ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று வந்தால் ஏழு ஜென்ம பாவமும் முழுமையாக நீங்கிவிடும். 12 ராசிக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்.

திருச்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்:
நம் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம் இவைகளும் ஒரு காரணம்தான். நல்ல நேரத்தில், நல்ல நட்சத்திரத்தில் யோகத்தோடு பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் சேர்ந்து இருக்கும். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு இணையாக, ஆண்டவன் தலையெழுத்தை எழுதி விடுகிறான். நம்முடைய முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவத்திற்கான பலனைத் தான் இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எப்பேர்பட்ட பாவத்திற்கும் பிராயச்சித்தம் தரக்கூடிய ஒரு கோவிலை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அப்படி இந்த கோவிலில் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாமா?

egambarishwarar

இந்த கோவிலில் அருள் பாவிக்கும் மூலவரின் பெயர் ஏகாம்பரேஸ்வரர். அம்பாள், காமாட்சி அம்மன் அவதாரத்தில் காட்சி அளிக்கிறார்கள். இந்த கோவிலில் ஏகாம்பரேஸ்வரர் வட்ட வடிவத்திலான பீடத்தில் அமர்ந்துள்ளார். அந்த வட்ட வடிவமான பீடத்தில் 12 ராசிகளும் பொறிக்கப்பட்டுள்ளது. 12 ராசிகளை ஒரே சக்கர வடிவில் கொண்டுள்ள இந்த திருக்கோவில், சித்தர் சிவ பீடம் என்று அழைக்கப்பட்டு, ராசி கோவிலாக புகழ் பெற்று இன்றளவும் திகழ்கிறது. இதுவே இந்த கோவிலின் மிகப்பெரிய சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் எந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும், ஒரே ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று, 12 ராசிகள் பொறிக்கப்பட்டிருக்கும் பீடத்தில் அமர்ந்துள்ள ஏகாம்பரேஸ்வரரை, தரிசனம் செய்துவிட்டு வந்தால், உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் நிச்சயம் தீரும். குறிப்பாக ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்திற்குமே நிவர்த்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

egambarishwarar1

இதோடு மட்டுமல்லாமல் இந்த திருக்கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கும், அதற்குரிய மரங்கள் இருக்கின்றது. உங்களது நட்சத்திரம் எதுவோ, அந்த நட்சத்திரத்திற்குரிய மரத்திற்கு ஒரு குடம் தண்ணீரை ஊற்றி, வழிபாடு செய்தால் உங்களின் பாவங்கள் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

தல வரலாறு:
இந்த கோவில் அமைந்திருக்கும் இடம், முன்பொரு காலத்தில் கடம்ப வனமாக இருந்து வந்தது. அப்போது அந்த வனம் சோழ மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. வியாபாரி ஒருவன் தன்னுடைய வியாபாரத்தை முடித்து விட்டு, தனது ஊருக்கு செல்லும்போது, பொழுது சாய்ந்த காரணத்தினால், அந்த வனத்திலே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த வியாபாரி இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு சத்தம் கேட்டு, கண் விழித்தான். எதிரே பார்த்தால், சிவபெருமானை முனிவர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டு கொண்டிருந்த காட்சி தென்பட்டது. இந்த காட்சியை கண்ட வழிப்போக்கன் அலறி அடித்து சென்று சோழ மன்னனிடம், நடந்ததைக் கூறினான்.

chettikulam-murugan

சம்பவத்தை கேட்ட சோழமன்னன், உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்தான். அப்போது முதியவர் ஒருவர் கையில் கரும்போடு தூரத்தில் நடந்து சென்று, கண்ணுக்கு தெரியாமல் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து விட்டார். முதியவர் மறைந்த அந்த கிழக்கு திசையில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக, சோழ மன்னனுக்கும் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகின்றது.

chettikulam-guberar

இதன் காரணமாக, சோழ மன்னன், ஈசன் வழிப்போக்கனுக்கு காட்சி அளித்த அந்த இடத்தில், ஏகாம்பரேஸ்வரருக்கு ஒரு ஆலயம் அமைத்ததாகவும், முருகப்பெருமான் காட்சி அளித்த குன்றின்மீது, தண்டாயுதபாணிக்கு தனியாக கிழக்குப் பக்கமாக, ஒரு ஆலயத்தை அமைத்ததாகவும் வரலாறு கூறுகின்றது. ஆகவே ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு, கிழக்கு குன்றின்மீது தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

pachai-gumkum

பலன்கள்:
வாழ்க்கையில் தீராத வறுமையில் உள்ளவர்கள் இத்தலத்தில் இருக்கும் குபேரர்து சன்னிதிக்கு சென்று, சித்ரலேகா உடன் இருக்கும் குபேர பகவானை தரிசனம் செய்ய வேண்டும். அந்த சன்னதியில் கொடுக்கப்படும் பச்சை குங்குமத்தை பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு, தினந்தோறும் நெற்றியில் இட்டுக் கொண்டால், தீராத வறுமையும் தீரும். இதோடு மட்டுமல்லாமல் இத்தளத்திலிருந்து குபேர பொம்மையை வாங்கி நம் வீட்டில் வைத்தால் அது நமக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

Lakshmi Guperan

இதைத் தவிர ஏகாம்பரேஸ்வரரை வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். வழக்குகளில் உள்ள சிக்கல்கள் கோர்ட் கேஸ் எளிதில் தீர்வு கிடைக்கும். ஏழேழு ஜென்மத்தின் பாவம் நீங்கும், என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

செல்லும் வழி:
பெரம்பலூர் திருச்சி ரோட்டில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலந்தூர் சென்று, அங்கிருந்து 8 கிலோமீட்டர் தாண்டினால் செட்டிகுளத்தில் அடையலாம்.

முகவரி:
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
செட்டிகுளம் 621 104,
பெரம்பலூர் மாவட்டம்.

தொலைபேசி எண்:
99441 17450.

இதையும் படிக்கலாமே
காலை எழுந்து குளித்த உடன், இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களின் பக்கத்தில் தோல்வியும், துரதிர்ஷ்டம் நெருங்கக் கூட முடியாது. வெற்றியே விரும்பி உங்கள் பக்கம் வந்து விடும் என்றால் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.