தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020 – துலாம், விருச்சிகம், தனுசு.

Tamil-new-year-2020

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. எந்த ஒரு செயல்பாட்டிலும் ஆர்வத்தோடு ஈடுபடும் நீங்கள், தைரியத்தோடு செயல்பட்டு வெற்றி அடைவதில் கில்லாடியாக திகழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுபகாரியங்கள் கைகூடி வரும். இதுநாள்வரை குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. பண பரிமாற்றத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். அலுவலகப் பணி எப்பவும்போல செல்லும். முடிந்தவரை உடன் பணிபுரிபவர்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விட்டு, விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பல தடைகளைத் தாண்டித்தான் வெற்றி அடைய முடியும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் முடிந்தவரை உங்களது வீட்டு விஷயத்தை அக்கம்பக்கத்தினரிடம் சொல்வதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. வாகனங்களில் செல்லும்போது துலாம் ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:
தினமும் பெருமாள் வழிபாடு மன அமைதியைத் தரும்.

விருச்சிகம்:

- Advertisement -

Virichigam Rasi

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரக்கூடிய வருடமாக தான் அமையப் போகின்றது. பண வரவிற்க்கு எந்த ஒரு குறைபாடும் வராது. குடும்பதில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துமே இந்த வருடம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். வெளிநாட்டில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். எல்லா காரியங்களும் வெற்றியை நோக்கி செல்வதால் சற்று தலைகணம் மேலோங்குவது போல் தெரியும். முடிந்தவரை அலட்சியமான பேச்சையும், அனாவசியமான பேச்சையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கப் போகும் நேரம் வந்துவிட்டது. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், எதிர்பார்த்த சம்பள உயர்வும், உங்களைத் தேடி வருவதால் மனமகிழ்ச்சியோடு உங்களது பணியை செய்து முடிப்பீர்கள்.

மொத்தத்தில் கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டு, பேச்சில் கவனம் இருந்தால் இந்த வருடம் முழுவதும் உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. திருமணம் தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க நேரம் காலம் வந்துவிட்டது. மொத்தத்தில் விருச்சக ராசி காரர்களுக்கு இந்த வருடம் மிக அற்புதமான பலனை தரக்கூடிய வருடமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

பரிகாரம்:
தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் பிறக்கப் போகின்றது. அனாவசியமாக யாரையும் நம்பி உங்கள் கையில் இருக்கும் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள். விரைவாக முடிய வேண்டிய வேலை கூட, உங்கள் கையிலிருந்து அடுத்தவர் கைக்கு மாறும் போது இழுத்தடிக்கும். அனாவசியமான வாக்குவாதத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. நாவடக்கம் அவசியம் தேவை. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் தொடங்கலாம். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்தத் தொழிலை விரிவு படுத்துவதில் அதிக ஆர்வம் காண்பீர்கள்.

வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கும் கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்துவிடும். உடல் நலத்தை கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக காலில் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்:
தினம்தோறும் சிவபெருமானை நினைத்து 5 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே
தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020 – கடகம், சிம்மம், கன்னி.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tamil new year Rasi palan 2020, Tamil puthandu Rasi palangal 2020, Sarvari tamil puthandu Rasi palan 2020. Tamil puthandu rasi palan 2020 in Tamil.