தம்பதியர்கள் பிரிவதற்கு, பெண்களின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யமும் ஒரு காரணம்! மாங்கல்யத்தில் மறைந்துள்ள ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

mangalyam2
- Advertisement -

என்ன இது? திருமாங்கல்யம் கழுத்தில் இருந்தால்தானே, தம்பதியர் என்பதற்கு அர்த்தம். ஒரு கணவன், மனைவியுடைய பிரிவதற்கு திருமாங்கல்யம் எப்படி காரணமாக இருக்கும்! என்ற சந்தேகம் கட்டாயம், இந்த தலைப்பை படித்த ஒவ்வொருவருமே எழும். இன்றைய சூழ்நிலையில் திருமண பந்தத்தில் இணையும் கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் அதிகரித்து, வாக்குவாதம் அதிகரித்து, விவாகரத்தும், பிரிவும், நிம்மதியற்ற சூழ்நிலையும் அதிகரிக்க முக்கியமான காரணம் என்ன? என்பதை பற்றிதான் ஜோதிடரீதியாக, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mangalyam

நம்முடைய சாத்திரப்படி திருமாங்கல்யத்தை எதற்காக மஞ்சள் கயிரில் அணிகிறார்கள், என்பதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்வோம். ஜோதிடப்படி கயிறு என்பது கேதுவின் அம்சமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த கயிரை வைத்தான் திருமாங்கல்யம் கட்டுகின்றோம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கேது தரக்கூடிய பிரச்சனைகளை சரி செய்பவர் ‘குரு’. குருவின் அம்சமாக சொல்லப்படுவது மஞ்சள்.

- Advertisement -

ஆகவே, மஞ்சள் கயிறால் தாலியை அணிந்து கொண்டிருக்கும் பெண்களின் வாழ்க்கையும், அந்தப் பெண்ணை மணமுடித்த கணவரின் வாழ்க்கையும், சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். இன்றைய நாகரீகச் சூழலில், மஞ்சள் கயிறை மாற்றி, தங்த்தால் சரடு அணியும் வழக்கத்திற்கு நாம் வந்துவிட்டோம். காலத்திற்கு ஏற்ப தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. கண்கூடாக இது நாம் காணும் உண்மை தானே!

mangalyam1

நம்முடைய திருமண வாழ்க்கையில் கேதுவால், ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்றால் அது குருவினால் மட்டுமே முடியும். இந்த இடத்தில் சில பேருக்கு கட்டாயம் சந்தேகம் எழும்? தங்கத்தால் தாலி சரடு அணிந்து இருபவர்கள் எல்லாருக்குமே இந்த பிரச்சினை வந்து விடுகிறதா? தங்கத்தால், சரடு போட்டிருக்கும் பெண்களும் கணவரோடு ஒற்றுமையாக தான் உள்ளார்களே, என்ற கேள்வி கட்டாயம் நம்மில் பல பேருக்கு தோன்றும். அது இயற்கை தான்.

- Advertisement -

நன்றாக ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருடைய ஜாதக கட்டமும், நேரமும், காலமும், சரியாக இருக்கும் பட்சத்தில், எந்த தோஷமும் எந்த பிரச்சனையும், நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் பிரச்சினை எப்போது ஆரம்பிக்கிறதோ, கஷ்ட காலம் எப்போது தொடங்குகின்றது! அப்போது தான், அவர்களுக்கு சாஸ்திரத்தை மீறியதால் பிரச்சனை உண்டாகும். அந்த சமயத்தில் அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய பாதிப்புகள், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் அதிகமாக தான் இருக்கும்.

family fight

‘அதற்காக, மஞ்சள் கயிறில், தாலி சரடை போட்டுக் கொண்டால், கணவன் மனைவிக்கிடையே பிரச்சினையே வராது’ என்பதும் அர்த்தமல்ல. பிரச்சனைகள் வந்தாலும், அதை அனுசரித்து செல்லக் கூடிய பக்குவம் அவர்களிடத்தில் ஏற்படும், என்பதை வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

- Advertisement -

fight-1

முடிந்தவரை, சரடை தங்கத்தில் போட்டிருந்தாலும், உங்களது மாங்கல்ய குண்டுகளை மஞ்சள் கயிரால் கோர்த்து கட்டிக்கொள்வது இல்லற வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. இதேபோல் திருமண நாள், ஆடிப்பெருக்கு, சுமங்கலி விரதம், போன்ற மங்களகரமான நாட்களில் கணவன், மனைவியின் திருமாங்கலத்திலும், நெற்றியிலும், நெற்றி வகுட்டிலும் குங்கும பொட்டு வைப்பது என்பது மிகவும் விசேஷமானது.

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் ஏதாவது மாங்கல்ய தோஷம் இருந்தாலும், கூட கணவன் திரும்பத்திரும்ப, மனைவியின் நெற்றியிலும், வகிட்டிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் வைப்பதுனாலும், வரலட்சுமி விரதத்தன்றும், ஆடிப்பெருக்கன்றும் மஞ்சள் கயிறை கணவன்மார்கள், மனைவியின் கழுத்தில் கட்டுவதினாலும், எப்பேர்பட்ட தோஷமும் நிவர்த்தி ஆகி விடும் என்றும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, தான் இப்படிப்பட்ட பூஜையின்போது மங்களகரமான குரு பகவானின் அம்சம் பொருந்திய மஞ்சள்கயிறுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

wedding

சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் நம் முன்னோர்கள் வெறுமனே சொல்லிவிடவில்லை. எல்லாவித சாஸ்திர சம்பிரதாயங்களின் பின்னணியில் ஒரு அர்த்தம் உண்டு, என்றைக்கு நம் வாழ்வில் சாஸ்திர சம்பிரதாயங்களை மறந்து, இந்த உலகம் நாகரீகத்திற்கு மாறிக்கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டதோ, அன்றே நம் வாழ்க்கையில் பிரச்சனையும் ஆரம்பித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். நம் முன்னோர்கள் சொன்ன கூற்றை நம் மனதில் வைத்துக்கொண்டு, நம்முடைய திருமாங்கல்யத்தில், கட்டாயம் மஞ்சள் பூசப்பட்ட கயிறு இணைத்து, நம்முடைய திருமண வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்வது, நம் கையில்தான் உள்ளது. திருமணமான தம்பதியர்கள் பிரிவதற்கு, பெண்களின் திருமாங்கல்யத்தில், மஞ்சள்கயிறு இல்லாததும், ஒரு காரணம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்ட கெட்ட சக்தி, உங்கள் உடம்பில் இருந்தாலும், அது தெறித்து ஓடிவிடும்! இந்த 3 பொருட்களை தலையை சுத்தி போடுங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -