இந்த வார ராசிபலன் 17-08-2020 முதல் 23-08-2010 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும், இந்த வாரம் தைரியத்தோடு தொடங்கலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. பயமில்லாமல் புதிய முதலீடு செய்யலாம். அலுவலகத்தில் இது நாள் வரை இருந்து வந்த பிரச்சனைகள் கூட இந்த வாரம் நல்ல முடிவுக்கு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது. வீட்டில் சுபகாரிய பேச்சுக்களை தாராளமாக தொடங்கலாம். வார்த்தையில் மட்டும் சற்று கவனம் தேவை. தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வராத கடன் தொகை வசூல் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது பாக்கெட்டில் பணமழை தான். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி, மனைவிக்குப் பிடித்த ஆடம்பர பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷமாக இருப்பீர்கள். புதியதாக வண்டி வாகனம் வாங்குவதாக இருந்தால் கூட இந்த வாரம் வாங்கலாம். பொருள் சேர்க்கைக்கான எல்லா அனுகூலங்களும் இருக்கின்றது. தினம் தோறும் துர்க்கை வழிபாடு நன்மையை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. முடிந்தவரை சுபகாரியப் பேச்சுகளை, அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடலாம். புதியதாக முதலீட்டை செய்ய வேண்டாம். அலுவலகத்தில் தினம்தோறும் முடிக்க வேண்டிய வேலைகளை, பெண்டிங் வைக்காமல் முடிப்பது நல்லது. வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே சென்றால், வார இறுதியில் சின்ன சின்ன பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள். தினம்தோறும் அனுமன் வழிபாடு செய்வது நல்லது.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகப்படியான நன்மைகள் வருவது போல் இருந்தாலும், பல தடைகளைத் தாண்டி வெற்றியை தொட வேண்டி இருக்கும். கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பரவாயில்லை, சமாளித்து விடுவீர்கள். பண பரிமாற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு வரும்பட்சத்தில் கணவன் மனைவி யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனத்தோடு இருக்க வேண்டும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த மனக் குழப்பத்திற்க்கு, இந்த வாரம் கட்டாயம் தீர்வு கிடைக்கப் போகின்றது. நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டில் சுப செலவுகள் ஏற்பட தான் செய்யும். தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கப்போகிறது. சம்பள உயர்வும் கட்டாயம் கிடைக்கும். உங்களது திறமை முழுமையாக வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருங்க வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வாருங்கள். இந்த வாரம் முழுவதும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் படபடப்பான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எடுத்த காரியம் வெற்றியில் முடியுமா, தோல்வியின் முடியுமா என்ற சந்தேகம் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். தைரியத்தோடு செயல்படுங்கள். துடிப்போடு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து சேரும். முடிந்தவரை அனாவசியமாக யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். பிரச்சினை என்று வந்தால் கூட அனுசரித்து செல்வது நல்லது. மன தைரியத்தோடு செயல்பட்டால் இந்த வாரம் நிச்சயம் வெற்றிதான் தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியை தரும். இருப்பினும், சுபகாரிய பேச்சுக்களை இந்த வாரம் தொடங்க வேண்டாம். அலுவலகத்தில், இதுவரை இருந்த பிரச்சனைகள் இந்த வாரம் நல்ல முடிவுக்கு வரும். சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளை ஈடுபடுத்தலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். நீண்ட தூரப் பயணத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நாலு பக்கத்திலிருந்து பணவரவு வந்து குவியும். கடன் தொல்லை தீரும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். யார் வந்து சண்டை போட்டாலும், நீங்கள் மட்டும் சண்டைக்கு போகாதீர்கள். அனாவசிய பேசினால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தினந்தோறும் ஐந்து நிமிடம் சிவபெருமானை நினைத்து தியானம் செய்வது மிகவும் நல்லது.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்கு உங்களுக்கு சாதகமாக முடிவு வரும். எதிர்பாராத பணவரவு காத்துக் கொண்டிருக்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. சொந்த தொழில் எப்போதும்போல் செல்லும் சுபகாரிய பேச்சை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். யாரை நம்பியும் உங்களது பொருட்களை ஒப்படைக்க வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை எதிர்த்து பேசவே கூடாது. நீங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும் அந்த உழைப்புக்கு பாராட்டு கிடைக்காது. சம்பளமும் கிடைக்காது. கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவாரம் சூழ்நிலை சரியாகிவிடும். வீட்டில் சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணியாமல் செல்லவேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தினம் தோறும் முருகப் பெருமானை நினைத்து மனதார வழிபாடு செய்தால் நன்மை உண்டு.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பல நாள் பட்ட கஷ்டத்திற்கு இனி சந்தோஷம் வரும் வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் பணம் சம்பந்தப்பட்ட எல்லா வகையான பிரச்சினைகளிலும் நீங்கள் உஷாராக தான் இருக்கவேண்டும். மன தைரியத்தோடு செயல்பட்டால் நிச்சயம் வெற்றிதான். சுபகாரியப் பேச்சுக்களை இந்த வாரம் தொடங்கலாம். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவும், நிதானம் தேவை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்லுங்கள். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. வேலை புருஷ லட்சணம் என்பதை மறக்காதீர்கள். வார்த்தையில் கவனம் தேவை. நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உண்டு. வீட்டில் சுபகாரியப் பேச்சுக்களை தொடங்கலாம். எந்த வேலையை தொடங்கினாலும் சற்று கவனத்தோடு செயல்படுங்கள். அலட்சியமாக எந்த ஒரு வேலையும் செய்யாதீர்கள். தினந்தோறும் முருகர் வழிபாடு மிகவும் நல்லது.