வகையான செடியாக இருந்தாலும் அதில் இருக்கும் இலைகளை பெரிது பெரிதாக வளரச் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது.

- Advertisement -

ஆகவே தான் அதனை அதிகப்படியாக பயன்படுத்துகிறார்கள். இலைகள் பெரிது பெரிதாக ஆரோக்கியமானதாக பூக்க சோயா மேக்கரில் இருக்கும் சத்துக்கள் பெருமளவு உதவி புரிகின்றது. சிலர் கீரை வகைகளை அறுவடை செய்ய பயன்படுத்தும் பொழுது சோயா மேக்கர் உரம் கொடுப்பது உண்டு. கீரை வகைகளுக்கு பூக்கள் பூக்கள் தேவையில்லை. இலைகள் மட்டும் பெரிது பெரிதாக இருந்தால் போதும் அல்லவா? எனவே சோயா மேக்கரில் இருக்கும் சத்துக்கள் இதற்கு சரியாக இருக்கும்.

soya-maker1

ஆனால் இவற்றை நேரடியாக கொடுக்காமல் சுடு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வடிகட்டி அந்த தண்ணீருடன் சம அளவிற்கு சாதாரண தண்ணீர் சேர்த்து பின்னர் பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் செடிகள் உடைய வளர்ச்சி சீராகவும், வேகமாகவும், இலைகள் பெரிது பெரிதாகவும் பூக்கும்.

- Advertisement -