இந்த வார ராசிபலன் – ஏப்ரல் 13 முதல் 19 வரை

Indha vara rasi palan

மேஷம்:

Aries zodiac sign

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. முடிந்தவரை வருமானத்தை சேமித்து வைப்பது நல்லது. எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். பொறுமை அவசியம் தேவை. வியாபாரம் முன்னேற்றத்தில் செல்லும். பண பரிமாற்றத்தில் மட்டும் சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள். வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலைச்சுமை சற்று அதிகமாகத்தான் தெரியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மையை தேடித்தரும்.

ரிஷபம்:

Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த வாரம் மகிழ்ச்சியோடு உங்களுடைய குடும்பத்தில் நேரத்தை செலவழிக்க போகிறீர்கள். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடையலாம். அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் உங்களுடைய வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். வீட்டிலிருந்து அலுவலகப் பணியை செய்பவர்களுக்கு எப்பவும் போல், பணி சுமுகமாக செல்லும். தினம் தோறும் தட்சிணாமூர்த்தியை மனதார நினைத்து வீட்டிலிருந்தே வழிபடுங்கள்.

- Advertisement -

மிதுனம்:

Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. ஆரோக்கியம் சீர்படும். வீட்டில் உறவினர்களின் வருகையால், வீண் விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிக்கனமாக செலவு செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் கடன் வாங்க நேரிடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அடிப்படை தேவைக்கான பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். இதனால் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம்தோறும் அம்மன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

கடகம்:

zodiac sign

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. எதிர்பாராத செலவின் மூலம் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். உங்களது கணவர் உங்களுடைய முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பார். உங்களது வியாபாரம் சற்று மந்தமாக தான் செல்லும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முடிந்தவரை கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தினம் தோறும் சிவனை நினைத்து மனதார 5 நிமிடம் தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

சிம்மம்:

Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானம் சீராக இருக்கும். செலவுகளை எப்படியும் சமாளித்து விடுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். திருமண பேச்சுவார்த்தையை தொடங்கலாம். அதிகமான உழைப்பை முதலீடாக போட்டால்தான் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பார்க்க முடியும் சூழ்நிலை உள்ளது. வீட்டிலிருந்து அலுவலகப் பணியை செய்பவர்கள் சற்று உழைக்க வேண்டிய தருணம் இது. மாணவர்களும் கல்வியில் ஆர்வத்தை அதிகம் காட்ட வேண்டும். தினம்தோறும் அனுமனை மனதார நினைத்து வீட்டிலேயே வழிபடுங்கள்.

கன்னி:

Virgo zodiac sign

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்தி தரக்கூடிய வாரமாக தான் அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார நிலை திருப்தி தரும் வகையில் அமையும். வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

துலாம்:

Libra zodiac sign

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களது பிள்ளைகளால் ஏற்படும் செலவை சமாளிக்க சிறிது சிக்கல்கள் ஏற்படும். அனாவசிய செலவை தள்ளிப்போடுவது நல்லது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சொந்தத் தொழிலில் உங்களிடம் வேலை செய்பவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் அளவிற்கு மன தைரியம் உங்களிடம் உண்டு. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் முருகப் பெருமானை நினைத்து மனதார வீட்டிலிருந்து வழிபடுவது மன அமைதியைத் தரும்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரம் ஆகத்தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து நீங்கும். அனாவசிய பேச்சினை குறைத்துக்கொண்டால் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும். வியாபாரம் சுமுகமாக செல்லும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. தினந்தோறும் சிவன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தை தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வெற்றி விரைவாக உங்கள் கைகளில் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்த வேண்டும். வருமானம் சீராக இருக்கும். வியாபாரம் எப்பவும் போல் சுமுகமாக செல்லும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்துபோகும். இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தினம்தோறும் குரு பகவானை மனதார நினைத்து வீட்டில் இருந்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

மகரம்:

Capricornus zodiac sign

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்தி தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானம் சீராக இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களின் மூலம் சின்ன சின்ன பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உங்களின் மனைவி உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வியாபாரத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்ல அதிக உழைப்பை முதலீடாக போடுவீர்கள். வெற்றி கிடைக்கும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தினம் தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

கும்பம்:

Aquarius zodiac sign

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. செலவுகளை மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டால் கடன் வாங்காமல் தப்பித்துக்கொள்ளலாம். உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக துணையாக நிற்பார்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த வாரம் ஒரு முடிவுக்கு வந்து விடும். வியாபாரம் சுமுகமாக செல்லும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சற்று மந்தமான போக்கு தென்படும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

மீனம்:

Pisces zodiac sign

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. உங்களது உறவினர்களின் வழியால் நல்ல செய்தி உங்களது செவிகளை வந்தடையும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் மட்டும் சற்று செலவு உயரும். சமாளித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை. வியாபாரம் எப்போதும்போல் சீராக சென்று கொண்டிருக்கும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தினந்தோறும் முருகவழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.