கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுந்தர் பிச்சை நிதியாக கொடுத்த மிகப்பெரிய தொகை! எவ்வளவு என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

உலகமே இன்று கொரோனா பாதிப்பினால் முடங்கிப்போய் இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பல தொழிலதிபர்கள், பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு நிதி உதவிகளை கொரோனா தடுப்பு நிதியாக கொடுத்து உதவி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தன்னுடைய தாய் நாடான இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நிதியை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கொடுத்த நிதி தொகை எவ்வளவு? அந்த தொகையானது எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

sundar-pichai2

சுந்தர் பிச்சை அவர்கள் இந்தியாவிற்கு தடுப்பு நிதியாக 5 கோடி ரூபாயை கொடுத்து உதவி செய்துள்ளார். ‘கிவ்இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பு தொண்டு நிறுவனம் ஒன்று, நன்கொடை கொடுப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வருகிறது. இந்தத் தன்னார்வத் தொண்டிற்க்கு சுந்தர் பிச்சை அவர்கள் 5 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொரோனா பாதிப்பின் மூலம், தினசரி கூலி தொழிலாளர்கள் அதிகமாக பாதிப்பு அடைந்துள்ளதால், இந்தத் தொகையானது அவர்களுக்கு உதவி தொகையாக வழங்கப்படும் என்று கிவ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

sundar-pichai1

இதற்கு முன்பாகவே கூகுள் நிறுவனம் உலக மக்களுக்காக 800 மில்லியன் அமெரிக்க டாலரை நிதி தொகையாக கொடுத்துள்ளது. இதில் 200 மில்லியன் டாலர் தொகையை சிறு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படியாக தானாகவே முன்வந்து மற்றவர்களுக்கு உதவி செய்யும் பெரிய பெரிய நிறுவனங்களும், பெரிய மனிதர்களும் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணம். எவ்வளவுதான் காசு இருந்தாலும் கொடுப்பதற்கு என்ற ஒரு மனம் தேவைப்படுகிறது.

hundi

இதன் அடிப்படையில் நம்மால், இயன்றளவு எவ்வளவு தொகையை கொரானா தடுப்பு நிதிக்காக கொடுக்க முடியுமோ, அதை கொடுக்க முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் இந்த பதிவு.

English Overview:
Here we have Sundar pichai coronavirus India. Sundar pichai corona donation to India. Sundar pichai donation for coronavirus in India. Sundar pichai donation india for covid 19.