- Advertisement -

தீராத மன கஷ்டத்தையும், துயரத்தையும் ஒரு நொடிப்பொழுதில் நீக்கி, மன நிம்மதியை கொடுக்கும் விநாயகர் வழிபாடு!

எந்த ஒரு மனிதருக்கும் தீராத துயரம் வருவது என்பது இயற்கைதான். தீராத துயரமும், கஷ்டமும் வரும்போது அந்த கஷ்டத்தை, அந்த பாரத்தை இறக்கி வைப்பதற்கு என்று கட்டாயம் ஒருவர் தேவை. நம்முடைய சந்தோஷத்தை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும் என்று சொல்லுவார்கள். அதுவே, நம்முடைய துக்கத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் அது பாதியாக குறையும். சில பேருக்கு யாரிடமும் சொல்ல முடியாத துக்கங்களும் துயரங்களும் தொண்டையில் நிற்கும். மன அழுத்தம், மன பாரம் இருக்கும். தீர்க்கமுடியாத எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் அதை நாம் இறைவனிடத்தில் சொல்லுவது தானே முறை!

பொதுவாகவே மனிதர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை உடனடியாக போக்கக்கூடிய கடவுள் விநாயகர். விக்னங்களை தீர்க்கக்கூடிய விநாயகரின் வழிபாடு மிகவும் எளிமையானது. ஆனை முகத்தையும், குழந்தை உள்ளத்தையும் பெற்ற விநாயகரிடம் உங்களுடைய கஷ்டங்களை இப்படி சொல்லி பாருங்கள்! மனித ரூபத்தில் அந்த விநாயகரை நேரடியாக வந்து உங்களுடைய துயரை துடைத்து வைப்பார் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

- Advertisement -

கலியுகத்தில் கடவுள் அவதாரம் எடுத்து வந்து யாருக்கும் உதவி செய்வதில்லை. இதற்காக கடவுள் இல்லை என்று நான் சொல்லிவிட முடியுமா? கலியுகத்திலும் கஷ்டங்களுக்கு உடனடியாக தீர்வைக் கொடுக்கும் விநாயகரை நாம் எப்படி வழிபட வேண்டும்? இந்தப் பூஜையை மனதார உங்களுடைய வீட்டிலேயே செய்யலாம். எப்போதும் போல வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

விநாயகருக்கு கட்டாயமாக அருகம்புல் சாத்த வேண்டும். அதன் பின்பாக உங்களால் முடிந்த நெய்வேதியம் கொழுக்கட்டை, சக்கரை பொங்கல், பால் தேன், கற்கண்டு, பேரிச்சம்பழம், பழ வகைகள் இப்படியாக எந்த நிவேதனத்தை விநாயகருக்கு உங்களால் வைக்க முடியுமோ அதை சிறிதளவு விநாயகர் முன்பு வைத்து விடுங்கள். ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரு கண்களையும் மூடி விநாயகரிடம் உங்களுக்கு இருக்கும் துன்பங்களை சொல்லி, அந்தத் துயர் விரைவில் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ‘இறைவா எல்லாம் உன் கையில் ஒப்படைத்து விட்டேன்!’ என்று முழுமையாக விநாயகரின் பாதங்களில் சரணடைய வேண்டும். ‘இனி பிரச்சனைக்கான தீர்வை கொடுப்பது உன்கையில் என்று’ விநாயகரது பாதங்களை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.

வேண்டுதலை வைத்த பின்பு பின்வரும் மந்திரத்தை மனமுருகி உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்க வேண்டும். 11 முறையிலிருந்து 108 முறை வரை, எண்ணிக்கை என்பது உங்கள் இஷ்டம் தான். கஷ்டங்களை போக்கும் விநாயகர் மந்திரம் இதோ!

ஓம் ஸமஸ்த தேவதா மூர்தயே நமஹ!
ஓம் விக்னாராஜாய நமஹ!

இந்தப் பூஜையை எத்தனை நாட்கள் செய்வது? உங்களுக்கு இருக்கும் துயர் தீரும் வரை செய்ய வேண்டும். சில பேருக்கு கஷ்டங்கள் 11 நாள் பூஜையிலேயே சரியாகிவிடும். சில பேருடைய கஷ்டங்கள் 48 நாட்கள் பூஜை செய்தாலும் நிறைவேறுவதில் சிரமம் இருக்கும். அது உங்களுடைய கஷ்டத்தை பொறுத்தது. தும்பிக்கை முகத்தானே நம்பிக்கையோடு வழிபட்டால் நிச்சயமாக மன பாரம் குறையும் என்பதில் மட்டும் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. மனக்குழப்பம் நீங்கி, தெளிவான சிந்தனையோடு பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் செய்யும் முயற்சிகளில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -