ரெட்டை சுழி இருந்தால் ‘இரண்டு திருமணம்’ என்பார்களே அது உண்மையா? தலைச்சுழியின் பலன்களை தெரிந்து கொள்வோமா?

suzhi-palan

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்கள் தலையில் எத்தனை சுழிகள் உள்ளது என்பதை நாம் ஆராய்ந்து பார்த்து இருப்போம். சிறுவயது முதலே ரெட்டை சுழி இருந்தால், இரண்டு திருமணம் நடக்கும் என்று கூறி வைத்ததே அதற்கு காரணம். இவ்வாறு தலையிலுள்ள சுழிகளை வைத்து ஜோதிடம் கூறுவதுண்டு. தலைச்சுழி என்பது செயற்கையாக உருவாக்கப்படுவதில்லை. கைரேகை போன்று நம் அங்கத்தில் தானாகவே உருவாகக் கூடிய ஒரு விஷயம் தான். அங்க சாஸ்திரம் என்னும் நூல் அங்கங்களை சாமுத்ரிக்கா லட்சணமாக பலன் கூறும் ஜோதிட சாஸ்திர நூலாகும். இந்நூல் தலைச்சுழிகளை பற்றி அற்புதமாக பலன் கூறுகிறது. உண்மையில் ரெட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா? ஒவ்வொரு சுழிக்கும் என்னென்ன பலன்கள்? என்பதைப் பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.

olai-chuvadi

தலைச்சுழியை வைத்து தலையெழுத்தை கூறலாம். தலையெழுத்து மட்டுமல்ல காதலையும் தீர்மானிக்க முடியுமாம். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெறும் பொழுது ஜாதகர் காதல் வயப்படுகிறார். பிறகு குருவின் ஆசியுடன் திருமணமும் செய்து கொள்கிறார். எனவே உங்களின் வாழ்க்கைக்கும் ஜோதிடத்திற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. உங்களுக்கு தலையில் வலப்பக்கம் சுழி இருந்து, நீங்கள் சந்திக்கும் நபர் இடப்பக்கம் சுழி உள்ளவராக இருந்தால், நீங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி விடுவீர்கள். உங்களின் அன்பு ஆழமானதாக மாறிவிடும். இது ஆணுக்கும், பெண்ணுக்கும் மட்டுமல்ல. ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் நட்பு கொள்வதற்கும் இந்த பலன் பொருந்தும். ஒரு பெண் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகுவதற்கும் இந்த சுழி பலன் பொருத்தமாக இருக்கும். ஒரே பக்கம் சுழி கொண்ட நண்பர்கள் அல்லது காதலர்கள் அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வார்கள். கருத்து ஒற்றுமை அவர்களிடம் அறவே இருக்காது.

உங்களது தலையில் வலப்புறம் ஒற்றை சுழி இருந்தால், நீங்கள் மிகவும் அன்பானவராக இருப்பீர்கள். உங்களுக்கு பெரிய நட்பு வட்டம் சூழ்ந்திருக்கும். சொந்த பந்தங்கள் ஏராளமானோர் உங்களுக்கு இருப்பார்கள். எந்த கஷ்டத்தையும் சமாளிக்கும் திறன் கொண்டவராக இருப்பீர்கள். ஒற்றை சுழிக்கு பதிலாக ரெட்டைசுழியாக இருந்து வலப்பக்கம் சுழன்று இருந்தால் நீங்கள் வசதி படைத்தவர்களாக இருப்பீர்கள். பேரும், புகழும் நிலைத்து உள்ளவராக இருப்பீர்கள்.

thalai-suzhi1

உங்களுக்கு தலையில் இடது புறத்தில் ஒற்றை சுழியாக இருந்து, அதுவும் வலதுபுறமாக சுழன்று இருந்தால், உங்களின் வாழ்க்கையே போராட்டக் களமாக இருக்கும். சதா கஷ்டம், கஷ்டம் என்று காலம் ஓடிக் கொண்டிருக்கும். சிறுவயது முதலே பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இது நிரந்தரம் அல்ல எனவே கவலை கொள்ள தேவையில்லை. உங்களின் நடுவயது வரை மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தாலும், அதன்பின் நல்ல நிலைமைக்கு வந்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி துன்பமாகவும், மறுபகுதி இன்பமாகவும் அமையும். போராடி வென்றவர்கள் பட்டியலில் இடது சுழிக்காரர்களும் அடங்குவார்கள்.

- Advertisement -

அதுவே இடது பக்கத்தில் ஒற்றைச் சுழிக்கு பதிலாக, இரட்டை சுழி இருந்து, இரண்டும் இடது புறமாகவே சுழன்று அமைந்துவிட்டால் மிகுந்த துயரத்தை வாழ்க்கையில் சந்திப்பீர்கள். சொல்லப்போனால் நாய் படாதபாடு தான் என்றே கூறலாம். நீங்கள் போராடாமல் எதுவும் உங்கள் கைக்கு கிடைக்காது. பெரிய விஷயங்களுக்காகவும் அதிக அளவில் போராட வேண்டி இருக்கும். சில பேருக்கு இரண்டு, மூன்று என்று அதிக எண்ணிக்கையில் சுழிகள் இருக்கும். அதில் 3 சுழிகள் இடது புறத்தில் அமைந்தால், சிறு வயதில் தனியே போராடுபவர்களாக இருப்பீர்கள். இவர்கள் பெற்றோர்களை பிரிந்து வாழும் அல்லது இழந்து வாழும் சூழ்நிலை ஏற்படலாம்.

thalai-suzhi2

ஒருவருக்கு தலையின் சுழிகள் வலது, இடது என்று ஆங்காங்கே இருந்தால், அவர்களின் வாழ்வில் கஷ்டமும், பெரும் செல்வமும் என்று மாறி, மாறி ஏற்ற, இறக்கத்துடன் வாழ்வு அமைந்து விடும். சில காலம் கஷ்டமும், சில காலம் இன்பமயமான வாழ்வும் வாழ்வார்கள். மூன்றிற்கும் அதிகமாக சுழிகள் இருந்தால் வலது புறத்தில் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நல்ல பலன்களும், இடது புறத்தில் அதிகமாக இருந்தால் கெட்ட பலன்களும் அவர்களுக்கு வாய்க்கும். ரெட்டைச்சுழி இருந்தால் ரெண்டு திருமணம் என்பதெல்லாம் பேச்சு வழக்கு. உண்மை இல்லை.

thalai-suzhi

வாழ்க்கையில் நன்றாக இருக்கும் வரை எதையும் நாம் நம்புவதில்லை. அதுவே கஷ்டங்கள் சூழும் பொழுது அதுவரை நம்பாத பலவற்றையும் நாம் நம்பத் துவங்கி விடுவோம். இதுவே மனித மனதின் தாத்பரியம். நமக்கு நடக்காத வரை அது மூட நம்பிக்கையே! நமக்கு நடந்துவிட்டால், மூடநம்பிக்கையும் நம்பிக்கை ஆகிவிடும். இது சரியான மனப்பக்குவமா? இல்லை. எந்த சூழ்நிலையிலும் மனதை தெளிவாக வைத்திருப்பதே ஆரோக்கியமாகும். உங்களை சுற்றி நடக்கும் எல்லா விஷயமும் பொய்யும் இல்லை, உண்மையும் இல்லை. கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை, இல்லை என்று ஒதுக்கிவிடவும் வேண்டாம். ஆம் என்றும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம். தெளிவான கண்ணோட்டத்தில் உற்றுநோக்கினால் உண்மைகள் விளங்கிவிடும் அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே
பிறரை எடை போடுவதில் கில்லாடிகளாக இருக்கும் மே மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rettai suzhi astrology in Tamil. Thalai suzhi. Thalai suli. Thalai suli in Tamil. Thalaiyil suli.