இந்த வார ராசிபலன் 07-12-2020 முதல் 13-12-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். பொருள் சேர்க்கைக்கான யோகம் இருக்கிறது. வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். இதனால் சுப செலவுகள் ஏற்படும். இவ்வாறாக சந்தோஷம் ஒரு படி உயரப் போகின்றது. செலவும் ஒரு படி அதிகரிக்கப் போகின்றது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பாராத நன்மை ஒன்று உங்களை தேடி வரப்போகின்றது. அது பாராட்டாகவும் இருக்கலாம். சம்பள உயர்வாகவும் இருக்கலாம். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் வந்து கொண்டே இருக்கும். செலவுகள் அதிகம் வந்தாலும், எப்படியாவது கொஞ்சம் சிக்கனப்படுத்த பாருங்கள். மாத இறுதியில் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். தினம் தோறும் மகாலட்சுமி நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது. புதிய முடிவுகளை பொறுமையாக சிந்தித்து எடுக்கலாம். யோசிக்காமல் ஏதாவது ஒரு விஷயத்தில் மூக்கை நுழைத்தால் அதன் மூலம் பின்விளைவுகள் அதிகமாக ஏற்படும். முடிந்தவரை எந்த ஒரு நல்ல காரியத்தையும் அடுத்த வாரம் தள்ளிப் போட்டு விடுங்கள். மற்றபடி அலுவலகப் பணியும் சொந்தத் தொழிலும் எப்போதும்போல செல்லும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவு சுமுகமாக முடியும். ஆனால் வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உஷாராக இருக்க வேண்டும். சொத்து வாங்குவதாக இருந்தாலும், விற்பதாக இருந்தாலும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை உஷாராக செய்யுங்கள். அரசாங்க அதிகாரிகளை எதிர்த்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எடுக்கும் சில நல்ல காரியங்களில், பல தடைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. யாராவது ஒருத்தர் உங்களுக்கு பிரச்சனை கொடுப்பதற்காகவே வருவாங்க. கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள். மற்றபடி பெரிதாக எந்த பிரச்சனையும் இந்தவாரம் இருக்காது. ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சிரித்துக் கொண்டே இருங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக தான் இருக்கின்றது. நீங்களே எதிர்பாராத நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகின்றது. அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் செய்த வேலைக்கு சரியான சமயத்தில் சரியான பாராட்டும், சரியான சன்மானமும் கிடைக்கும். விடா முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே வாருங்கள். உங்களுடைய வெற்றி படிப்படியாக முன்னேறி செல்ல போகின்றது. பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். மாஸ்க் போடாமல் ஹெல்மெட் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள். தினம் தோறும் அனுமன் வழிபாடு மன உறுதியை அதிகரிக்கும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டு மழைதான். எல்லோரும் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு அதி புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளப் போகிறீர்கள். அடுத்தவர் வேலையையும் சேர்த்து நீங்கள் செய்வீர்கள். அதுவும் குறைந்த நேரத்தில். அதாவது எறும்பு போல செயல்பட்டு எல்லோருடைய கவனத்தையும் உங்கள் பக்கம் ஈர்க்க போகிறீர்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கப் போகின்றது. தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் தொடங்கலாம். உறவினர்களில் அருமை பெருமைகளை நீங்கள் தெரிந்துகொள்ளும் சம்பவமும் உங்களுடைய வீட்டில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை யாரையும் அனாவசியமாக எதிர்த்துப் பேசாதீர்கள். வார்த்தையில் மட்டும் கவனம் தேவை. மற்றபடி அமோகமான பலன்களை இந்த வாரம் உங்களுக்கு அள்ளித் தரப் போகின்றது. குலதெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக தொடங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த காரியத்தை இந்த வாரம் தாராளமாக தொடங்கலாம். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள். அலுவலகப் பணியில் உங்களது முழு உழைப்பையும் போடுங்கள். அதற்கான நல்ல பலனும், நல்ல லாபமும் கண்டிப்பாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவிக்கு விருப்பமான பொருட்களை வாங்கித் தந்து சந்தோஷப் படுவீர்கள். குழந்தைகளின் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. சில பேருக்கும் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத நல்ல செய்தி தொலைபேசி மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ வரும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலக பணியில் உங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். உடன் உள்ள பார்ட்னரிடம் உஷாராக நடந்துகொள்ளுங்கள். கணக்கு வழக்குகளை நீங்களும் சேர்ந்து சரி பாருங்கள். அநாவசியமாக யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரிடமிருந்தும் கடன் வாங்காதீர்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வரும் சனிக்கிழமை அன்று அனுமன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக்கொள்வது நல்லது.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்திருந்த ஒவ்வொன்றும், இனி ஒவ்வொன்றாக நடக்கும். இந்த வாரம் முழுவதும் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது. எதிர்பாராத சம்பள உயர்வு, எதிர்பாராத பதவி உயர்வு, எதிர்பாராத பட்டங்கள், எல்லாம் தேடி வரும். உங்களுக்கு தலைகணம் மட்டும் பிடிக்கவே கூடாது. கொஞ்சம் தன்னடக்கத்தோடு செயல்பட்டால் வாழ்க்கையில் வேறு லெவலுக்கு சென்று விடுவீர்கள். தினம்தோறும் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் உற்சாகத்தோடு செயல்பட்டு, உற்சாகத்தோடு எல்லா வேலைகளையும் ஒரு நாள் முன்றே முடித்து வைக்கப் போகிறீர்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். சுப செலவுகள் வந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். இருப்பினும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். இந்த மாத இறுதியில் செலவை ஈடுகட்டும் அளவிற்கு, பணம் உங்களுக்கு வந்து விடும். அலுவலக பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். சொந்த தொழிலில் வாடிக்கையாளர்களின் திருப்தி அதிகரிக்கும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு மேலும் நன்மையை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் சுறுசுறுப்போடு நடந்துகொள்ளவேண்டும். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்து விடுங்கள். தூக்கம் வந்தாலும் தூக்கத்தை கலைத்து விட்டு, காலை 6 மணிக்கு முழித்து விடுங்கள். அப்போது தான் அந்த நாள் இனிய நாளாக இருக்கும். இல்லை என்றால் பல சிக்கல்கள் உங்களை தேடிவரும். விடாமுயற்சியோடு எந்த வேலையைத் தொட்டாலும், வெற்றி தான். கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டாலும், பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். தேவை இல்லாத மன குழப்பம் வந்து சந்தோஷத்திற்கு உலை வைத்துவிடும். ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. யாரிடமும் அனாவசியமான பேச்சை வைத்துக் கொள்ளாதீர்கள். வம்பு சண்டைக்கு வலித்தாலும், நீங்கள் அடங்கி போய் விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியோடு சேர்த்து முதலையும் கட்ட பாருங்கள். முடிந்தால் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செலவைக் குறைத்துக் கொண்டு, சேமிப்பை அதிகரித்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி உண்டு. பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபமான வாரமாக இருக்கப்போகின்றது. உங்களுக்கு எதிர்பாராத வகையில், எதிர்பார்த்த இடத்திலிருந்து வரக்கூடிய வருமானம் மன மகிழ்ச்சியை கொடுக்கும். புதியதாக வண்டி வாகனம் சொத்து வாங்குவதாக இருந்தால், இந்த வாரம் வாங்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சின்ன சின்ன பிரச்சினைகள் சுமுகமாக முடிந்துவிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களுடைய குழந்தையின் மூலம் உங்களுக்கு பெரிய மன மகிழ்ச்சி உண்டாக போகின்றது. தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் உங்களுடைய வீட்டில் நடக்க தொடங்கும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் எல்லாம் சுபம் தான். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்