உங்கள் மனதில் தீய எண்ணங்கள் அலைபாய்கிறதா? 2 நாட்கள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்! எந்த விஷயத்தில் நீங்கள் அடிமையாக மாட்டிக் கொண்டிருந்தாலும், அதனை மறக்கடிக்க செய்யும் அற்புத ஸ்லோகம்!

murugan-om

இந்த உலகத்தில் யாருமே நல்லவர்! கெட்டவர்! என்று இல்லை. எல்லோருக்குள்ளும் நல்ல விஷயமும் உண்டு. கெட்ட விஷயங்களும் உண்டு. நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் இந்த இரண்டும் சேர்ந்தது தான் மனித மனம். எண்ணங்கள் மட்டுமல்ல! இவ்வுலகில் இருக்கும் அத்தனைக்கும் நல்லவை, தீயவை என்கிற இரண்டு பக்கம் உண்டு. அதில் மனிதனுடைய மனம் மட்டும் விதிவிலக்கல்ல! இந்த வகையில் நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் நீங்க இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்! அது என்ன மந்திரம்? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

sad-crying4

ஒருவரை முற்றிலும் தீயவர் என்று ஒதுக்கி விட முடியாது! கல்லுக்குள் ஈரம் இருப்பது போல, அவருக்குள்ளும் நிச்சயமாக மனிதம் கசியும்! எந்த மனிதனும் முழுமையாக நல்லவராக இருக்க முடியாது! அதே போல தான் எந்த ஒரு மனிதனும் முழுமையாக கெட்டவராகவும் மாறிவிட முடியாது! இது தான் நிதர்சனமான உண்மை. ‘நான் ரொம்ப நல்லவன்’ என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவன் யவரும், மனதளவில் ஏதாவது ஒரு தவறை செய்து கொண்டு தான் இருப்பான். ‘நான் ரொம்ப கெட்டவன்’ என்று தன்னைத் தானே மட்டம் தட்டி கொள்பவனிடம், மனதளவில் நேர்மையும், நியாயமும் இருக்கும்.

சில சமயங்களில் நம் மனதில் நம்மை அறியாமல் தீய எண்ணங்கள் மேலோங்கி காணப்படும். ஒரு விஷயத்தை தவறு என்று தெரிந்தே நாம் செய்து கொண்டிருப்போம். அது ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்! அது அவரவர்களின் சூழ்நிலையை பொறுத்தது. இந்த விஷயத்தில் இருந்து நம்மால் வெளியே வரவும் முடியாது! அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது தவிப்போம். தீய எண்ணங்களுக்கு அடிமையாகி விட்டால் அதிலிருந்து மீள்வது என்பது மிகப் பெரிய போராட்டமாக மாறிவிடும். ஆரம்பக்கட்டத்திலேயே தீய எண்ணங்களை ஒழித்து விட வேண்டும். இதனை வளர விட்டுவிட்டால் மாற்றிக் கொள்வது கடினம் தான். எனினும் முடியாத காரியமல்ல!

swaminathan

மனதில் தேங்கிக் கிடக்கும் கெட்ட எண்ணங்களை நீக்க செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சாமி மலையில் அருளும் சுவாமிநாதனுக்கு உரிய இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்க வேண்டும். மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர செய்யும் அற்புதமான சக்தி இந்த ஸ்லோகத்திற்கு உண்டு. எதற்கும் அடிமை ஆகாமல் உங்கள் மனதை உங்கள் சொல்படி கேட்க வைக்கும்.

சுவாமிமலை சுவாமிநாத ஸ்லோகம்:
காஷாய ஸம்வீத காத்ரம்: காம
ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷான்ன பாத்ரம்
காருண்ய ஸம்பூர்ண நேத்ரம்: ஸக்தி
ஹஸ்தம் பவித்ரம் பஜே ஸம்பு புத்ரம்:

Murugan_ Swamimalai

ஸ்லோகத்தின் தமிழ் விளக்கம்:
ரிஷிகளைப் போல எளிமையான வஸ்திரம் கொண்டு அலங்கரிக்கப்பட்டவரே! மோகம், காமம் போன்ற தீய எண்ணங்களை பக்தர்களிடம் இருந்து ஒழிக்க திருவோடு ஏந்தியவரே! வேலை கையில் ஏந்திக் கொண்டு, கருணை மழை பொழியும் விழிகளை பெற்றவரே! தம்மை நாடி வந்த பக்தர்களை புனிதம் அடைய செய்பவரே! தந்தைக்கே உபதேசம் புரிந்த சுவாமிநாத சுவாமியே! உம்மை வணங்குகிறோம்! என்னுடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை ஒழித்து, நல்ல எண்ணங்களை பெருக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.