இந்த வார ராசிபலன் : ஆகஸ்ட் 28 – செப்டம்பர் 3 வரை

0
128
rasi palan

மேஷம் :

Mesham

மேஷ ராசி அன்பர்களே பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மாணவ மாணவியர் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 28 பிற்பகல் முதல் , 29,30

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6,7,9

முக்கியக் குறிப்பு: 28,29,30 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளில் இறங்கவேண்டாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை

ரிஷபம்:
Rishabam

ரிஷப ராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள்.

கலைத் துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.

மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.




அதிர்ஷ்ட நாள்கள்: செப்டம்பர் 3

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 30 பின் இரவு முதல் செப்டம்பர் 2 பிற்பகல் வரை

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,5

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29 30,31, செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் வெளியில் செல்லும்போது கைப்பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். களவு போக வாய்ப்பு உள்ளது.

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்

அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

மிதுனம்:
Midhunam

மிதுன ராசி அன்பர்களுக்கு குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத் துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 29,30, செப்டம்பர் 1

சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 2 பிற்பகல் முதல் 3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,5

முக்கிய குறிப்பு: ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 2,3

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.

பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்

காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்

பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,

நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

கடகம்:
kadagam

கடக ராசி அன்பர்களுக்கு பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒருசிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டாகும். படிப்புக்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.

குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 30,31, செப்டம்பர் 1,2

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,9

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அனுசரித்து செல்லவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!

வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்

ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!

முருகா என்று ஓதுவார் முன்!

சிம்மம்:
Simmam

சிம்ம ராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் செலவுகளால் மனதில் குழப்பங்கள் ஏற்படவும், குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியாமலும் போகும். சகோதர வகையில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்து செல்லவும்.குழந்தைகளுக்காக செலவுகள் செய்யவேண்டி இருக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் சில சலுகைகளையும் பெறலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பார்கள்..

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும்.

வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 1,2,3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,7

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 30,31 ஆகிய தினங்களில் முக்கிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களையும் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

கன்னி:
Kanni

கன்னி ராசி அன்பர்களுக்கு எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

மாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 30,31, செப்டம்பர் 1,2

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,7

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 3 ஆகிய தினங்களில் கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த

ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

துலாம்:
Thulam

துலாம் ராசி அன்பர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவி இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் ஓரளவுக்குத்தான் லாபம் கிடைக்கும். போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 1,2,3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6,9

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 30,31 ஆகிய தினங்களில் முக்கிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பட்டு

பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்

எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்

எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.

விருச்சிகம்:
Viruchigam

விருச்சக ராசி அன்பர்களுக்கு பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 1,2,3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,6

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 29,30 ஆகிய தினங்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ

எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்

மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.

தனுசு:
Dhanusu

தனுசு ராசி அன்பர்களுக்கு வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வார பிற்பகுதியில் தலைவலி, கண்வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கேற்ப பண வரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வேலை அமையும்.

புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,4

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29,30, செப்டம்பர் 1,2 புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கவனத்துடன் செய்து வரவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

மகரம்:
Magaram

மகர ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.

கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.

மாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 30, செப்டம்பர் 2,3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,5,7

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28,29,31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். முக்கிய காரணங்களுக்கான பயணங்களையும் தவிர்த்துவிடவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்

தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,

மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த

வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,

உள்ளத்தி னுள்ளே உளன்.

கும்பம்:
Kumbam

கும்ப ராசி அன்பர்களுக்கு வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.

மாணவர் மாணவியர் பட்ட மேல்படிப்புக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்கான வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 1,2,3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,5

முக்கியக் குறிப்பு: 29,30 ஆகிய தேதிகளில் குடும்பம் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

மீனம்:
Meenam

மீன ராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலைமை சுமாராகத்தான் இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு சரியாகும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைக்கவேண்டாம். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.

கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.




அதிர்ஷ்ட நாள்கள்: ஆகஸ்ட் 29,30, செப்டம்பர் 3

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 28 பிற்பகல் வரை

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,7

முக்கியக் குறிப்பு: ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் அலுவலகப் பணிகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்

பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை

என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி

அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.