இந்த வார ராசிபலன் 31-08-2020 முதல் 06-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலகத்தில் இதுநாள்வரை இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். ஆனால் பணிச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வார்த்தையில் கவனம் வைத்து, மரியாதையோடு பேசி அனுசரித்து சென்றால், நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. சுபகாரியப் பேச்சுக்களை இந்த வாரம் தொடங்கலாம். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம் தோறும் ஈசன் வழிபாடு நன்மையை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய வாரமாக இருக்கின்றது. தற்சமயம் இருக்கின்ற வேலையை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். இல்லாத வேலையை நினைத்து, இருக்கின்ற வேலைக்கு பிரச்சனையை வரவைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமை அவசியம் தேவை. தொழில் முன்னேற்றம் உண்டு. சுப செலவுகள் வந்துபோகும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டிய ஒரு நபரை சந்திப்பின் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் வந்தால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தினமும் விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். இருப்பினும் இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு இந்த வாரம் விமோசனம் கிடைக்கப் போகின்றது என்று சொல்லலாம்.  வேலை இல்லாமல், புதிய வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி, சந்தோஷமான சூழ்நிலை நிலவும். ஆடம்பரமான பொருட்களை வாங்க இந்த வாரம் சிறந்த வாரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்திலும், சொந்தத் தொழிலும் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். எதையுமே பொறுமையோடு கையாளுங்கள். தினம் தோறும் அனுமன் வழிபாடு மன உறுதியை அதிகரிக்கும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரத் தொடக்கத்தில் சற்று நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவும் பல முறை சிந்திக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த காரியத்திலும் ஈடுபட்டு விடாதீர்கள். மற்றபடி சொந்த தொழிலில் எந்த பிரச்சனையும் இருக்காது. வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். அப்பப்போ சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை சமாளிக்கும் பக்குவமும், உங்களிடத்தில் உள்ளது. கவலை வேண்டாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு மனநிம்மதியை ஏற்படுத்தும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வரவேற்ப்பை தரப்போகிறது. ஏனென்றால், இது நாள் வரை இருந்த கஷ்டங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விடிவு காலம் பிறக்க ஆரம்பித்துவிடும். எந்த ஒரு முயற்சியையும் தைரியமாக மேற்கொள்ளலாம். வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் இருக்கும். இவ்வளவு நாளாக அடக்கி வைத்திருந்த திறமைகளை வெளிக்காட்ட போகிறீர்கள். பாராட்டு மழையில் நனைய தான் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நலனில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சூழ்நிலையை புரிந்து கொண்டு நடக்கும் தந்திரம் உங்களிடத்தில் உள்ளதால், எதையும் சமாளித்து விடுவீர்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. சுபகாரியத் தடை விலகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்க வேண்டும் என்றால், இந்த வாரம் தொடங்கலாம். எதைத் தொட்டாலும் பிரச்சனை என்ற சூழ்நிலை மாறி, எதைத் தொட்டாலும் வெற்றி என்று சந்தோஷப்படும் தருணம் வந்துவிட்டது. ஆனால், வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க், ஹெல்மெட், அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். உடல் நலனில் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது மிகவும் நல்லது. யாரை நம்பியும், யாருக்காகவும், எதற்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். அது உங்களை பெரிய பிரச்சனையில் மாட்டிவிட்டு விடும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொட்டதெல்லாம் வெற்றிதான். எந்த ஒரு செயல்பாட்டிலும் மன தைரியத்தோடு காலை வைக்கலாம். பிரச்சினை எதுவும் வராது. தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும். இதுநாள் வரை வராமலிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும், உங்களைத் தேடி வரப்போகின்றது. சம்பள உயர்வோடு வரக்கூடிய இடமாற்றத்தை, ஏற்றுக் கொள்வதில் தவறு ஒன்றும் கிடையாது. தொழிலில் பங்குதாரர்கள், அனுசரித்துச் செல்வார்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிக்க போகிறார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சூப்பரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இதுநாள் வரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் இந்த வாரம் அவிழும். அதாவது வியாபாரத்தில், இருந்து வந்த தடைகள் விலகி, அதிகப்படியான லாபம் கிடைக்கப் போகின்றது. உங்கள் அலுவலகத்தில் இதுநாள்வரை பிரச்சனை செய்து வந்து கொண்டிருந்த மேலதிகாரி, உங்களுடைய அறிவு திறமையை புரிந்துகொண்டு, பாராட்டி அதற்கான சன்மானத்தையும் கொடுக்கப் போகிறார். அவ்வபோது, உடன் பணிபுரிபவர்களுடன் சின்ன சின்ன பிரச்சினை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் காட்டுங்கள். நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள். தேவையற்ற குழப்பங்களை தூக்கி வெளியே போட்டு விடுங்கள். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு மன உறுதியைத் தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும் வாரமாக அமைந்திருந்தாலும், எல்லா விஷயத்திலும் நீங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். யாரை நம்பியும் பணம் கொடுக்கவும் வேண்டாம். யாரிடமும் பணம் வாங்கவும் வேண்டாம். குறிப்பாக ஜாமீன் கையெழுத்து போட்டு, யாரையும் நம்பி பணத்தை வாங்கி, யாருக்கும் கொடுத்து விடாதீர்கள். கட்டாயம் உங்களை ஏமாற்றி விடுவார்கள். பொருட்கள் திருடு போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்களுடைய மரியாதை கூட போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கப் போகின்றது. சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். எல்லாவற்றையும் தாண்டி உஷார்! உஷார்! தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும், அதையெல்லாம் சமாளித்து வெற்றி வாகை சுடும் அளவிற்கு மன தைரியம் உங்களிடம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில், கடினமாக உழைத்து நல்ல பெயரை வாங்கி விடுவீர்கள். உடல் அசதி ஏற்படும். ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுடைய வாழ்க்கையை படிப்படியாக முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும். எந்தவிதமான பயமும் தேவையில்லை. சொந்த தொழில் கடன் வாங்கி விரிவுபடுத்த வேண்டும் இந்த எண்ணத்தை மட்டும் விட்டுவிடுங்கள். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் வீட்டில் தொடர்ந்து நடைபெறும். சுப விரயங்கள் தான் ஏற்படும். மனநிறைவான வாழ்க்கை கட்டாயம் உண்டு. குலதெய்வத்தை தினம் தோறும் நினைத்து குடும்பத்தோடு வழிபாடு செய்யுங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. முடிந்தவரை செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவு செய்யும் எண்ணத்தை அடியோடு விட்டுவிடுங்கள். இதுநாள்வரை அலுவலகத்தில் பிரச்சனை செய்து கொண்டு வந்திருந்த எதிரிகள் கூட, நண்பர்களாக மாறிவிடுவார்கள். கொஞ்சம் மன உறுதியானது அதிகரிக்கத்தான் போகின்றது. துணிச்சலுடன் செயல்பட்டு, வெற்றி வாகை சூடி விடுவீர்கள். படிப்பில் கொஞ்சம் அதிக கவனம் எடுத்து படிப்பது நல்லது. தினம்தோறும் அம்மன் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. சொந்த தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். இதுநாள் வரை அலுவலகத்தில் பிரச்சனை செய்து வந்த மேனேஜர், உங்களை அனுசரித்துச் செல்ல போகின்றார். மனைவிக்கு ஆடம்பரமான பொருட்களை வாங்கிக்கொடுத்து, மகிழ செய்வீர்கள். உங்களுடைய உடல் நலனில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். புதியதாக எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. துருதுருவென்று எதையாவது செய்துவிட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். பணத்தை சேமிக்க பழகுங்கள். தினந்தோறும் துர்க்கை வழிபாடு நன்மை தரும்.