இந்த வார ராசிபலன் – ஏப்ரல் 27 முதல் மே 3 வரை

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகிறது. செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் கையில் வரக்கூடிய வருமானத்தை சிக்கனப்படுத்தி செலவு செய்வது, வரும் நாட்களுக்குப் மிகவும் நல்லது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழிலில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் பொறுமையாக சிந்தித்து எடுப்பது நல்லது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்வார்கள் தங்களுடைய பணியை செம்மையாக செய்து முடிப்பார்கள். தினம் தோறும் அம்மன் வழிபாடு மனமகிழ்ச்சியை தேடித்தரும்.

ரிஷபம்:
Taurus zodiac signரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்னச்சின்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. பண சிக்கல் உண்டாகும். வருமானத்தில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை நிலவுவதால், முடிந்தவரை செலவை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். அத்தியாவசிய பொருட்களை விற்பவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. மற்றபடி உள்ள வியாபாரங்கள் அனைத்தும் மந்தமான சூழ்நிலையே நிலவும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சோம்பேறித்தனம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினந்தோறும் முருகவழிபாடு மன அமைதியை தேடி தரும்.

மிதுனம்:
Gemini zodiac signமிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. பணவரவில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும், அதை சமாளிக்கும் அளவிற்க்கு உங்கள் மனதிற்கு தெம்பு வந்துவிடும். கடன் வாங்கியும் எப்படியாவது சூழ்நிலையை சமாளித்து விடுவீர்கள். அந்த கடனை நீங்கள் தான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வியாபாரம் மந்தமாக தான் செல்லும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு தொலைபேசி மூலம் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு சற்று சுமாரான வாரமாக தான் இந்த வாரம் பிறக்கப் போகின்றது. வருமானம் அதிகமாக வரும். ஆனால், அனாசிய செலவில், வீணாக செலவாகி விடும். இருப்பினும் கடன் வாங்காமல் இருப்பது உங்களுடைய சாத்தியம். உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் செய்யும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு தகுந்த ஆதாயம் கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் நேரிடலாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

சிம்மம்:
Leo zodiac signசிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவை தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகின்றது. எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வரும். பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் பற்றாக்குறைக்கு தேவைப்படும். வீட்டில் சுப காரிய பேச்சுக்களை தொடங்கலாம். பேச்சுவார்த்தையின்போது வார்த்தைகளை யோசித்து பேசுவது அவசியம். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல புதிய உத்திகளைக் கையாளலாம். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தினம்தோறும் சிவபெருமானை நினைத்து வீட்டில் இருந்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

கன்னி:
Virgo zodiac signகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. செலவும் குறைவாகத்தான் ஏற்படும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. எந்த சொந்தங்களிடமும் அனாவசிய வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பொறுமையாக பேச வேண்டியது அவசியம். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் செல்லும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு கேட்காமலேயே சில சலுகைகள் கிடைக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac signதுலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத சந்தோஷத்தை தரக்கூடிய வாரமாக தான் பிறக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த ஒரு விஷயம் இந்த வாரம், நல்ல முடிவுக்கு வந்துவிடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். செலவுகளை சரியான முறையில் பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது. அனாவசிய செலவை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் செல்லும். சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac signவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரம்தான் அமையப்போகின்றது. எதிர்பாராத பணவரவு சிலருக்கு தேடிவரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உறவினர்களின் வருகையால் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகள் வந்தாலும் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். பொறுமை காப்பது அவசியம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தனுசு
Dhanusu Rasiதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. செலவுகள் அதிகரித்தாலும், அதை எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். பணத்தின் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உங்களுடைய வாழ்க்கை துணையின் மூலம் எதிர்பாராத நல்ல செய்தி ஒன்று நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் எதுவும் இருக்காது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்து செய்பவர்களுக்கும் நல்ல பாராட்டு கிடைக்கும். தினம் தோறும் முருகவழிபாடு மன அமைதியை தேடி தரும்.

மகரம்:
Capricornus zodiac signமகர ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய வாரமாக தான் இந்த வாரம் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் விருந்தினர்களின் எதிர்பாராத வருகையினால் செலவுகள் அதிகரிக்கும். உடல் நலனில் அதிக கவனம் தேவை. சின்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரம் மந்தமான சூழ்நிலையில் தான் செல்லும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு பணி சூழல் எப்போதும் போல் காணப்படும். தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

கும்பம்:
Aquarius zodiac signகும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக தான் இந்த வாரம் பிறக்கப் போகின்றது. உங்களது பிள்ளைகளால் உங்களின் கௌரவம் அதிகரிக்கப் போகின்றது. வீட்டில் உள்ள உறவினர்கள் அனைவரும் உங்களை ஆதரிப்பார்கள். கஷ்டம் என்று வரும் போது கை கொடுக்கும் அளவிற்கு குடும்பச்சூழல் அமைந்திருக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வீட்டிலிருந்து குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் நல்லது. வியாபாரத்தில் பிரச்சனை அவ்வப்போது வந்து போகும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள் கவனத்துடன் செய்வது நல்லது. தினம்தோறும் இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரச்சனைகள் தீரும்.

மீனம்:
Pisces zodiac signமீன ராசிக்காரர்களுக்கு சுமாரான வாரமாக தான் இந்த வாரம் பிறக்கப் போகின்றது. செலவுகளை ஈடுகட்டும் அளவிற்கு வருமானம் வந்துவிடும். பிரிந்து சென்ற உறவுகளை பற்றி, புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. வீட்டில் சுபகாரியப் பேச்சுகளை தொடங்கலாம். வியாபாரம் மந்தமான போக்கில்தான் செல்லும் அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள், இன்னும் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம்தோரும் சிவன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.