Swami Vivekananda Quotes Tamil : சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

vivekananda
- Advertisement -

மேற்கு வங்காள மாநிலத்தில் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி அவதரித்தார் “சுவாமி விவேகானந்தர்”. இவரது இயற்பெயர் நரேந்திரன். நரேந்திரன் என்கிற சொல்லுக்கு “மனிதர்களுக்கெல்லாம் தலைவன்” என்று பொருள். ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான நரேந்திரன் விவேகானந்தர் என்கிற பெயரை பெற்ற பின்பு, உலகில் ஞானம் வேண்டி ஏங்கிய மனிதர்களுக்கு ஞான வழிகாட்டியாக விளங்கினார்.

Swami Vivekananda

அக்காலத்தில் உலகின் பிற சமயத்தவர்கள் இந்தியாவின் மதமான இந்து மதத்தை குறித்து தாழ்வான கருத்து கொண்டிருந்த போது, 1893 அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடந்த சர்வ மத மாநாட்டில் இந்து மதத்தின் புகழை உலகறிய செய்த அவர் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றில் என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள தக்கது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் வைரங்கள் அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

- Advertisement -

“நம் மனஉறுதியே உலகை அசைய செய்வதாகும்”.

“உலகம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்”.

- Advertisement -

“தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும்”.

“பொறாமை, கோபம், பகை ஆகிய மூன்றையும் நீ வெளிப்படுத்தினால் அவை வட்டியும், முதலுமாக உன்னிடமே மீண்டும் வந்து சேரும்”.

- Advertisement -

“மிருகத்தன்மை, மனிதத்தன்மை, கடவுள்தன்மை ஆகிய மூன்றின் கலவையே மனிதன் ஆவான்”.

“உலகத்தை திருத்த விரும்பினால் முதலில் உன்னை திருத்திக்கொள். பின்பு உலகம் தானாகவே திருந்தும்”.

“கோழை தான் பாவங்களை செய்கிறான். தைரியசாலி ஒரு போதும் பாவங்கள் செய்வதை பற்றி மனதில் நினைப்பது கூட கிடையாது”.

Swami Vivekananda

“இளைஞர்களுக்கு தாங்கள் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தால் அவர்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை”.

“தாய் போன்ற ஒரு தெய்வம் வேறு எதுவும் இல்லை”.

“உலக மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்”.

“உயிர்வாழும் விருப்பம் எந்தளவிற்கு இருக்கிறதோ அதே அளவு விருப்பம் இருந்தால் நீ கடவுளை காண முடியும்”.

“சமுதாயத்தில் உள்ள மக்கள் மேன்மையடைவதே நாட்டின் முதல் தேவை. இறைஞானம் பிறகு தானாகவே உங்களுக்கு கிடைக்கும்”.

இதையும் படிக்கலாமே:
சுவாமி விவேகாந்தர் வாழ்க்கை வரலாறு

Swami Vivekananda

மேலைநாடுகளின் அடிமைத்தளையில் இருந்து பாரதம் விடுதலை பெற வேண்டும் என்கிற இலட்சியத்தை தங்களுக்கு விவேகாந்தரின் சொற்களே ஊட்டியதாக விடுதலை போராட்ட வீரர்களான காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோர் கூறியிருக்கின்றனர். அக்கால இளைஞர்களின் நம்பிக்கை பெற்ற புரட்சி நாயகனாக விளங்கினார் சுவாமி விவேகாந்தர். எனவே தான் அவரின் பிறந்த தினமான ஜனவரி 12 ஆம் தேதி இளைஞர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகத்தான அந்த ஞானி சமுதாயம் மேன்மை அடைய கூறி அறிவுரைகளை ஏற்று நடப்போம்.

இதையும் படிக்கலாமே:
146 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் இருந்து வெளிப்பட்ட அதிசய சிவலிங்கம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Swami vivekananda Quotes in Tamil. It is also called as Vivekananda speech in Tamil or Vivekananda sorpolivu in Tamil. In this National youth day, we can learn about Vivekananda ponmoligal in Tamil.

- Advertisement -