இந்த வார ராசிபலன் 05-04-2021 முதல் 11-04-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகின்றது. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.  வாராக் கடனில் எழுதிய தொகை கூட வசூல் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகப் பணியில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை ஏற்பட்டாலும், எந்த பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. ஹெல்மெட் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். வெளியூர் பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவை எடுக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து யாரை நம்பியும் போட வேண்டாம். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் வீண்விரையம் ஆகிக்கொண்டே இருக்கும். சொந்தத் தொழிலில் லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாகத்தான் கிடைக்கும். அலுவலக பணியில் மனநிறைவு ஏற்படும் தினமும் அம்மன் வழிபாடு நன்மையை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்ததெல்லாம் நிறைவேற கூடிய வாரமாக இருக்க போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் ஆசையைக் கூட இந்த வாரம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிகள்  எடுக்கலாம். அலுவலக பணியில் மட்டும் அவ்வபோது சின்னச் சின்ன பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். சொந்தத் தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இந்த வாரம் தீர்வு கிடைத்துவிடும். முடிந்தவரை அனாவசியமான பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று குழப்பமான வாரமாகத் தான் இருக்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும், உங்களின் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதன்படி வழிநடத்திச் செல்லுங்கள். அடுத்தவர்கள் என்ன சொல்லி விடுவார்களோ என்று உங்களது முடிவுகளை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டாம். அது அந்த அளவிற்கு சரியான பலனைக் கொடுக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்தால் கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். வீண் விவாதம் வேண்டாம். தினம்தோறும் ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தது கொண்டே இருங்கள்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலையில் நல்ல பாராட்டும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்துப் பிரச்சனைகள், கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணம் காசு கையில் அதிகமாக புரளும். இருப்பினும் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. தினமும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் உடன் இருப்பவர்களே, உங்கள் காலை வாரி விடுவதற்கு தயாராக இருப்பார்கள். குறிப்பாக நண்பர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், உங்களிடம் நன்றாக பேசுகிறார்களே என்று நினைத்து அவர்களிடம் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளாதீர்கள். தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். வாங்கிய கடனை சரியான நேரத்திற்கு திருப்பித் தர முயற்சி செய்யுங்கள். வேலை செய்யும் பெண்கள் தங்களுடைய வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் கவனத்தோடு இருந்தால் வரக்கூடிய சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு மிகவும் நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். சோம்பேறித்தனத்தை முழுமையாக தள்ளிவைத்துவிட்டு, விடா முயற்சியில் ஈடுபட்டால் நிச்சயமாக வெற்றி உங்களுக்குத்தான். உடல் அசதியாக இருக்கும். வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலே தூக்கம் வந்துவிடும். இருப்பினும் வேலையில் கவனத்தோடு இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத மூன்றாவது நபரிடம் புதியதாக எந்த ஒரு நட்பு வட்டாரத்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் அமைதி காப்பது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, சொந்தத் தொழிலில் பிரச்சினை, குடும்பத்தில் பிரச்சனை, என்று அவ்வபோது பல பிரச்சனைகள் வந்து தொந்தரவை கொடுக்கத்தான் செய்யும். இருப்பினும் பொறுமை இழக்க கூடாது. எல்லா விஷயங்களையும் அமைதியாக எதிர்கொண்டு உங்களுடைய வேலையை நீங்கள் பார்த்துக் கொண்டே இருந்தால், பிரச்சனைகள் தானாக ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடும். கோபப்பட்டு எரிச்சல் பட்டு அனாவசியமாக வார்த்தைகளை பேசி, சண்டை ஆனால் அதுதான் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்திலும், தொழில் செய்யும் இடத்திலும், உங்களுக்கு எதிர்ப்பாக ஆயிரம் விஷயங்கள் நடக்கலாம். இருப்பினும் அவை அனைத்தையும் சமாளித்து நீங்கள் வெற்றி காண்பீர்கள். அந்த அளவிற்கு புத்திக்கூர்மையும் சுறுசுறுப்பும் இருக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். பணவரவும் அதிகமாக இருக்கும். வீட்டிற்காக ஆடம்பர பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளது. வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். யோகமான வாரம் தான் உங்களுக்கு. தெய்வ வழிபாட்டை மறக்க வேண்டாம்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக தான் அமையப்போகின்றது. புதிய புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களுடைய சாமர்த்தியம். வாய்ப்புக்கள் வீடு தேடிவந்து கதவைத் தட்டும் போது, முயற்சியே செய்யாமல் அதை நிராகரிப்பது தவறு. கடவுள் நமக்குக் காட்டும் நல்ல வழிகளை எக்காரணத்தாலும் தட்டி கழித்து விடக்கூடாது. வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். கோபப்படுவதன் மூலம் எந்த ஒரு காரியத்தையும் சாதித்து விடமுடியாது‌. பொறுமையோடு சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தினமும் விநாயகர் வழிபாடு வெற்றியை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் சுப காரிய தடை இருக்கும். அவ்வபோது சின்ன சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இருப்பினும் இறைவழிபாடு எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல தீர்வினைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து வாருங்கள்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதி அற்புதம் வாய்ந்த சந்தோஷம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. வருமானம் நினைத்ததை விட அதிகமாக கிடைக்கும். குடும்ப தலைவன், குடும்பத் தலைவிக்கு தேவையான ஆடம்பர பொருளை வாங்கி கொடுத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். பல நல்ல செய்திகள் உங்களை தேடி வந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும். பெண்கள் வேலை செய்யும் இடத்தில் அனாவசியமாக யாரிடத்திலும், குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சந்தோஷம் அதிகமாகும் போது தான் கவனமும் அதிகமாக இருக்க வேண்டும். தினமும் முருகன் வழிபாடு நன்மை தரும்.