மஞ்சள் கறை படிந்த உங்களது பற்களை 2 நிமிடத்தில் வெள்ளையாக, பளபளவென மாற்றிவிட முடியும். அதற்கு இந்த 2 பொருள் போதும்.

teeth
- Advertisement -

நிறைய பேரால் வாய்விட்டு சிரிக்கு முடியாது. காரணம், அவர்களுடைய பற்கள் பழுப்பு நிறத்தில், மஞ்சள் கறை படிந்து இருப்பது தான். நம்முடைய புன்னகை அழகாக இருந்து விட்டாலே போதும். எல்லோருக்கும் பிடித்தவர்களாக நம்மால் மாறிவிட முடியும். பற்கள் வெள்ளை நிறமாக இருப்பவர்களால் வாய்விட்டு சிரிக்க முடியும். பற்களில் மஞ்சள் நிறம் படிந்திருந்தால் சிரிப்பதற்கு கொஞ்சம் சிரமம்தான். சரி, மஞ்சள் படிந்த கறையை சுலபமான முறையில் எப்படி நீக்குவது என்பதைப் பற்றித்தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் 2 குறிப்புகளில் உங்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம்.

உங்களது பல்லில் மஞ்சள் நிறம் படிந்திருக்கிறது என்ற காரணத்தினால், செயற்கையாக கிடைக்கும் பற்பசைகளை வாங்கி வைத்து, பற்களை தேய்த்து கொண்டே இருந்தால், மஞ்சள் நிறம் நீங்கி விடாது. ஒரு சிலருக்கு பற்கள் வெண்மையாக இருக்கும். ஒரு சிலருக்கு பற்கள் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில், பழுப்பு நிறம் கலந்த படி தான் இருக்கும். அது இயற்கையானது. வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று, எதையாவது போட்டு பற்களில் தேய்த்து கொண்டே இருந்தால், பல்லின் மேல் இருக்கக்கூடிய எனாமல் நீங்கிவிடும். அதன் பின்பு பல் கூச்சம் ஏற்பட்டுவிடும். அதன்பின்பு பல் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.

- Advertisement -

முடிந்தவரை பல்லின் வெண்மைக்கு நீங்களே செயற்கையான முறையில் பற்பசைகளை வாங்கி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். சரி, குறிப்பை பார்த்து விடுவோம். முதல் குறிப்பு. மிக மிக சுலபமான குறிப்பு. இட்லி மாவுக்கு போடப்படும் சோடா உப்பு, நம் எல்லார் வீட்டு சமையலறையிலும் இருக்கும். அடுத்ததாக தேங்காய் எண்ணெய். இந்த இரண்டு பொருட்கள் போதும்.

teeth1

ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் அளவு சோடாவையும், தேங்காய் எண்ணெயையும் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கலக்கி, இந்த கலவையை பிரஷ்ஷால் தொட்டு மெதுவாக உங்களது பல்லை 5 நிமிடங்கள் வரை தேய்த்து கொடுக்க வேண்டும். இப்படியாக வாரம் இரண்டு முறை செய்தால் கூட பல்லின் நிறம் வெள்ளையாக மாறும். ட்ரை பண்ணி பாருங்க. இந்த குறிப்பையும் கூட தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. நான்கிலிருந்து ஐந்து முறை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இரண்டாவதாக பல்லில் தேவையற்ற கறைகள் படிந்திருந்தால், அதாவது சில பேருக்கு அதிகமாக தேனீர் குடிப்பதால் கறை படிந்து இருக்கும். வெற்றிலை பாக்கு கறை, சில பேருக்கு தேவையற்ற பழக்கங்களினால் கறை படிந்து இருக்கும். இப்படிப்பட்ட விடாப்பிடியான கறைகளை நீக்க என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

இந்த குறிப்புக்கு பூண்டு, தூள் உப்பு, கொஞ்சமாக எலுமிச்சை பழச்சாறு இது மட்டுமே போதும். பூண்டை பொடியாக துருவிக் கொள்ளுங்கள், அதில் 1/2 ஸ்பூன் அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு கொஞ்சமாக எலுமிச்சம்பழ சாறுவிட்டு, இதை பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பசையை உங்களது விரலால் எடுத்து கறைபடிந்த பற்களின் மீது நன்றாக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும். ஈறுகளில் படும்படி தேய்க்க வேண்டாம்.

- Advertisement -

salt-and-lemon

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உங்களது வாயை இப்படி சுத்தம் செய்து பாருங்கள். அதாவது வாரத்தில் மூன்று நாட்கள் இதை செய்தாலே உங்களது பல்லில் இருக்கும் கறை குறைவதை உங்களால் கண்கூடாக காணமுடியும். பல்லை வெள்ளையாக வேண்டும் என்பதற்காக எந்த ஒரு குறிப்பையும் தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கக் கூடாது. பல் பிரச்சனை வருவதற்கு இதுவே காரணமாகிவிடும்.

teeth2

வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் முயற்சி செய்து விட்டு, உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும் பட்சத்தில், மாதத்திற்கு ஒருமுறை இப்படிப்பட்ட குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, அடிக்கடி பல்லை சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக எந்த ஒரு ரெமிடியையும் தொடர்ந்து பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. உங்களுடைய பல் பிரச்சனை தீராமல் இருக்கும் பட்சத்தில், பல் மருத்துவரை அணுகுவதே நல்லது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இது தெரிந்தால் இனி எலுமிச்சை தோலை ஒண்ணு கூட தூக்கி போடவே மாட்டீங்க! பத்திரமா பிரிட்ஜில் ஸ்டோர் செஞ்சு வச்சிப்பிங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -