இந்த வார ராசிபலன் 12-04-2021 முதல் 18-04-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்த படியே நடக்கும். எந்த விஷயத்திலும் ஏமாற்றம் இருக்காது. புதிய முயற்சிகளை தாராளமாக தொடங்கலாம். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உறவினர்களின் சப்போர்ட் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டில் இதுநாள் வரை இருந்த சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுக்கு கூட மறைந்து சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரம், அலுவலகப் பணி எல்லாமே சீராகச் செல்லும். பிரச்சினைகள் இருக்காது. தினமும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
நீங்களே எதிர்பார்க்காத நல்ல செய்திகள் உங்கள் செவிகளுக்கு வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப உறவினர்களோடு ஆன்மிக சுற்றுலா சென்று வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் என்று வரும்போது யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் உஷாராக இருந்து கொள்வது நல்லது. தினமும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த படி சில விஷயங்கள் நடக்காது. கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படத்தான் செய்யும். இருப்பினும் உங்களுடைய விடாமுயற்சி இருக்கும் பட்சத்தில், சில விஷயங்களில் வெற்றி கொள்ளலாம். துவண்டு போய் விடாதீர்கள். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். செலவுகள் கையை கடிக்கும். இருப்பினும் கடன் வாங்காமல் சமாளிக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து தான் செல்ல வேண்டும். உயர் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். தொழில் நல்ல லாபத்தைக் கொடுக்கும். தினமும் விஷ்ணு வழிபாடு நன்மையை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் கையில் தொட்ட விஷயங்கள் எல்லாம் வெற்றி தான். செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். ஆனால், உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் பேசும் போது ஜாக்கிரதையாக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது. தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுக்கு தேவையான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், இந்த வாரம் வாங்கலாம். அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சுமூகமாக சீக்கிரமே முடிவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு கவனம் இருக்கட்டும். யாரை நம்பியும் கடனாக பலன் கொடுக்க வேண்டாம். பணம் வாங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல சப்போர்ட் இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்து விரிவுபடுத்தலாம். தினமும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆசைகள் நிறைவேறும் வாரமாக இருக்கிறது. நீங்கள் சிறு வயதில் நினைத்த ஆசையாக இருந்தாலும் அதை இந்த வாரத்தில் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். வருமானம் நீங்கள் நினைத்ததை விட அதிகமாகவே வரும். வீட்டில் உறவினர்களிடையே கொஞ்சம் அனுசரணையோடு சென்றால் சண்டைகள் வராமல் தடுக்கலாம். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக உங்களது வேலையை பார்த்துக் கொள்ளுங்கள். தொழிலில் யாரை நம்பியும் கடனுக்கு வியாபாரம் செய்யாதீர்கள். தினமும் வாராஹி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டு மழைதான். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை புகழ்ந்து தள்ள போகிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் தான் எங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாருடைய புகழுக்கு மயங்கி யாரிடமும் போய் சிக்கிக் கொள்ளக்கூடாது. புதிய சொத்துக்கள் வாங்கலாம். பூர்வீக சொத்து உங்கள் பக்கம் தீர்ப்பாக நிறையவே வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். வேலை செய்யும் இடத்திலும் பாராட்டுகள் குவியும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தினம்தோறும் தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் மனநிறைவோடு தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் செல்லப் போகிறார்கள். வேலை செய்யும் இடத்தில், குடும்பத்தில், தொழிலில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரப்போகிறது. நல்ல வருமானம் இருக்கும். வீண் விரையங்கள் குறையும். அனாவசியமாக வெளியே செல்ல வேண்டாம். அப்படியே வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் பாதுகாப்பு கவசங்கள் அவசியம் தேவை. பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று சோம்பேறித்தனத்துடன் அப்படியே உட்கார்ந்து விட வேண்டாம். கொஞ்சம் சுறுசுறுப்பு குறைந்தாலும் தேவையற்ற பிரச்சினைகள் வந்து தொல்லை கொடுக்கும். தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்து வாருங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராகவே இருக்க வேண்டும். கையில் பணம் வருவது போல இருக்கும். ஆனால் அந்த பணம் எப்படி செல்வது என்று தெரியாது. வீண் விரயங்கள் அதிகமாக ஏற்படும். ஆடம்பர பொருட்களை வாங்கி கையில் இருக்கும் காசு கரைந்து கொண்டே செல்ல வாய்ப்பு உள்ளது. காசு விஷயத்தில் உஷார். அனாவசியமாக உங்களைச் சுற்றி இருக்கும் நண்பர்களிடம் உறவினர்களிடம் வீண் விவாதம் செய்யவே செய்யாதீர்கள். எந்த பிரச்சனை வந்தாலும் மௌனமாகவே இருங்கள். புதிய சொத்து வாங்குவதாக இருந்தால் வாங்கலாம். கோர்ட் கேஸ் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தினம்தோறும் துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கஷ்டங்களெல்லாம் காற்றோடு காற்றாக கரைந்து போகப் போகின்றது. நீண்ட நாட்களாக பிரச்சினை கொடுத்து வந்த கடன் தொல்லை, எதிரி தொல்லை, எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். அலுவலக வேலையில் நல்ல பெயரும் பாராட்டும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழிலில் யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். கணக்கு வழக்குகளை நீங்களாகவே நேரில் பார்ப்பது நல்லது. கடின உழைப்பே உயர்வு தரும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றிதான். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதிநிலைமை பற்றாக்குறையாக இருக்கப்போகின்றது. வரக்கூடிய வருமானத்தை வைத்து உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கடன் தொல்லை இருக்கும். வட்டி கூட கட்ட முடியாத சூழ்நிலை சிலருக்கு ஏற்படும். இருப்பினும் மேலும் மேலும் கடன் வாங்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். தினந்தோறும் காலையில் எழுந்து குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு உங்களது தினசரி நாளை தொடங்குவது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடம் தொழில் செய்யும் இடத்தில் வேலைகள் சுமுகமாக நடக்கும் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனது தெளிவு பெறும். தேவையற்ற குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். வேலையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. யார் எதை சொன்னாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு மூளைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். எது நல்லது எது கெட்டது என்று ஆராய்ச்சி செய்து அதன் பின்பு செயல்படுத்துங்கள். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.