இந்த வார ராசிபலன் 03-08-2020 முதல் 09-08-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் மன தைரியத்தோடு செயல்படப் போகிறார்கள். நிச்சயம் நீங்கள் தொட்டதெல்லாம், வெற்றி தான். விலை உயர்ந்த, ஆடம்பரமான, பொருட்களை இந்த வாரம் தாராளமாக வாங்கலாம். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். சுபகாரியப் பேச்சுக்கள் தொடங்கலாம். அலுவலகத்தில் இதுநாள் வரை இல்லாத மதிப்பும் மரியாதையும், இந்த வாரம் உயரும். சொந்த தொழில் முன்னேற்றத்தோடு செல்லும். தினம்தோறும் அம்மன் வழிபாடு சிறந்தது.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணம் கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விடாதீர்கள்‌. பின்னாடி வருத்தப்படுவீர்கள். சுபகாரிய பேச்சுக்களை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். முக்கியமான முடிவுகளை, ஒன்றுக்கு பலமுறை யோசித்து எடுக்க வேண்டும். தினம்தோறும் முருகர் வழிபாடு மனக்குழப்பத்தை தீர்க்கும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சின்ன சின்ன மன குழப்பம் ஏற்பட்டு விலகும். முடிந்தவரை கணவன் மனைவி இருவரில், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து தான் செல்லவேண்டும். அனாவசியமாக வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். முடிந்த வரை உங்களது மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும், அடுத்த வாரம் நல்ல முடிவுக்கு வரும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுடைய ஆரோக்கியத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வேலைக்கு, உணவு சாப்பிட்டு பத்திரமாக இருக்க வேண்டும். புதிய வேலைகளை இந்த வாரம் தொடங்க வேண்டாம். தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். எத்தனை பிரச்சனை வந்தாலும், உங்கள் வேலையில் இருந்து பின் வாங்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். தோல்வி ஏற்பட்டால் கூட, உடைந்து போகாமல் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் உண்டு. இந்தவாரம் போராடி வெற்றி பெறுவீர்கள். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு மனவுறுதியை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டத்தை தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. சொந்தத் தொழிலில் நீங்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கப் போகிறது. அலுவலகப் பணியில் மேலதிகாரிகள், தானாக வந்து உங்களை பாராட்டுவார்கள். சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும். ஆரோக்கியமான பொருட்களை சாப்பிடவேண்டும். வெளியூர் பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டும். தினம்தோறும் குரு வழிபாடு நன்மையை தேடித்தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்கள் கைக்கு வராது என்று நினைத்த தொகை கூட, இந்த வாரம் வசூலாகி சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆட போகிறீர்கள். உறவினர்களிடத்திலும், வேலை செய்யும் இடத்திலும், வார்த்தையை மட்டும் கவனமாக பேச வேண்டியது அவசியம். நீங்கள் பேசும் சில நல்ல வார்த்தைகள் கூட, அடுத்தவர்களுக்கு கெட்டதாக தெரிய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முடிந்த வரை அடுத்தவர்கள் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையை குறைத்துக் கொள்ளுங்கள். யாரை நம்பியும் உங்கள் குடும்ப விஷயத்தை வெளியே சொல்லி பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, சற்று இழுபறியாக இருக்கும். வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஒரு தீர்வு கிடைக்காமல் மனக்குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த வேலைக்கு கூட பாராட்டு கிடைக்காது. சொந்த தொழிலில் புதிய முதலீடு போட வேண்டாம். இந்த வார இறுதியில் எல்லா பிரச்சனைகளும் நல்ல முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையோடு தினசரி வேலையை, தொடங்குங்கள். தினம்தோறும் வீட்டிலிருந்து கிளம்பும்போது, 5 நிமிடம் சிவபெருமானை நினைத்து தியானம் செய்வது நல்லது.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று அலைச்சலான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எந்த வேலையை தொடங்கினாலும், அது பல முறை முயற்சி செய்த பின்புதான் வெற்றியை நெருங்கும். கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் நல்ல பெயர் வாங்க முடியும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளை இந்த வாரம் பேசலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். மருத்துவச் செலவு அதிகமாக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். சட்டரீதியான பிரச்சனைகளில் கவனத்தோடு செயல்படுங்கள். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பணவரவை அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் மனைவிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷப் படுத்துவார்கள். வீட்டில் அமைதி நிலவும். திருமணத்தடை விலகும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணியில், இது நாள் வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த வாரம் நல்ல முடிவுக்கு வரும். மன தைரியம் அதிகரிக்கும். தினம் தோறும் விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களே இந்த வாரம் உற்சாகத்தோடு செயல்பட்டு எடுத்த காரியத்தை வெற்றியில் முடிக்க முயற்சி செய்வீர்கள். இடையிடையே தடங்கல்கள் வந்தாலும், தகர்த்தெரிந்து முன்னேற்றப்பாதையில் செல்லப் போகிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. முடிந்தவரை யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரிடம் இருந்தும் கடனாக பணத்தை நீங்களும் வாங்க வேண்டாம். உங்களுடைய அலுவலக பணியில் கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். அனுசரித்து செல்லுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நல்லது. பிள்ளையாரை நினைச்சு மூன்று தோப்புக்கரணம் போட்டு வேலைக்கு கிளம்புங்க.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் உங்களது திறமை அனைத்தும் வெளிப்படும். அந்த அளவிற்கு நீங்கள் சுறுசுறுப்பாக, சூப்பராக வேலை செய்யப் போறீங்க! நல்ல முன்னேற்றமான வாரமாக தான் இருக்கப்போகிறது. எப்போதும் போல், உங்களது முன்கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசாமல், பொறுமையாக இருந்தால், வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றத்தை அடையலாம். தினமும் 5 நிமிடம் தியானம் செய்வது நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். புதியதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், நிதானத்தோடு உங்களது முடிவை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். இப்போது இருக்கின்ற வேலைக்கு, முழு மரியாதை கொடுத்து, முழு கவனத்தோடு வேலை செய்வது, உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. பேச்சில் அதிக கவனம் தேவை. அனாவசியமாக யாரிடமும் வார்த்தையை விட்டு விடாதீர்கள். பின்னாடி அது பெரிய பிரச்சனையாகிவிடும். மன குழப்பம் இருக்கத்தான் செய்யும். தினம்தோறும், இறைவழிபாட்டில் முழுமனதோடு ஈடுபடுவது எல்லா பிரச்சனைக்கும் நல்ல தீர்வை தேடித்தரும்.