நீங்கள், இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்யாமல் இருந்தாலே போதும்! கண் திருஷ்டி உங்கள் பக்கம் கூட வராது. உங்களுடைய சந்தோஷம் நிலைத்து இருக்க என்ன செய்ய வேண்டும்?

sanibagavan
- Advertisement -

இன்றைக்கு, பலபேருடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது இந்த கண் திருஷ்டி தான். கல்லடி பட்டாலும் பரவாயில்லை, கண்ணடி படக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். கண் திருஷ்டியின் மூலம் பல பேருடைய வாழ்க்கை நிலைகுலைந்து போய் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அடுத்தவர்கள்விடும் பெரும் பூச்சியிலிருந்து, நாம் தப்பிக்க ஒரு சுலபமான வழி உள்ளது. இதை மட்டும் செய்து பாருங்கள். உங்களை நீங்களே கண் திருஷ்டி படாமல் பாதுகாத்து, உங்களுடைய வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை பெறுவதற்கு, நல்ல வழியைக் காட்டும் ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women

உங்களுக்கான கண்திருஷ்டி வருவதற்கு காரணம், உங்களுடைய வாய் தான். தற்பெருமையை எவரொருவர் அதிகமாக பேசிக்கொண்டு இருக்கிறாரோ அவர்கள், கண்திருஷ்டியிலிருந்து தப்பிக்கவே முடியாது. உங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தோஷமான சூழ்நிலைகளை, முன்னேற்றங்களை, அனாவசியமாக அடுத்தவர்களுக்கு தெரியும்படி, பெருமையாக, புகழ் பாடிக் கொண்டே இருக்கக் கூடாது.

- Advertisement -

அதுவும் இப்போதெல்லாம் பேஸ்புக், ஸ்டேட்டஸ், என்று தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்களை போட்டோ எடுத்து, வீடியோ எடுத்து வெளிப்படையாக, அவரவர் வீட்டில் நடக்கும் விசேஷங்களை அனைவரும் அறியும்படி, காட்டிவிடுகிறார்கள். அதைப் பார்க்கும் 100 பேரில் ஒருவருக்காது,  ஏக்கம் வரும். ‘இவர்களால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது? நம்மால் இப்படி எல்லாம் சந்தோசமாக இருக்க முடியவில்லையே!’ என்ற, இந்த ஒரு எண்ணமே நம்முடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

women1

இதற்காக சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவே கூடாது, என்று சொல்லப்படவில்லை. சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அனாவசியமாக ஆர்ப்பாட்டம் பண்ண கூடாது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சந்தோஷத்தை நீங்களும், உங்களுடைய குடும்பமும் மட்டும் அனுபவித்தால் போதும். எல்லோருக்கும் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படும் குணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில பேருடைய எண்ணமும், உங்களுடைய நேரமும் சேரும் போது தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதற்காக சொல்லப்படும் விஷயங்கள்தான் இவை.

- Advertisement -

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சனி பகவான், எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த இடத்துக்குரிய தற்பெருமை நாம் பேசவேக் கூடாது, என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டிற்கு சனி பகவான் உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்தால், உங்களைப் பற்றி நீங்கள் தற்பெருமை, அழகான வீடியோ காட்சிகளையும் புகைப்படங்களையோ வெளியே காட்டக்கூடாது. நீங்களே, உங்களை பற்றி யாரிடமும் தற்பெருமையாக பேசிக் கொள்ளக் கூடாது.

sani

ஒருவேளை சனிபகவான் இரண்டாம் இடத்தில் இருந்தால் உங்களுடைய குடும்பத்தை பற்றியோ தொழிலில் வருமானத்தை பற்றியோ வெளியில் தம்பட்டம் அடிக்க கூடாது. இப்படியாக மூன்றாம் இடம், நான்காமிடம் என்று 12 இடங்கள் வரை உங்களுடைய சகோதர சகோதரிகள், உங்களது குடும்ப வாழ்க்கை, உங்களது கணவரைப் பற்றி, உங்களது குழந்தைகளின் கல்வியை பற்றி, உங்களது ஆரோக்கியத்தை பற்றி, உங்களது அழகைப் பற்றி, இப்படியாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி நீங்கள் பெருமையாகப் பேசும் போதும், அதன் மூலம் உங்களுக்கு பல காரியத் தடைகள் வந்து கொண்டேதான் இருக்கும். நீங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முடிந்தவரை தற்பெருமை பேசுவதையும், உங்களுடைய முன்னேற்றத்தை வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும் படியும் காட்டாமல் இருப்பது நமக்கு நல்லது.

- Advertisement -

leg

எப்போதுமே உங்களுக்கு கண்திஸ்டி அதிகமாகப் படும் என்றால், உங்களுடைய இடது உள்ளங்காலில் கொஞ்சம் கருப்பு மையை வைத்துக்கொள்வது நல்லது. இடது காலில் கருப்பு கயிறு கட்டிக் கொள்ளலாம். அடிக்கடி காவல் தெய்வங்கள் கோவிலுக்கு சென்று மந்திரித்து வரலாம்.

annathanam

அடுத்தபடியாக சனி பகவானால் உங்கள் ஜாதகத்தில் பாதிப்பு உள்ளது. ஏழரை சனி நடந்து கொண்டிருக்கின்றது என்றால், எளிமை! எளிமை! எளிமை! மட்டுமே உங்களது வாழ்க்கையாக இருக்கவேண்டும். முடிந்தவரை ஊனமுற்றவர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருங்கள். அந்த சனி பகவான் உங்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டார், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஓஹோன்னு இருந்த உங்களோட வாழ்கை திடீர்னு ஒண்ணுமே இல்லாம போயிருச்சா? உடனடியாக உங்களது பண பிரச்சனையை தீர்க்கும் சக்தி இந்த 2 இரண்டு வார்த்தைக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -