இந்த வார ராசிபலன் 10-08-2020 முதல் 16-08-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மன உறுதியோடு செயல்படும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வீட்டில் எதிர்பாராத உறவினர்களின் வருகை இருக்கும். உறவினர்களின் வருகை காரணமாக, சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வார்த்தைகளை மட்டும் கவனமாக பேச வேண்டும். மற்றப்படி எந்த பிரச்சினையும் கிடையாது. சுபச் செலவுகள் கட்டாயம் ஏற்படும். அலுவலகத்தில், மேலதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். சந்தோஷமா இருக்க போறீங்க! ஜாக்ரதையாகவும் இருக்கணும். தினம்தோறும் முருகன் வழிபாடு மன அமைதியைத் தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டும், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தவாரம் லாபகரமான வாரமாகதான் இருக்கப் போகின்றது. வராது என்று நினைத்துக் கொண்டிருந்த கடன் தொகை வசூலாகும். வீட்டிலிருந்த சுப காரிய தடை விலகும். உங்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்துங்கள். அலுவலகப் பணியில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சொந்தத் தொழில் லாபத்தோடு செல்லும். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு, தினம் தோறும் விநாயகர் வழிபாடு நல்லது.

மிதுனம்:
Gemini zodiac sign
எதையும் துணிச்சலோடு செயல்படுத்தும் மிதுனராசிக்காரர்களுக்கு இந்த வாரம், நல்லது நடக்கப் போகும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதைத் தொட்டாலும் அந்த காரியம் கட்டாயம் வெற்றியில் முடியும். புதிய முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். வீட்டில் சுப காரியங்களை தாராளமாக தொடங்கலாம். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றத்தில், மட்டும் சற்று கவனத்தோடு இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு மன அமைதியைத் தரும்.

கடகம்:
zodiac sign
அமைதியான சுபாவத்தை கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. புதியதாக எந்த ஒரு செயலையும் தொடங்க வேண்டாம். சட்டென்று முடியாமல் இழுபறியாக இழுத்துக் கொண்டே செல்லும். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். யாரை நம்பியும் கடன் வாங்காதீர்கள். அலுவலக பணியில் தேவை இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். எல்லா பிரச்சனையும், அடுத்தவாரம் சரியாகிவிடும் என்று பொறுமையோடு, பிரச்சனைகளை கடந்து செல்லுங்கள். அனுமனை மனதார வேண்டிக் கொண்டு தினசரி வேலையை தொடங்குங்கள்.

சிம்மம்:
Leo zodiac sign
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களது ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முடிந்தவரை பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். வீட்டிற்குள்ளேயே இருக்க பாருங்கள்! அவசியம் ஏற்பட்டால், மாஸ்க், ஹெல்மெட் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். சொந்த தொழில் எந்த பிரச்சனையும் வராது. அலுவலகப் பணியும் எப்போதும்போல் செல்லும். பணப்புழக்கம் எப்போதும் போல் இருக்கும். தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொண்டால், பிரச்சினை இல்லை. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
தெளிவான சிந்தனையோடு சிந்திக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் சற்று உஷாராக இருக்க வேண்டிய வாரம்தான். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. இருக்கின்ற வேலையை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப் படாதீர்கள். வேலையில் இடமாற்றம் வந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். குடும்பத்தில் பிரச்சனை வந்தால் கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
சரி எது, தவறு எது, என்று சரியாக தீர்மானிக்கும் துலாம்ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அலுவலக சம்பந்தப்பட்ட கோப்புகளையும், யாரை நம்பியும் கொடுக்க வேண்டாம். உங்களுடைய குடும்ப பிரச்சினையை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். யாரையும் நம்பாதீர்கள். மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்களின் மீது ஒரு சந்தேகப் பார்வை இருக்கட்டும். ஏனென்றால், இந்த வாரம் உங்களை யாராவது ஏமாற்ற பார்ப்பார்கள். மன பயம் இல்லாமல் தெளிவோடு செயல்படுங்கள். வெற்றி உங்களுக்கே! தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
தவறுகளை பார்த்தவுடன் தட்டிக்கேட்கும் மனதைரியம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் வருமானம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. சம்பளம் உயர்வு கிடைக்கலாம். எதிர்பாராத பணவரவு வரக்கூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், சுபகாரிய பேச்சுக்களைத் தள்ளிப் போடவேண்டும். தொழிலில் முதலீடு செய்யக்கூடாது. பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் செல்ல வேண்டாம். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மையை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தொலைநோக்கு பார்வையை கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் கொஞ்சம் பிரச்சனையான வாரமாக தான் இருக்கப் போகின்றது. முக்கியமான விஷயங்களில் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று முடிவுகளை டக்கு டக்குனு எடுத்திராதீங்க! பெரியவர்களின் ஆலோசனை கேளுங்கள். நீங்கள் செய்யாத தவறுக்கு கூட உங்களின் மேல் பழி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உஷாராக இருக்க வேண்டும். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்காதீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்கள் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்றால் இந்த வாரம் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினமும் காலை எழுந்தவுடன், மன அமைதியாக ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டியது அவசியம் தேவை.

மகரம்:
Capricornus zodiac sign
அஞ்சாத நெஞ்சம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களது அலுவலகப் பணியை உஷாராக செய்ய வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். முடிந்த வரை எல்லோரையும் அனுசரித்துச் செல்ல பாருங்கள். வாக்குவாதம் வந்தால் கூட மௌனத்தை மட்டும் உங்களது பதிலாக வைத்தீர்கள் என்றால், அடுத்த வாரம் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும். பிரச்சினையை பேசி பேசி பெரிதாகி விட்டால், எதிர்காலத்தில் நீங்கள் தான் கஷ்டப்படுவீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! இந்தவாரம் அவ்வளவு தான். பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டும். தினம் தோறும் மகாலட்சுமியை நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் நன்மையை நடக்கும்.

கும்பம்:
Aquarius zodiac sign
முன்கோபம் இருந்தாலும், வெள்ளை மனம் கொண்ட கும்ப ராசி காரர்களுக்கு, இந்த வாரம் பொறுமையோடு செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணம் இந்த வாரம் வந்தால், ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். முடிவை எடுத்துவிட்டு, பின்பு வருத்தப்படுவது ப்ரயோஜனம் கிடையாது. செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சேமிப்புதான் வாழ்க்கையின் எதிர்கால பிரச்சனையை தீர்க்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்துபோகும். மன அமைதிக்காக தினம் தோறும் தியானம் செய்வது மிகவும் நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
எந்த பிரச்சனை வந்தாலும், தைரியமாக சமாளித்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லத்தான் வேண்டும். உங்களது கடமையை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்! பலனை எதிர்பார்க்காதீர்கள். சம்பள உயர்வை பற்றி யோசிக்கவே யோசிக்காதீர்கள். வேலை போய்விட்டால், புதிய வேலை கிடைப்பது, இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் கஷ்டம். வீட்டில் சந்தோஷம் இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாக்குவாதம் வந்தாலும், நீங்கள் விட்டுக் கொடுத்து சென்றால், குறைந்து போக மாட்டீர்கள், என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பொறுமை அவசியம் தேவை. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.