இந்த வார ராசிபலன் 24-08-2010 முதல் 30-08-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மன தைரியத்தோடு செயல்படும் மேஷராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் இருக்கப்போகின்றது. திருமண தடை நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பிக்கும். சுபச்செலவு தேவையான பணத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழிலை விரிவு படுத்தலாம். முடிந்தவரை இந்த வாரம் பயணத்தை தடுத்துவிட வேண்டும். கட்டாயம் வெளியில் செல்ல வேண்டும் என்றால், மாஸ்க் அணியாமல் செல்லாதீர்கள். தினம்தோறும் முருகர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
துருதுருவென்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்கள், இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அனாவசியமாக பேசி, பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். வார்த்தையில் நிதானம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். கட்டாயம் கெட்டுப் போக மாட்டீர்கள். நிதி நிலைமை எப்போதும் போல இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி கொண்டு சேமித்து வைக்க பழகுங்கள். வேலையில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். சொந்தத் தொழிலில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். தினம்தோறும் அனுமன் வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்:
Gemini zodiac sign
உற்சாகத்தோடு செயல்படும் மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் தொட்டதெல்லாம் நிச்சயம் வெற்றிதான். நீங்கள் எடுக்கும் முயற்சியில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தால் கூட, அதை சமாளித்து, மன தைரியத்தோடு பிரச்சினையையும் தாண்டி, வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. துருதுரு வேலையால் அலுவலகப் பணியில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரம் என்று சொல்லலாம். எப்போதும் தீவிரமாக செயல்படும் நீங்கள், இந்த வாரம் அதி தீவிரமாக செயல்பட போகிறீர்கள். உங்களது முன்னேற்றத்தைப் பார்த்து அடுத்தவர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கத் தான் போகிறார்கள். சந்தோஷத்தில் திக்குமுக்காடி, தப்புத்தப்பாக எல்லா வேலையும் செய்து விடாதீர்கள். வெற்றி சமயத்திலும் நிதானம் அவசியம் தேவை. வெற்றி வந்து விட்டது என்று வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். பேச்சிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வரப்போகும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. மன அமைதிக்காக சிவபெருமானை நினைத்து தினமும் 5 நிமிடம் தியானம் செய்யுங்கள்.

சிம்மம்:
Leo zodiac sign
கடந்த சில நாட்களாக கஷ்டப்பட்டு வந்த உங்களுக்கு, இந்த வாரம் நிம்மதி கிடைக்கப் போகின்றது. கடன் பிரச்சினை தீரும். சொந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் நிம்மதியான சூழல் அமையும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அனாவசியமாக தேவையில்லாத பிரச்சினைகளுக்கெல்லாம் இந்த வாரம் ஒரு முடிவு கட்டி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்கவேண்டும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
திறமையாக செயல்படும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்காது. வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காது. இருப்பினும் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையோடு காத்திருங்கள், அடுத்த வாரம் கட்டாயம் நல்ல செய்தி செவிகளுக்கு எட்டும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். தினம் தோறும் அம்மன் வழிபாடு மிகவும் நல்லது.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
சுறுசுறுப்பாக செயல்படும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களை ஊக்குவிக்கும் வகையில், உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுடைய திறமைகளை பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். இது உங்களுக்கு அதிகப்படியான உற்சாகத்தை தேடித்தரும். மகிழ்ச்சியான சூழல், நல்ல மாற்றத்தை தந்து, நல்ல முன்னேற்றத்தையும் தரப்போகிறது. நிதி நிலைமைக்கு பற்றாக்குறையே வராது. கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வதும் நல்லது. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தினம்தோறும் சூரியநமஸ்காரம் செய்வது நன்மையை தேடித்தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் விருச்சிக ராசிக்காரர்கள், இந்த வாரம் சற்று உஷாராக இருக்க வேண்டியது அவசியம் தான். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். முக்கியமான ஆவணங்களை யாரை நம்பியும் கொடுக்க வேண்டாம். அலுவலகத்தில் நண்பர்களைக் கூட நம்பி முக்கியமான காரியங்களை ஒப்படைக்காதீர்கள். குடும்ப விஷயத்தை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பொறுமையாக இருக்க வேண்டும். சண்டை வந்தாலும் மௌனத்தை மட்டும் பதிலாக வையுங்கள். ஸ்ரீராம ஜெயத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

தனுசு
Dhanusu Rasi
பேச்சில் திறமைசாலிகளாக இருக்கும் நீங்கள், இந்த வாரம் வார்த்தையில் கவனம் கொள்ள வேண்டும். மற்றபடி வீட்டில் சுப காரிய தடைகள் நீங்கும். வருமானத்தில் ஏற்றம் இருக்கும். சொந்த தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் விலகும். மன தைரியம் அதிகரிக்கும். துடிப்போடு செயல்படுவீர்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டாதீர்கள். விநாயகர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மன உறுதியோடு செயல்படும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். செலவுகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். முடிந்தவரை சிக்கனமாக செலவு செய்ய பாருங்கள். தேவையற்ற விஷயங்களுக்கு கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் நல்லது. சொந்தத் தொழிலை விரிவு படுத்தலாம். அலுவலகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும். அதேசமயம் உடன் வேலை செய்பவர்களை முழுமையாக நம்பி விடாதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தினந்தோறும் மகாலட்சுமியை வேண்டிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே செல்லுங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
புதிய முயற்சிகளில் அதிகமாக ஈடுபாடு காட்டும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. பற்றாக்குறை பட்ஜெட்டில் தான் வண்டி ஓடும். கடன் வாங்காதீர்கள். சிக்கனமாக செலவு செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாஸ்க் போகாமல் வெளியே செல்ல வேண்டாம். ஹெல்மெட் அணிந்துகொண்டு வண்டி ஓட்ட வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் எடுத்து, அக்கறையுடன் நடந்து கொண்டால் பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம்தோறும் சிவன் வழிபாடு மிகவும் நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்திருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால், உங்களது வாயை கட்டுப்படுத்தினால் மட்டுமே நல்லது நடக்கும். விதண்டாவாதம் பேசினால் உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு, நீங்கள் மட்டும்தான் காரணம். வரக்கூடிய வாய்ப்புகளை பொறுமையோடு நிதானத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அனாவசியமாக வார்த்தைகளை பேசி, தட்டிக்கழித்து விட்டால் எதிர்காலத்தில் ரொம்ப கஷ்டப்படுவீர்கள். கவனத்தோடு வண்டி ஓட்ட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முருகர் வழிபாடு நன்மையை தேடித்தரும்.