சுவாதி நட்சத்திரக்காரர்கள் செல்வம் வளம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

rahu

நாக பாம்புகள் தனது பற்களில் உயிரை பறிக்க கூடிய விஷம் கொண்ட ஒரு உயிரினமாக இருக்கிறது. இத்தகைய கடுமையான விஷத்தன்மை கொண்ட எதுவும் ராகு பகவானின் அதிகத்திற்குட்பட்டதாக இருக்கிறது. வானில் இருக்கும் நட்சத்திரங்களில் சுவாதி நட்சத்திரம் ராகு பகவான் ஆதிக்கத்திற்குட்பட்ட நட்சத்திரமாக இருக்கிறது. இந்த சுவாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் பொருளாதார வளமை பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

rahu 1

27 நட்சத்திரங்களின் வரிசையில் பதினைந்தாவது நட்சத்திரமாக வருவது சுவாதி நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் இருக்கிறார். சுவாதி நட்சத்திரத்தின் அதிதேவதையாக வாயு பகவான் இருக்கிறார். சுவாதி நட்சத்திரக்காரர்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தாலும் தன்னடக்கத்தோடு நடந்து கொள்வார்கள். சுவாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் பொருளாதார ஏற்றங்கள் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதால் அவர்களின் வாழ்வில் ஏற்படும் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கும். காளஹஸ்தி, திருப்பாம்புரநாதர் போன்ற கோயில்களுக்கு சென்று ராகு சாந்தி பூஜை செய்து வழிபடுவதாலும் நன்மைகள் உண்டாகும். புற்றுநோய் பாதிப்பு கொண்ட ஏழை நோயாளிகளுக்கு புற்று நோய் மருந்துகளை வாங்கி தருவது உங்களுக்கு மிகுந்த நன்மைகளை தருகிற பரிகாரமாக அமையும்.

Goddess Saraswathi

சனிக்கிழமைகளில் கருப்பு எள் மற்றும் சர்க்கரை கலந்த பானகத்தை நவகிரகங்களில் சனி பகவான் மீதோ அல்லது ஏதேனும் ஒரு மரத்தின் வேருக்கு ஊற்றி விடுவதால் உங்கள் நட்சத்திர தோஷங்கள் நீங்கும். தினமும் சரஸ்வதி தேவியை வழிபட்டு வருவதால் நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஆண்டு வெயில் எப்படி இருக்கும்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Swathi nakshatra pariharam in Tamil. It is also called as Swathi natchathiram in Tamil or Swati nakshatra devata in Tamil or Swathi natchathiram valipadu in Tamil.