இன்று இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் மிகுந்த பலன்கள் உண்டு தெரியுமா?

perumal

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர் அருகில் இருக்கும் தாடிக்கொம்பு எனும் ஊரில் இருக்கும் புகழ் பெற்ற பழமையான ஆலயம் தான் தாடிக்கொம்பு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். விஜயநகர பேரரசு வம்சத்தில் வந்த அச்சுத தேவராயர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமான பெருமாள் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்கிற பெயரிலும், லட்சுமிதேவி சௌந்தரவல்லி தாயார் என்கிற பெயரிலும் வணங்கப்படுகிறார்கள்.

perumal

மாண்டூகம் என்றால் வடமொழியில் தவளை என்று பொருள்.கோயிலின் தல புராணங்கள் படி தவளையாக மாறும் படியான சாபத்தை பெற்ற மாண்டூக முனிவர் தனது தவளை வடிவம் நீங்கி, மீண்டும் பழைய நிலையை பெறுவதற்கு இந்த தாடிக்கொம்பு தலத்திற்கு வந்து தவம் இயற்றினார். அப்போது தாலாசுரன் என்கிற அரக்கன் மாமுனிவரை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதனால் வருந்திய முனிவர் தனது துன்பத்தை போக்குமாறு திருமாலை நினைத்து வேண்டினார்.

மாண்டூக முனிவரின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் மதுரை கள்ளழகர் வடிவில் வந்து தாராசுரம் வந்த அசுரனை வதம் முனிவர் முனிவரின் சாபத்தை போக்கி அருளினார் தனது துன்பத்தைப் போக்கிய பெருமான் போகமுனிவர் இத்தலத்திலேயே தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் புரியுமாறு வேண்ட அவ்வாறே திருமால் சௌந்தரராஜ பெருமாள் என்கிற பெயரில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்

srinivasan-perumal

புராதன மற்றும் தெய்வீக சிறப்புக்கள் கொண்ட இந்த தாடிக்கொம்பு வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று காலை 9 மண 10.30 மணிக்குள்ளாக கோவில் கொடியேற்றம் மற்றும் அதனை தொடர்ந்து சூரிய பிரபை, சந்திரப் பிரபை அலங்காரத்தில் சுந்தரராஜப் பெருமாள் தேரடி வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு அன்னவாகனத்திலும், 9-ந்தேதி மாலை சிம்ம வாகனத்திலும், 10-ந்தேதி மாலை கருடவாகனத்திலும், 11-ந் தேதி மாலை சேஷவாகனத்திலும், 12-ந் தேதி மாலை யானை வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

- Advertisement -

Perumal

தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோயில் வைபவத்தில் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் அதிகரிக்கும். இன்றைய தினம் சுவாதி நட்சத்திரம் ஆகும். சுவாதி நட்சத்திரம் என்பது நரசிம்ம மூர்த்தியின் அவதார நட்சத்திரம் ஆகும். எனவே இந்த தினத்தில் இந்த தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்கு வந்து நரசிம்ம மூர்த்திக்கு பூக்கள் மற்றும் துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்வதால் தீர்க்க முடியாத கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியும். மனநிலை பாதிப்பு சித்தபிரம்மை பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உண்மையான பக்திக்கு அத்தி வரதர் தந்த பரிசு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thadikombu temple festival in Tamil. It is also called as Thadikombu varatharaja perumal temple in Tamil or Dindigul thadikombu perumal kovil in Tamil or Kadan prachanai theera in Tamil or Thadikombu perumal in Tamil.