1200 வருடங்களுக்கு முன்பு ஒரு மலையை முழுமையாக குடைந்து உருவாக்கப்பட்ட சிவன் கோவில்

kailasanadhar-kovil

அவுரங்காபாத் நகரில் இருந்து கிட்டதட்ட 29 கிலோமீட்டர் தொலைவில் கைலாசநாதர் என்னும் அழகிய சிவன் கோவில் உள்ளது. ஒரு மிக பெரிய மலையை முழுவதுமாக குடைந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.

kailasanathar temple

8 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட ராஷ்டிரகூட மன்னர்களால் இந்த கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அனால் இந்த கோவிலில் உள்ள பல சிற்பங்களில் பல்லவர்களின் கைவண்ணமும் உள்ளது ஆகையால் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று படி இந்த கோவிலை கட்ட பல நூறு ஆண்டுகள் ஆகி இருக்க கூடும் என்றும் அதனால் இந்த கோவில் பல மன்னர்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கோவிலை கட்ட கிட்டதட்ட 400,000 டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. 250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முழுவதையும் தங்களுடைய தோளில் தாங்குவதைப்போல மிகப்பெரிய யானைச் சிற்பங்கள் அடிபீடத்தில் வரிசையாக இங்கு வடிக்கப்பட்டுள்ளன.

kailasanathar templeஇந்தக் கோயிலில் கைலாசநாதர் மேற்கு நோக்கிய வண்ணம் இருக்கிறார். கோயிலின் வடக்குப் புறத்தில் உள்ள சிற்பங்களில் ராவணன் தன்னுடைய 10 தலைகளில் 9 தலைகளை சிவனுக்கு காணிக்கையாக தருவது போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அந்த ஒன்பது தலைகளையும் மாலையாக கோர்த்து சிவன் அதை அணிந்திருப்பது போன்ற சிற்பங்களும் உள்ளன.

இது போன்ற எண்ணிலடங்கா பல சிற்பங்கள் இந்த கோவிலில் உள்ளன. இந்த கோவிலை வடிக்க நூற்றிற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆனதால் 3 வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த சிற்பிகள் இணைந்து இங்குள்ள சிலைகளையும் சிற்பங்களையும் வடித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

kailasanathar templeஇவளவு அற்பதங்களை கொண்டு இந்த கைலாசநாதர் கோவிலை கட்டுவதற்கு முன்பே தென் இந்தியாவில் உள்ள இரண்டு கைலாசநாதர் கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதில் ஒன்று காஞ்சிபுரத்திலும் மற்றொன்று கர்நாடக மாநிலத்திலும் உள்ளது. இந்த கோவில்களை மாதிரியாய் வைத்து தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள மிக பெரிய அறிவியல்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஆன்மீக கதைகள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.