தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020 – மகரம், கும்பம், மீனம்.

மகரம்:

Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் சீராக இருந்தாலும், செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன படுத்திக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். திடீர் பயணங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. முடிந்தவரை அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். சொந்தத் தொழில் சிறப்பாக செல்லும். அலுவலக பணியில் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்களுடைய பேச்சுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்.

தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. தாராளமாக திருமண பேச்சினை தொடங்கலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. உயர்கல்விக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தில் உள்ள பெண்கள் சூழ்நிலையை புரிந்து அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை அன்று முருகனை வழிபடுவது மன அமைதியைத் தரும்.

கும்பம்:

- Advertisement -

Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் சீராக இருக்கும். முடிந்தவரை செலவைக் குறைத்துக் கொண்டு எதிர்காலத்திலும், பணத் தேவை இருக்கும் என்பதை புரிந்து கொண்டு, சேமித்து வைப்பது மிகவும் நல்லது. ஏழரைச் சனி காரணமாக வேலையில் சில பிரச்சினைகள் வந்துபோகும். உஷாராக இருந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் அக்கறையோடு செயல்பட்டால் நல்ல லாபத்தை பெற முடியும். எந்த ஒரு முடிவையும் நன்றாக சிந்தித்து எடுக்க வேண்டியது அவசியம். கவனத்தோடு உங்களது பணியை செய்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

புது வீடு வாகனம் வாங்கும் யோகம் கூட சிலருக்கு வரலாம். திருமண பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கப்போகிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்:
சனிக்கிழமை தோறும் அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணை வாங்கித்தந்து வழிபட்டால் நல்ல பலனைப் பெறலாம்.

மீனம்:

Meenam Rasi

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களது எல்லா செயல்பாட்டிலும் வெற்றி அடையப் போகிறீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அலுவலகப் பணியில் உங்களைத் தேடி பல பொறுப்புகள் வரப்போகிறது. நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டால் நிச்சயம் முன்னேற்ற பாதையில் செல்லலாம். வரவு சீராக இருந்தாலும், உங்கள் கையில் இருக்கும் பணத்தை விட செலவு அதிகமாக தான் இருக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முன்னேற்றப்பாதையில் செல்லும் யோகம் இருந்தாலும் சற்று உஷாராக நடந்துகொள்வது நல்லது.

பெண்களுக்கு இந்த வருடம் சிறப்பான வருடமாக அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முன் கோபத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்து விடாதீர்கள். பொறுமை தேவை என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் எல்லாம் சுமுகமாக நடக்கும்.

பரிகாரம்:
தினம்தோறும் முருகனை நினைத்து மனதார வேண்டிக் கொண்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவு காலம் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே
தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020 – துலாம், விருச்சிகம், தனுசு.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tamil new year Rasi palan 2020, Tamil puthandu Rasi palangal 2020, Sarvari tamil puthandu Rasi palan 2020. Tamil puthandu rasi palan 2020 in Tamil.