காதில் அணியும் ‘கம்மல் திருகாணி’, கால் ‘கொழுசு திருகாணி’ லூசா இருக்கா? அப்படின்னா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! எப்பவும் கழண்டு வராம அப்படியே இறுக்கமாக நிற்கும்.

thirugani-kozhusu-kammal

இன்று தங்க நகை அணியாத பெண்கள் மிகவும் குறைவு தான். அதிலும் காதில் சிறு குண்டுமணி தங்கம் ஆவது கட்டாயம் அணிந்து கொண்டிருப்பார்கள். தங்கம் விற்கும் விலைக்கு காதில் அணியும் தங்க கம்மல் உடைய திருகாணி லூசாக இருந்தால் நிலைமை என்ன ஆகும்? அடிக்கடி இது போல் திருகாணி லூசாகி கழண்டு விழுந்து கொண்டு இருக்கிறதா? இந்த டிப்ஸை பாலோ பண்ணினா, எப்போதும் காதிலிருந்து திருகாணி தனியாக கழண்டு விடாது. அப்படியே இறுக்கமாக பற்றிக்கொள்ளும்.

thirugani

இதற்காக கூடுதலாக பணம் கொடுத்து வேறு ஒரு திருகாணி அல்லது கம்மல் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் கொலுசு அணியாத பெண்களும், பெண் குழந்தைகளும் கட்டாயம் இருக்க முடியாது. கொலுசு திருகாணி அடிக்கடி லூசாகி மேலே எழும்பி விடுவதை பார்த்திருப்போம். இதற்கும் சுலபமான வழி ஒன்று உள்ளது. அதை செய்து திருகி விட்டால் போதும். இது போல் கம்மல் திருகாணி, கொழுசு திருகாணி கழண்டு விழாமல் இறுக்கமாகவே இருக்க என்ன செய்யலாம்? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பெரியவர்களை விட குழந்தைகள் அடிக்கடி இது போன்ற பிரச்சனையால் கம்மல், கொழுசை தொலைத்து விட்டு வருவார்கள். ஒரு சிலர் எங்காவது வெளியில் செல்லும் போது மட்டுமே குழந்தைகளுக்கு கம்மல் மாட்டி விடுவார்கள். சிலர் தொடர்ந்து இருக்குமாறு எப்பொழுதும் சிறிய அளவில் கம்மலை வாங்கி மாட்டி வைத்திருப்பார்கள். இப்படி நீங்கள் அவர்களுக்கு கம்மலை மாற்றி விடும் பொழுது இதை செய்து விட்டால் போதும். அதன் பிறகு அவர்கள் எவ்வளவு தான் ஓடியாடி விளையாடினாலும், காதில் இருந்த கம்மல் திருகாணி கழண்டு விழுகாமல் இருக்கும்.

garlic-2

திருகாணி மாட்டும் பொழுது ஒரு பல் பூண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தோலுரித்துக் கொள்ளுங்கள். அந்த பூண்டு பல்லில் திருகாணியை சொருகி விடுங்கள். பூண்டில் இருக்கும் சாறு திருகாணியில் பதிய வேண்டும். பூண்டை ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காதில் கம்மலை மாட்டி மாட்டி விட்டு உடனே திருகாணியை போட்டு திருகி விட வேண்டும். அவ்வளவுதாங்க! ஆறு மாதத்திற்கு திருகாணி லூசாக செய்யாது.

- Advertisement -

வெளியில் விசேஷங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் இதனை செய்து விட்டு செல்லும் பொழுது நகைகள் பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் கவலை இன்றி இருக்கலாம். அது போல திருகாணியில் துணி தைக்க பயன்படுத்தும் மெல்லிய நூலைப் பயன்படுத்தி சுற்றி வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்தாலும் திருகாணி கழண்டு விழாமல் இருக்கும். இதையும் விட ஆயுதம் இல்லாமல் திருகாணியை கழட்டவே முடியாத அளவிற்கு செய்யலாம். உங்களிடம் இருக்கும் நெயில் பாலிஷ் எடுத்துக் கொள்ளுங்கள். அதை கம்மல் திருகாணியில் லேசாக தடவி விட்டு, நெயில் பாலிஷ் காயும் முன்பு மாட்டி விட வேண்டும்.

kolusu-thirugani

இதே போல் தான் கால் கொலுசு திருகாணி கழண்டு விழும் பொழுது நெயில் பாலிஷ் தடவி விட்டு காயும் முன்பே மாட்டி விட்டால் போதும். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடினாலும் காலில் இருந்த கொலுசு கழண்டு விழாது பாதுகாப்பாக இருக்கும். நெயில் பாலிஷ் பயன்படுத்தும் பொழுது நாமே நினைத்தாலும் திருகாணியை சுலபமாக கழட்டிவிட முடியாது. கட்டிங் பிளேடு பயன்படுத்தி தான் திருகி எடுக்க வேண்டும். இந்த வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் ஃபாலோ செய்தால் போதும்!! கம்மல் மற்றும் கொலுசு போன்ற நகைகள் எப்பொழுதும் தொலைந்து போகாமல், பொருள் விரயம் ஆகாமல் உங்களிடம் பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
5 நாட்களில், உங்கள் வீட்டில் ரோஜா செடி புதிய துளிர்விட்டு, நிறைய மொட்டுக்கள் வைத்து கொத்துக் கொத்தாக பூக்க, இத மட்டும் செஞ்சா போதும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.