மேஷம்:
மேஷ ராசி நண்பர்களுக்கு வருமானத்துக்குக் குறைவிருக்காது என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல்நலம் சீராகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். சிலநேரங்களில் மனதில் குழப்பமான நிலை ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தை முன்னிட்டு கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பாக்கித் தொகை வசூலாவதில் தாமதம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். நண்பர்களுடன் பொழுது போக்குவதை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனமாக ஈடுபடுவது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் இது.
அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி: 19,20,21,22 முற்பகல்,24; பரணி: 20 பிற்பகல்,21,22,23; கார்த்திகை: 18,21 பிற்பகல்,22,23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அசுவினி: 18,22 பிற்பகல்,23; பரணி: 18,19,20 முற்பகல்,24; கார்த்திகை: 19,20,21 முற்பகல்
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை
ரிஷபம்:
ரிஷபராசிக்காரர்களுக்கு பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வரும். வழக்குகளில் இழுபறியான நிலையே காணப்படுகிறது. ஒரு சிலருக்கு உடல்நலன் சிறிதளவு பாதிக்கக்கூடும். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும்.
அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். சக பணியாளர்கள் உங்கள் பணிகளுக்கு உதவுவார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்துவிடுவீர்கள். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. வருமானமும் நல்லபடியே காணப்படுகிறது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படுகிறது.
அதிர்ஷ்ட நாள்கள்:
கார்த்திகை: 18,21 பிற்பகல்,22,23,24; ரோகிணி: 18,19,20 முற்பகல்,22 பிற்பகல்,23,24;
மிருகசீரிஷம்: 18,19,20,21 முற்பகல்,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 19,20,21 முற்பகல்; ரோகிணி: 20 பிற்பகல்,21,22 முற்பகல்; மிருகசீரிஷம்: 21 பிற்பகல்,22,23
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகைஜோதிட மாமணி கிருஷ்ண துளசி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
மிதுனம்:
மிதுனராசிக்காரர்களுக்கு பணவரவுக்குக் குறைவில்லை. ஆனால், தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன்கள் தீரும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படுகிறது. சிலருக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.
வியாபாரத்தில் பற்று வரவு நல்லபடியே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
கலைத்துறையினருக்கு கடினமான முயற்சிக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் ஓரளவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிஷம்: 18,19,20,21 முற்பகல்,24; திருவாதிரை: 19,20,21,22 முற்பகல்;
புனர்பூசம்: 18,20 பிற்பகல், 21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மிருகசீரிஷம்: 21 பிற்பகல்,22,23; திருவாதிரை: 18,22 பிற்பகல்,23,24; புனர்பூசம்: 19,20 முற்பகல்,24
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
கடகம்:
கடகராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கில்லை. உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை விஷயமாகவோ அல்லது குடும்ப விஷயமாகவோ எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு இதுவரை இருந்து வந்த மந்தமான போக்கு மாறி, படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைப்பதால், குடும்ப நிர்வாகத்தில் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம்: 18,20 பிற்பகல்,21,22,23; பூசம்: 18,19,20 முற்பகல்,21 பிற்பகல்,22,23,24
ஆயில்யம்: 18,19,20,21 முற்பகல்,22 பிற்பகல்,23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 19,20 முற்பகல்,24; பூசம்: 20 பிற்பகல்,21 முற்பகல்; ஆயில்யம்: 21 பிற்பகல்,22 முற்பகல்
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமானம் திருப்திகரமாகவே இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படுகிறது. திருமண முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால்,ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
அலுவலகத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டு பெறுவதுடன், மேலதிகாரிகளின் ஆதரவையும் தங்களுக்குப் பெற்றுத் தரும். அதன் காரணமாக சில சலுகைகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் நல்லபடியே கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.
மாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால், படிப்பில் கவனம் குறையக்கூடும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. பண வரவும் திருப்தியாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மகம்: 19,20,21,22 முற்பகல்,24; பூரம்: 20 பிற்பகல்,21,22,23; உத்திரம்: 18,21 பிற்பகல்,22,23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மகம்: 18,22 பிற்பகல்,23; பூரம்: 18,19,20 முற்பகல்,24; உத்திரம்: 19,20,21 முற்பகல்
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
கன்னி:
கன்னிராசிக்காரர்களுக்கு பணவரவு ஓரளவுக்கே இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். திருமண முயற்சிகளில் ஈடுபட இந்த வாரம் சாதகமாக இல்லை. பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. கோர்ட் வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் உண்டாகும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இதனால் உடலும் மனமும் சோர்வுக்கும் படபடப்புக்கும் ஆளாகக் கூடும். அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு தடைகள் உண்டாகும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் எதிர்காலத்துக்கு உதவுவதாக இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருந்தாலும் மனதில் சிறு சிறு சலனங்கள் உண்டாகும்.
வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம்: 18,21 பிற்பகல்,22,23,24; ஹஸ்தம்: 18,19,20 முற்பகல்,22 பிற்பகல்,23,24;
சித்திரை: 18,19,20,21 முற்பகல்,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திரம்: 19,20,21 முற்பகல்; ஹஸ்தம்: 20 பிற்பகல்,21,22 முற்பகல்; சித்திரை: 21 பிற்பகல்,22,23
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
துலாம்:
துலாம்ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான வாரம். சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வேறு வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படுகிறது. உங்களுக்கான வேலைகளைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், புதிய முதலீடு செய்வதற்கும், பழைய கடன்களைத் தீர்ப்பதற்கும் முடியும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்தபடி இருக்காது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். இதனால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதுமான பண வரவு இருக்கும் என்பதால், மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை: 18,19,20,21 முற்பகல்,24; சுவாதி: 19,20,21,22 முற்பகல்;
விசாகம்: 18,20 பிற்பகல், 21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
சித்திரை: 21 பிற்பகல்,22,23; சுவாதி: 18,22 பிற்பகல்,23,24; விசாகம்: 19,20 முற்பகல்,24
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
விருச்சிகம்:
விருச்சகராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உதவியும் உற்சாகமும் ஏற்படும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோர்ட் வழக்குகளில் சாதகமான நிலையே காணப்படுகிறது. தாயின் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.
இதுவரை அலுவலகத்தில் இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவு உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வரவேண்டிய பாக்கிப் பணத்தை போராடித்தான் வசூலிக்கவேண்டி வரும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகள் கிடைப்பதற்கு கடினமாக முயற்சி செய்யவேண்டி இருக்கும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம்: 18,20 பிற்பகல்,21,22,23; அனுஷம்: 18,19,20 முற்பகல்,21 பிற்பகல்,22,23,24
கேட்டை: 18,19,20,21 முற்பகல்,22 பிற்பகல்,23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
விசாகம்: 19,20 முற்பகல்,24; அனுஷம்: 20 பிற்பகல்,21 முற்பகல்; கேட்டை: 21 பிற்பகல்,22 முற்பகல்
வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.
தனுசு:
தனுசுராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறி, பணவரவு அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வரும். கோர்ட் வழக்குகளில் நல்ல திருப்புமுனை உண்டாகும். குடும்பச்சூழ்நிலை மகிழ்ச்சியாகக் காணப்படும். உறவினர்கள் வருகையால் வீடு உற்சாகமாக இருக்கும்.
அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பணிச் சுமை அதிகரித்தாலும் சலுகைகளும் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வேலையாட்களால் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
மாணவ மாணவியர்க்கு மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டாலும், அவற்றை ஒதுக்கித் தள்ளி, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை கூடுதலாகும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம்: 19,20,21,22 முற்பகல்,24; பூராடம்: 20 பிற்பகல்,21,22,23: உத்திராடம்: 18,21 பிற்பகல்,22,23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மூலம்: 18,22 பிற்பகல்,23; பூராடம்: 18,19,20 முற்பகல்,24; உத்திராடம்: 19,20,21 முற்பகல்
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
மகரம்:
மகரராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். உறவினர், நண்பர்களால் உதவியும் உற்சாகும் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களும் அதனால் உடல் அசதியும் உண்டாகும்.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் வேலையில் இட மாற்றம் ஏற்படவும், அதன் காரணமாக தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இல்லை. அதே நேரம் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் தாமதம் செய்யக்கூடாது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம்: 18,21 பிற்பகல்,22,23,24; திருவோணம்: 18,19,20 முற்பகல்,22 பிற்பகல்,23,24;
அவிட்டம்: 18,19,20,21 முற்பகல்,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 19,20,21 முற்பகல்; திருவோணம்: 20 பிற்பகல்,21,22 முற்பகல்; அவிட்டம்: 21 பிற்பகல்,22,23
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜைறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
கும்பம்:
கும்பராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும் என்பதால் மனதில் சலனம் உண்டாகும். மூன்றாவது நபரின் தலையீட்டால் கணவன் – மனைவி இடையில் பிரச்னைகள் தோன்றக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், படபடப்பாகக் காணப்படுவீர்கள். அடிக்கடி கோபவசப்படுவீர்கள் என்பதால், அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்.
வியாபாரத்தில் விற்பனை நல்லபடியே காணப்படுவதுடன், லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். சக கலைஞர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனச் சோர்வு ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அறிவுரை உங்கள் சோர்வை அகற்றும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரமாகவே இருக்கும். விருந்தினர் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம்: 18,19,20,21 முற்பகல்,24; சதயம்: 19,20,21,22 முற்பகல்;
பூரட்டாதி: 18,20 பிற்பகல், 21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 21 பிற்பகல்,22,23; சதயம்: 18,22 பிற்பகல்,23,24; பூரட்டாதி: 19,20 முற்பகல்,24
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்
மீனம்:
மீனராசிக்காரர்களுக்கு பணவரவு நல்லபடியே நீடிக்கிறது. தேவையற்ற செலவுகள் இல்லை என்பதால் சிறிதளவு சேமிப்புக்கவும் முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படுகிறது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும்.
அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை இப்போது எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.
கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணவரவும் கணிசமாக அதிகரிக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் சந்தோஷமான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படுகிறது.
அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி: 18,20 பிற்பகல்,21,22,23; உத்திரட்டாதி: 18,19,20 முற்பகல்,21 பிற்பகல்,22,23,24
ரேவதி: 18,19,20,21 முற்பகல்,22 பிற்பகல்,23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 19,20 முற்பகல்,24; உத்திரட்டாதி: 20 பிற்பகல்,21 முற்பகல்; ரேவதி: 21 பிற்பகல்,22 முற்பகல்
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.