கல்லை கட்டி கடலில் தூக்கிபோட்டும் உயிர்பெற்று வந்த திருநாவுக்கரசர் – உண்மை சம்பவம்

thirunavukarasar

இறைவனை முழு மனதாக நம்பினால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் நம்மை கைவிடமாட்டார் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் திருநாவுக்கரசர். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர், ஆரம்பகாலத்தில் சமண சமயத்தில் ஈடுபாடுகொண்டவராக இருந்தார். பின்பு பண்ருட்டி அருகிலுள்ள வீராட்டானத்துறையில் அருள்பாலிக்கும் சிவபெருமானின் அருளால் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தார்.

சமண சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அரசனான மகேந்திர பல்லவனாலே திருநாவுக்கரசரின் செயலை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அவரை எப்படியாவது மீண்டும் சமண மதத்திற்கு மாற்ற வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அவனது எண்ணம் பலிக்கவில்லை இதனால் மிகுந்த கோவம் கொண்ட அரசன், திருநாவுக்கரசரை கொல்ல துணிந்தான்.

7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்தான். ஆனலும் அவருக்கு எந்த தீங்கும் நேராது அவர் உயிர் பெற்றார். அடுத்ததாக நஞ்சு கலந்த பாற்சோற்றை அவருக்கு கொடுத்தான். அந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை. அடுத்ததாக யானையை விட்டு மிதிக்கும்படி ஆணையிட்டான், ஆனால் அந்த யானை அவரை வணங்கி சென்றது. இதனால் வேறு வழி இன்றி திருநாவுக்கரசரை ஒரு கல்லில் கட்டி கடலில் வீசும்படி அரசன் ஆணையிட்டான்.

Thirunavukarasar

கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே

- Advertisement -

என்று வீரம்பொங்க பாடினார் திருநாவுக்கரசர். இதனால் கட்டிய கல் பூவாக மாறி கடலில் மிதந்துவந்தது. திருநாவுக்கரசரும் கரைவந்து சேர்ந்தார். சிவபெருமானின் அருளை கண்டு ஆச்சர்யப்பட்ட அரசன், மனம் மாறி சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான்.

இவர் சமண சமயத்தில் இருந்து ஏன் சைவ சமயத்திற்கு மாறினார் என்பதற்கான விளக்கத்தை தற்போது பார்ப்போம்.
63 நாயன்மார்களில் ஒருவரான இவர், கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இவருடைய இயற் பெயர் மருணீக்கியார் . மக்கள் இவரை அப்பர், தாண்டகவேந்தர் , தருமசேனர், உழவாரத் தொண்டர் இப்படி பல பெயர்களில் அழைப்பதுண்டு. இளமையிலேயே இவர் சைவ சமயத்தை விட்டு சமண சமயத்திற்கு மாறியபோது.

Thirunavukarasar

திருநாவுக்கரசரின் தமக்கையான திலகவதியார் ஒரு கடுமையான சிவ பக்தர். திருநாவுக்கரசர் சமண சமயத்திற்கு மாறியதால் அவர் பெரும் வேதனை கொண்டார். இந்த நிலையில் திருநாவுக்கரசருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் அவர் சமண மடத்தில் சிகிச்சைகள் பல எடுத்துக்கொண்டார். அனால் அந்த சிகிச்சைகள் பலனளிக்காமல் போனது. இந்த நிலையில் திலகவதியார் திருநாவுக்கரசை அழைத்து “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்னும் பாடலை மனமுருகி பாடும் படி கேட்டுக்கொண்டார். அந்த பாடலை அவர் பாடிய உடன் அவரின் வயிற்று வலி முழுவதுமாக தீர்ந்தது. அதனை தொடர்ந்து அவர் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.

இதையும் படிக்கலாமே:
நம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் ? – குட்டி கதை

அதனை தொடன்கிறது, சிவனை போற்றி பாடுவது, சிவாலயங்களை தூய்மை செய்வது இப்படி பல சிவ தொண்டை அவர் ஆற்ற துவங்கினார். இந்த நிலையில் தான் சமண சமயத்தை சேர்ந்த மகேந்திர பல்லவன் என்னும் மன்னன் திருநாவுக்கரசை கொடுமை செய்ய துவங்கினான். பிறகு இறுதியாக சிவனின் அருளால் அந்த மன்னனே சைவ மதத்திற்கு மாறினான்.