உடல் எடை வேகமாக குறைய, உடலில் இருக்கும் சத்துக்கள் வேகமாக உயர, தினமும் காலையில் இதை சாப்பிட்டாலே போதும். அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

pachai-payaru-salad
- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய உடல் எடையும் குறைய வேண்டும். உடலில் இருக்கும் சத்துக்களும் குறையக்கூடாது. முடியும் கொட்டக்கூடாது. சருமமும் பளபளப்பாக இருக்க வேண்டும். என்றால் என்ன தான் சாப்பிடுவது? கொஞ்சம் சத்து மிகுந்த பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை ஏறி விடுகின்றது. சத்து குறைவாக சாப்பிட்டால், முடி கொட்டுகிறது. தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணுக்கு கீழே கருவளையம் வந்துவிடுகிறது. ஆரோக்கியத்தையும், உடல் எடையையும் சரிசம விகிதத்தில் எப்படித்தான் மேனேஜ் செய்வது என்று கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு சின்ன ரெசிபி!

pachai_payaru

காலையில நீங்க வேலைக்கு போனாலும் சரி, அரக்கபரக்க உட்கார்ந்து இதை சமைக்க வேண்டிய அவசியமே கிடையாது. பச்சையா எல்லா பொருட்களையும் போட்டு சேலட் ரெடி பண்ணி, சீக்கிரமா சாப்பிட்டுட்டு கிளம்பி விடலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் நிறைந்த ‘முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட் ரெசிபி’ தான் இன்று நாம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

100 கிராம் பச்சைப் பயிரை, முதல் நாளே, 5 மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, அதன் பின்பு நன்றாக தண்ணீரை வடிகட்டி விட்டு வெள்ளை துணியில் முடிந்து வைத்து விட்டால் போதும். மறுநாள் காலை அந்த பச்சை பயிறு நன்றாக முளை விட்டிருக்கும். இதை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பயிரில் இருக்கும் முளைகள் எல்லாம், உடையும் படி கழுவக் கூடாது. பார்த்து பக்குவமாக கழுவிக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும். வேக வைக்கக்கூடாது. பச்சையாகத் தான் சாப்பிட போகிறோம்.

pachai-payaru-salad1

பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் – 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய குடைமிளகாய் – 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2 ஸ்பூன், கேரட் துருவல் – 2 ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் முளைகட்டிய பச்சைப் பயிறுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு விட வேண்டும். இறுதியாக தேவையான அளவு உப்பு தூவி, கொள்ளுங்கள். காரத்திற்கு கொஞ்சமாக மிளகுத்தூளை தூவி கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவும் நல்லது.

- Advertisement -

இறுதியாக மிக மிக பொடியாக நறுக்கிய புதினா இலைகளையும், கொத்தமல்லி தழைகளையும் இதன் மேலே தூவி சாப்பிட்டு விடுங்கள். இதை சாப்பிட அவ்வளவு கஷ்டமாக ஒன்றும் இருக்காது. நன்றாக மென்று சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் மிக மிக ஆரோக்கியமாக உணர்வீர்கள்.

onion

உடல் எடையை குறைப்பதற்காக சாப்பாட்டை நீங்கள் குறைவாக எடுத்துக்கொண்டாலும், உங்களுடைய உடலுக்கு தேவையான சத்து, உற்சாகம் அனைத்துமே இந்த பச்சையாக முளைக்கட்டிய சேலட்டை சாப்பிடும்போது, உங்களுக்கு கிடைத்துவிடும்.

pachai-payaru-salad2

உடல் எடையும் சீக்கிரம் குறையும். அதோடு மட்டுமல்லாமல் முடி கொட்டாது. வயதான தோற்றம் சீக்கிரம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேலட்டை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுலபமான இந்த சாலட்டை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. முடிந்தவரை காலை உணவாக இதை சாப்பிடுவது மிக மிக நல்லது. இரவு நேரத்தில் எதை சாப்பிடக்கூடாது. சீக்கிரமாக ஜீரணம் ஆகாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -