ஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 01 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்

உடல்நலம் சிறப்பாக இருக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். குடும்ப பெண்கள் சிலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் பெறலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்க பெறுவார்கள். விவசாயத் தொழிலில் இருப்பவர்கள் கடன்களை அடைக்க கூடிய உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்

Rishabam Rasi

பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். அதே நேரம் தேவையற்ற செலவு களும் ஏற்படாது. உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத் தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக் குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும்.
அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
மிதுனம்

- Advertisement -

midhunam

பண வரவு சுமாராகத்தான் இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். வழக்குகளில் பிற்போக்கான சூழ்நிலையே காணப்படும். கடனை திரும்பப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.

கடகம்

- Advertisement -

Kadagam Rasi

உடையும் மனமும் உற்சாகத்துடன் இருக்கும். எதையும் சமாளிக்கும் மனோதிடம் உண்டாகும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மருத்துவ செலவு ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புது வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைக்கும் அமைப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். கலைஞர்கள் பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.தாமதித்து வந்த திருமண முயற்சிகள் வெற்றி பெரும். உத்தியோகிஸ்தர்களுக்கு அவர்கள் விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவார்கள்.

சிம்மம்

simmam

குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஒரு இருக்காது. சிலர் வீண் அலைச்சல்கள் காரணமாக உடல் நலத்தில் பிரச்சனைகள் தோன்றும். கொடுக்கல் வாங்கல்களில் பெரிய அளவு தொகைகளை ஈடுபடுதல் இருப்பது நல்லது. குடும்ப பொருளாதார நிலையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும். திருமண முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பின்பு வெற்றியடையும். மாணவர்கள் ஊக்கமுடன் கல்வி பயின்றால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கன்னி

Kanni Rasi

உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும். பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் உங்களுடன் வந்து கொண்டாடுவார்கள். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி பெரும். மாணவர்கள் தங்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஓரளவு அனுகூலமான பயன்கள் ஏற்படும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

துலாம்

Thulam Rasi

உடல்நிலை நன்றாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை உண்டாகும். தொழில், வியாபாரங்கள் மேற்கொள்வோருக்கு அவற்றை விரிவுபடுத்துகின்ற வாய்ப்புகள் உருவாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது தொய்வு ஏற்பாட்டாலும் இறுதியில் வெற்றியுண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவர். உறவினர்கள், நண்பர்களால் மதிக்கப்படுவீர்கள். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை ஏற்படும்.கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் போன்றவை கிடைக்கும்.

விருச்சிகம்

Virichigam Rasi

ஒரு சிலருக்கு உடல்நல குறைபாடு ஏற்படும். வாகனங்களில் பயணம் செய்யும் பொது எச்சரிக்கை அவசியம். தம்பதிகள் எந்த ஒரு விட்டுக் கொடுத்து செல்வதால் பெரிய பிரச்சனைகள் உண்டாகாமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரங்கள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் வரவுக்கு ஒன்றும் பங்கம் ஏற்படாது. புதிய முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பின்பே வெற்றி உண்டாகும். பெண்களுக்கு பொருள்வரவு இருக்கும். பணியிடங்களில் வீணான விவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வாரா கடன்கள் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சற்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

தனுசு

Dhanusu Rasi

பொருளாதார நிலைமை திருப்திகரமாகஇருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். சிறிய அளவில் உடல்நலன் பாதிக்கப்பட்டு சரியாகும். சிலருக்கு வெளி மாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

மகரம்

Magaram rasi

பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உடனுக்குடன் சரியாகி விடும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பணம் கடன் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

Kumbam Rasi

தேவையற்ற பயணங்களால் உடல் மனசோர்வு உண்டாகும். வீட்டில் இருப்பவர்களிடம் எந்த ஒரு விடயத்திலும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சராசரியான லாபங்களே உண்டாகும். பெண்கள் சிலருக்கு உடல்நல குறைவு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்களில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு சுப காரியங்களுக்கான பொருட்செலவு ஏற்படும். உத்தியோகிஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

மீனம்

Meenam Rasi

தேவையற்ற செலவுகள் ஏற்படாது. சிறிது சேமிக்கவும் முடியும். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும், அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.

மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -