தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020 – மேஷம், ரிஷபம், மிதுனம்.

2020 Tamil new year rasi palan mesham

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அமோகமான வருடமாக தான் பிறக்கப் போகிறது. சார்வரி வருடம் உங்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த வருடத்தை தொடங்கலாம். எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி உண்டு. உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற போகிறது. பணவரவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. பண வரவு அதிகமாக இருந்தாலும், பிற்காலத்தில் தேவைப்படும் என்று சேமிப்பு செய்வது நல்லது. எல்லா வெற்றியையும் அடைய வேண்டுமென்றால் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மட்டும் சற்று மனதில் கொள்ளவேண்டும். முடிந்த வரை யாரிடமும் அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சொந்தத் தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரை வாங்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் அலுவலகத்தில் உங்கள் கை தான் ஓங்கி நிற்க போகிறது. இந்த வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் புது புது வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். நீங்கள் தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வருடம் முழுவதும், முடிந்தவரை கடன் வாங்காமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். கடனை நீங்கள் யாருக்காவது கொடுப்பதாக இருந்தாலும் உஷாராக இருந்து கொள்வது அவசியம். ஆக மொத்தத்தில் பண பரிமாற்றத்தின் போது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரச்சினைகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அஷ்டம சனி இருப்பதால் நாவடக்கம் தேவை. வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி நிலவும். இருந்தாலும் கடினமான உழைப்பினால் உங்களது வெற்றிக் கொடியை நிலைநாட்டுவீர்கள். புதியதாக தொழில் தொடங்கலாம். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாகத்தான் இருக்கும். உங்கள் உடன் வேலை செய்பவர்களே, உங்களை பார்த்து பொறாமை படுவார்கள். உடன் வேலை செய்பவர்களிடம் மட்டும் சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களுக்கு எதிரியாக மாறும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிக்க வேண்டும். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் மன தைரியத்தோடு எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.

ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. உறவினர்களிடமும், தெரிந்தவர்களிடமும் அனாவசியமாக உங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் பழகும்போது எல்லையை தாண்டி பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

மிதுனம்:

Mithunam Rasi

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. இதுநாள்வரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் இந்த வருடம் நடந்து முடிந்துவிடும். உங்களின் சுய மரியாதை அதிகரிக்கும். இதுவரை ஏளனமாக பேசிய சொந்தங்கள் இப்போது உங்களை உயர்த்தி பேசப் போகிறது. கணவன்-மனைவிக்கிடையே மட்டும் சின்ன சின்ன சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சொந்த தொழிலில், புதிய முயற்சியில், வெற்றியடைவீர்கள். லாபம் அதிகரிக்கும். இது நாள் வரை அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த வருடம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். உங்கள் மேலதிகாரிகள் உங்களை பாராட்டும் அளவிற்கு திறமையாக செயல்பட போகிறீர்கள். சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது. பதவி உயர்வும் கிடைக்கப்போகிறது. சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்தாலும் வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டே இருப்பீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எப்படிப்பட்ட வெற்றியை அடைந்தாலும் நாவடக்கம் மட்டும் தேவைப்படுகிறது. இல்லையென்றால் பிரச்சனையில் சிக்கி கொள்ள நேரிடும். நீங்கள் நல்லதுக்கு என்று நினைத்து சொன்னாலும், அது தவறாக போய் முடியும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஜாக்கிரதையாக பேசுங்கள். மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்:
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tamil new year Rasi palan 2020, Tamil puthandu Rasi palangal 2020, Sarvari tamil puthandu Rasi palan 2020. Tamil puthandu rasi palan 2020 in Tamil.